பிளான்போர்டு எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளான்போர்டு எலி
புதைப்படிவ காலம்:Recent
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: முரிடே
பேரினம்: மட்ரோமிசு
சோடி, 1941
இனம்: ம. பிளான்போர்டி
இருசொற் பெயரீடு
மட்ரோமிசு பிளான்போர்டி
(தாமசு, 1881)
வேறு பெயர்கள்

கிரிம்னோமைசு பிளான்போர்டி (தாமசு, 1881)
மசு பிளான்போர்டி தாமசு, 1881
ரேட்டசு பிளான்போர்டி (தாமசு, 1881)

பிளான்போர்டு எலி (Blanford's rat)(Madromys blanfordi) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் பாலூட்டி சிற்றினமாகும். இது மட்ரோமிசு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும். சிங்கள மொழியில் வாலிக வெள்ளை வன மீயா (වලිග සුදු වන මීයා-வெள்ளை வால் மர எலி என்று பொருள்படும்) என அறியப்படுகிறது. இது இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் (சத்கிரா மாவட்டத்தில்) முழுவதும் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

தலை மற்றும் உடல் நீளம் 14-15 செ.மீ. வரையிலும்; வாலின் நீளம் 19 செ.மீ. வரையிலும் இருக்கும். முதுகு சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும், கருமையாகவும், பக்கவாட்டில் வெளிறியும் காணப்படும். வெள்ளை நிற அடிப்பகுதியினைக் கொண்டது. முதிர்ச்சியடைந்த எலிகளின் பாதங்கள் வெண்மையாகவும், இளம் எலிகளில் பழுப்பு நிறமாகவும் இருக்கும். வாலில் மூன்றில் இரண்டு பங்கு அடிப்பகுதியிலிருந்து பழுப்பு நிறத்திலும் பின்னர் நீண்ட அடர்த்தியான வெள்ளை உரோமங்களால் மூடப்பட்டுக் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளான்போர்டு_எலி&oldid=3744387" இருந்து மீள்விக்கப்பட்டது