பி. குனிகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. குனிகிருஷ்ணன்
பிறப்பு30 மே 1961 (1961-05-30) (அகவை 62)[1]
பையனூர், கண்ணூர், கேரளம்
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி
பணிஅறிவியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்போது
Notes
மேனாள் இயக்குநர், URSC,
மேநாள் இயக்குநர், SDSC-SHAR
மேநாள் திட்ட இயக்குநர், PSLV

பி. குனிகிருஷ்ணன் (பிறப்பு: 30 மே 1961) ஓர் இந்திய விண்வெளி அறிவியலார் ஆவார். இவர் தற்போது புகழ்பெற்ற மீத்தர அறிவியலார் ஆவார். மேலும், இவர் பெங்களூருவில் உள்ள யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தார்.[2][3] இந்திய அரசு விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

குனிகிருஷ்ணன் 1961 மே 30 அன்று கேரளாவின் பய்யனூரில் ஏ. கே. பி. சிந்த பொத்துவால், பி. நாராயணி அம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[5] அவரது மனைவி கிரிஜா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (வி. எஸ். எஸ். சி) பொறியாளராக உள்ளார்..அவரது மகன்கள் நவநீத் கிருஷ்ணன், அரவிந்த் கிருஷ்ணன் ஆவர்.

குனிகிருஷ்ணன் ஒரு பயிற்சி பெற்ற இந்திய மரபுப் புல்லாங்குழல் கலைஞரும் ஆவார்.[6]

கல்வி[தொகு]

குனிகிருஷ்ணன் 1981 ஆம் ஆண்டில் பய்யனூர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் , பின்னர் 1986 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின்னணு, தகவல் தொடர்பு பொறியியலில் தொழில்நுட்ப இளவல் பட்டம் முடித்தார்.[7][3][5]

தொழில் வாழ்க்கை[தொகு]

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு 1986 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (வி. எஸ். எஸ். சி) அமைப்புகள் நம்பகத் தன்மை நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த அவர் , ஏ. எஸ். எல். வி - டி 1 முதல் பல்வேறு ஏவூர்தி பயணங்களுக்குப் பங்களித்தார்.

பிஎஸ்எல்வி - சி12, பிஎஸ்எல்சி - சி14 திட்ட இயக்குநராக பிஎஸ்எல்வி - சி15 முதல் பிஎஸ்எல்வி - சி27 வரை (2010 முதல் 2015 வரை) இணைத் திட்ட இயக்குநராகவும் ஊர்தி ஒருங்கிணைப்பு, சோதனைக்கான விஎஸ்எஸ்சி துணை இயக்குநராகவும் இருந்தார்.

திட்ட இயக்குநராக , இந்தியாவின் மதிப்புமிக்க செவ்வாய் சுற்றுகலன் திட்ட (பிஎஸ்எல்வி - சி 25 மூலம் மங்கள்யான்) உட்பட தொடர்ச்சியாக 13 வெற்றிகரமான பிஎஸ்எல்சி பயணங்களை இவரால் சாதிக்க முடிந்தது.[3]

2015 ஆம் ஆண்டில் , அவர் இந்தியாவின் விண்வெளி நிலையமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார்.[8] 2015 - 18 ஆம் ஆண்டில் இயக்குநர் என்ற முறையில் , எதிர்கால தேவையை நிறைவு செய்ய, ஆண்டுக்கு பல ஏவுதல்களை நிறைவேற்றுவதற்கான பெரிய உள்கட்டமைப்பை நிறுவியதனால் இந்திய விண்வெளி நிலையத்தை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவதில் இவர் முதன்மைப் பங்கு வகித்தார்.

இவரால் சிரீ அரிகோட்டாவில் உள்ள ' பார்வையாளர்கள் வளாகமான, 10,000 பார்வையாளர்களுக்கு செயற்கைக்கோள் ஏவுதல்களைக் காண உதவும் மையம் உருவாக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் , இசுரோவின் அனைத்து செயற்கைக்கோள்களையும் வடிவமைத்தல், மேம்படுத்தல் செயற்படுத்தலுக்கான நாட்டின் முன்னணி மையமான யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார்.[9] யுஆர்எஸ்சி இயக்குநராக , தேசிய தேவைகளுக்காக இந்தியாவின் செயற்கைக்கோள்களைச் செயற்படுத்தி , அந்தந்த வட்டணைகளில் அவை செயல்படுவதிலும் மையத்தை வழிநடத்தினார். இவரது தலைமையில் 13 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.[4]

வியன்னாவை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளியின் அமைதியான பயன்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் குழுவின் (UNCOPUOS) முழு பணிக்குழுவின் (WGW) தலைவராக இருந்தார்.[4]

இவர் இந்திய அறிவியல், பொறியியல் அமைப்புக் கழகத்தின் (ஐஎஸ்எஸ்இ) தேசியத் தலைவராக உள்ளார்.[4]

இவர் 2020, பிப்ரவரி முதல் இந்திய அரசின் விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.[4]

தகைமைகளும் விருதுகளும் [3][தொகு]

