பிளேஸ்டேசன் 2
பிளேஸ்டேசன் 2 | |
---|---|
தயாரிப்பாளர் | சோனி கணிணிப் பொழுதுபோக்கு நிறுவனம் |
வகை | நிகழ்பட ஆட்டம் |
தலைமுறை | ஆறாம் தலைமுறை |
முதல் வெளியீடு | ஜப்பான் மார்ச் 4, 2000 வட அமெரிக்கா அக்டோபர் 26, 2000 ஐரோப்பிய ஒன்றியம் நவம்பர் 24, 2000 நியூசிலாந்து நவம்பர் 30, 2000 |
CPU | 128-bit "Emotion Engine" clocked at 294 MHz |
ஊடகம் | டிவிடி, CD |
நினைவகம் | memory card, hard drive |
உள்ளீட்டு கருவிகள் | DualShock 2 |
இணைப்பு | ஈதர்நெட்/இணக்கி adapter. |
இணையச் சேவை | Game-supplied, Central Station |
விற்பனை எண்ணிக்கை | 106.23 மில்லியன் worldwide.[1] |
முந்தைய வெளியீடு | பிளேஸ்டேசன் |
அடுத்த வெளியீடு | பிளேஸ்டேசன் 3 |
பிளேஸ்டேசன் 2 (ஜப்பானிய மொழி: プレイステーション2) சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் இயந்திரத்தின் அடுத்த தலைமுறைக்கான தயாரிப்பான பிளேஸ்டேசன் 2 நிகழ்பட ஆட்ட இயந்திரம் 1999 ஆம் ஆண்டு ஆரம்பத் தயாரிப்பில் இருந்தது. ஜப்பானில் முதன்முறையாக மார்ச் 4, 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டைத் தொடர்ந்து வட அமெரிக்காவில் அக்டோபர் 26, 2000 மற்றும் ஐரோப்பாவில் நவம்பர் 24, 2000 அன்றும் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆறாம் தலைமுறையினருக்கான நிகழ்பட ஆட்டத் தயாரிப்பான பிளேஸ்டேசன் உலக வரலாறுகளில் அதிகளவு விற்பனையான இயந்திரம் என்ற சாதனையைப் பெற்றது. மார்ச் 31, 2006 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சுமார் 120 மில்லியன் இயந்திரங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சாதனையானது சேகா நிறுவனத் தயாரிப்பான ட்ரீம்கேஸ்ட் நிகழ்பட ஆட்ட இயந்திரத்தின் விற்பனை சாதனை முறியடித்திருப்பதாக உள்ள சாதனையாகும். மேலும் ஜூலை 2006 கணக்கெடுப்பின்படி பிளேஸ்டேசன் இயந்திரம் தனது போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளான எக்ஸ் பாக்ஸ், கேம்கியூப், எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற இயந்திரங்களின் விற்பனையைக் காட்டிலும் பெரிதளவு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cumulative Production Shipments of Hardware / PlayStation®2". Sony Computer Entertainment. Archived from the original on 2012-06-09. பார்க்கப்பட்ட நாள் 2006-09-30.