எக்ஸ் பாக்ஸ் 360
![]() | |
| எக்ஸ் பாக்ஸ் 360 | |
|---|---|
| தயாரிப்பாளர் | மைக்ரோசாப்ட் |
| வகை | நிகழ்பட விளையாட்டு இயந்திரம் |
| தலைமுறை | ஏழாவது தலைமுறை |
| முதல் வெளியீடு |
|
| CPU | 3.2 GHz பி.பி.சி எக்ஸெனொன் |
| ஊடகம் | டி.வி.டி, சி.டி, (எச்.டி.டி.வி.டி) |
| நினைவகம் | உள்தாங்கி,நினைவு அட்டை |
| உள்ளீட்டு கருவிகள் | 4 (any combo of wired/wireless, max 3 wired (up to 4 wired with a USB Hub), 4 wireless) |
| இணைப்பு | 3 × USB 2.0 |
| இணையச் சேவை | எக்ஸ் பாக்ஸ் நேரடி |
| விற்பனை எண்ணிக்கை | 5 மில்லியன் |
| Backward compatibility | 300 எக்ஸ் பாக்ஸின் விளையாட்டுகள் விளையாடமுடியும் (அதற்கு எக்ஸ் பாக்ஸ் 360 மற்றும் அதன் உள்தாங்கி அவசியம்) |
| முந்தைய வெளியீடு | எக்ஸ் பாக்ஸ் |
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீட்டான ஆறாம் தலைமுறையினருக்கான எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தின் ஏழாம் தலைமுறையினருக்காக வெளியிடப்பட்ட இயந்திரமே எக்ஸ் பாக்ஸ் 360 ஆகும். எக்ஸ் பாக்ஸ் 360 ஜ.பி.எம், எ.டி.ஜ, சாம்சங், எஸ்.ஜ.எஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு முயற்சியில் வெளிவந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வியந்திரத்தைப் பற்றிய முதல் முறையான அறிவிப்பு எம்.டி.வி தொலைக்காட்சியில் மே 12, 2005 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற இயற்பியல் பொழுதுபோக்கு வெளியீட்டு விழாவில் எக்ஸ் பாக்ஸ் 360 பற்றிய முழு அறிவித்தல்களும் வெளியிடப்பட்டது. எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரமே உலகின் மூன்று கண்டங்களில் ஒரே சமயத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஏழாம் தலைமுறைக்குரிய இயந்திரமாகும். மேலும் இவ்வியந்திரத்திற்குப்போட்டியாக சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் 3 மற்றும் நின்டென்டோ நிறுவனத்தின் விய் போன்ற ஏழாம் தலைமுறை இயந்திரங்களின் வெளியீட்டுகளின் விற்பனைகளில் முன்னேற்றமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பெற்றிருக்கின்றது எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரம். மேலும் எச்.டி கண்டுபிடிப்புகளின் மூலமும் இவ்வியந்திரத்தில் சிறப்பான முறையில் விளையாடமுடியும் என்ற சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Radd, David (August 16, 2005). "Xbox 360 Manufacturers Revealed". Bloomberg Businessweek. Archived from the original on August 17, 2010. Retrieved August 19, 2010.
- ↑ Ashcraft, Brian (நவம்பர் 19, 2010). "Report: Foxconn Denies Protest Over Pay". Kotaku Australia. Archived from the original on ஆகத்து 20, 2012. Retrieved அக்டோபர் 23, 2011.
- ↑ Spencer, Phil (ஏப்ரல் 20, 2016). "Achievement Unlocked: 10 Years – Thank You, Xbox 360". Xbox Wire. Archived from the original on பெப்ரவரி 16, 2017. Retrieved சனவரி 22, 2017.