  • இசுரோ தனியர் தகுதி விருது 2010
  • இந்திய விண்வெளிப் பரப்புக் கழக. விருது, 2011
  • இசுரோ செயல்திறன் சிறப்பு விருது 2013
  • பிஎஸ்எல்வி சி - 25 / செவ்வாய் சுற்றுகலன் திட்ட 2013 ஆண்டின் குழுத் தலைவராக இசுரோ குழுச் சிறப்பு விருது
  • சுதேசி சாத்திரப் புரசுகார் விருது 2013
  • சர் சி. வி. ராமன் நினைவு விருது
  • ஐ. இ. டி. பிரபல பொறியாளர் விருது 2020[10]
  • எல்என்சிடி பல்கலைக்கழகத்தில் இருந்து முதுமுனைவர்(டாக்டர் ஆஃப் சயின்ஸ்) தகைமைப் பட்டம் 2021[11][12]
  • GITAM பல்கலைக்கழகத்தில் இருந்து முதுமுனைவர் தகைமைப் பட்டம் 2019[13]
  • ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தகைமை முதுமுனைவர் பட்டம் (JNTU) 2016[3][14]
  • 2018 ஆம் ஆண்டுக்கான இசுரோவின் சிறந்த சாதனையாளர் விருது[3]
  • மத்தியப் பிரதேச அரசின் விக்யான் பிரதிபா சம்மான் 2017[15][16]
  • இந்திய விண்வெளிப் பறப்புக் கழக விருது 2011[2]
  • தேசிய தலைவர் - இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் அமைப்புக் கழகம் - ஐ. எஸ். எஸ். இ.
  • இந்தியத் தேசிய பொறியாளர்கள் கல்விக்கழக ஆய்வுறுப்பினர் - ஐ. என். ஏ. இ
  • மின், தொடர்பியல் பொறியியல் நிறுவன ஆய்வுறுப்பினர்- IETE
  • ஆ.பி. அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினர், இந்திய-அமெரிக்க விண்வெளியின் அமைதியான பயன்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் குழுவில் (UNCOPUOS) இணைப் பணிக்குழுவின் தலைவர்[15]
  • இந்தியா - அமெரிக்க குடிமைசார் விண்வெளி கூட்டுப் பணிக்குழுவின் இணைத் தலைவர் (சி. எஸ். ஜே. டபிள்யூ. ஜி.)
  • இசுரோ - செருமனி விண்வெளிப்புல பணிக்குழுவின் இணைத் தலைவர்.
  • உறுப்பினர், பன்னாட்டு விண்வெளிப்பற்ப்புக் கல்விக்கழக (IAA)[2][17]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SREE NARAYANA CENTRAL SCHOOL - BEST CBSE SCHOOL IN KOLLAM | KERALA | INDIA". www.sncsnedungolam.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-18.
  2. 2.0 2.1 2.2 "Shri P. Kunhikrishnan". www.ursc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-02. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":3" defined multiple times with different content
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Shri P. Kunhikrishnan". www.isac.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-09-18. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":0" defined multiple times with different content
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Shri P. Kunhikrishnan". www.ursc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":2" defined multiple times with different content
  5. 5.0 5.1 Incredible Journey of Indian Space Programme - My perspective | P. Kunhikrishnan | TEDxIIMCalcutta (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-04-03 பிழை காட்டு: Invalid <ref> tag; name ":5" defined multiple times with different content
  6. "Senior Isro official ends meeting with Parliamentary Standing Committee by playing flute. Viral video". https://www.indiatoday.in/trending-news/story/senior-isro-official-ends-meeting-with-parliamentary-standing-committee-by-playing-flute-viral-video-1632583-2019-12-30. 
  7. "Payyanur College | Mathematics". www.payyanurcollege.ac.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-18.
  8. "Kunhikrishnan appointed SDSC Director". https://www.thehindu.com/news/national/tamil-nadu/kunhikrishnan-appointed-sdsc-director/article7266055.ece. 
  9. "SDSC-SHAR chief Kunhikrishnan appointed U R Rao Satellite Centre's director". https://www.business-standard.com/article/current-affairs/sdsc-shar-chief-kunhikrishnan-appointed-u-r-rao-satellite-centre-s-director-118073101394_1.html. 
  10. "Institution of Engineers(India) TN Centre bulletin - Volume-19, Number 13 dated October 2020, Page 2". https://ieitnsc.org/uploads/bulletin/october-2020.pdf. 
  11. "Shri P. Kunhikrishnan". www.ursc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
  12. Bhatt, Gaurav (2021-03-18). "The First Convocation Of The LNCT University Took Place On Tuesday 16th March 2021 | LNCT Group". LNCT Group of Colleges (LNCT) | Bhopal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
  13. "GITAM DISTINCTIONS, GITAM NEWS, Volume 2, Issue 4, 4 October - December 2019,Page 3". https://www.gitam.edu/assets/media/newsletter-oct-dec%202019.pdf. 
  14. "Honoris-causa". https://www.jntua.ac.in/honoris-causa/. 
  15. 15.0 15.1 "www.unoosa.org" (PDF).
  16. "Chouhan presents space centre director with vigyan pratibha samman". https://www.dailypioneer.com/2017/state-editions/chouhan-presents-space-centre-director-with-vigyan-pratibha-samman.html. 
  17. "iaaspace.org".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._குனிகிருஷ்ணன்&oldid=3762166" இலிருந்து மீள்விக்கப்பட்டது