பிளைத் உழவாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளைத் உழவாரன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அபூசு
இனம்:
அ. லியுகோனைக்சு
இருசொற் பெயரீடு
அபூசு லியுகோனைக்சு
(எட்வர்டு பிளைத்

பிளைத் உழவாரன் (Blyth's swift)(அபூசு லியுகோனைக்சு) என்பது சிறிய பறவை சிற்றினம். இது வீட்டு மார்ட்டின் பறவை போன்றது. எவ்வாறாயினும் இது குருவிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உழவாரன் அபோடிபார்மிசு வரிசையினைச் சார்ந்தது. இந்த குழுக்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறைகளைப் பிரதிபலிக்கும் ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியவை.

விளக்கம்[தொகு]

இந்த பறவைகள் மிகவும் குறுகிய கால்களைக் கொண்டுள்ளன. அவை செங்குத்து மேற்பரப்பில் நிற்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இதனுடைய விலங்கியல் பெயர் கிரேக்க απους, apous, அதாவது "கால் இல்லாமல்" என்பதிலிருந்து வந்தது. இவை ஒருபோதும் தரையில் தானாக முன்வந்து நிற்காது. பிளைத் உழவாரன் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆகாயத்தில் கழிக்கின்றன. தங்கள் அலகுகள் மூலம் பிடிக்கும் பூச்சிகளை உண்ணுகின்றன.

பிளைத் உழவாரன் இமயமலையின் வெளிப்புறத்திலிருந்து அசாம் மலைகள் வரையில் உள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இனம் புலம்பெயர்ந்து, இந்தியாவிலும் இலங்கையிலும் குளிர்காலத்தினைக் கழிக்கின்றன. 2011ஆம் ஆண்டு ஆய்வில் பல வகைப்பாட்டியல் வல்லுநர்கள் இந்த சிற்றினத்தை கரண்டிவால் உழவாரனிலிருந்து பிரித்துள்ளனர்.[1]

இனப்பெருக்கம்[தொகு]

இந்த உழவாரன்கள் பாறைகளில் தங்கள் கூடுகளை உருவாக்கி, 2-3 முட்டைகளை இடுகின்றன. ஒரு உழவாரன் ஆண்டுதோறும் அதே தளத்திற்குத் திரும்பும், தேவைப்படும்போது தன் கூட்டை மீண்டும் உருவாக்கும்.

பிளைத் உழவாரன் பொதுவான உழவாரனைப் போலவே இருக்கும். மேலும் இவை வெண் நிறப் பிடரியினைத் தவிரக் கருப்பு நிறத்தில் இருக்கும்.

பெயரிடல்[தொகு]

பொதுவான பெயரானது, எட்வர்ட் பிளைத் (1810-1873), எனும் இங்கிலாந்து விலங்கியல் மற்றும் வங்காளத்தின் ஆசியச் சமூக அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளரின் நினைவாக இடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Leader, P J. (2011). "Taxonomy of the Pacific Swift Apus pacificus Latham, 1802, complex". Bulletin of the British Ornithologists' Club 131: 81–93. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளைத்_உழவாரன்&oldid=3869328" இலிருந்து மீள்விக்கப்பட்டது