உள்ளடக்கத்துக்குச் செல்

பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள் அல்லது கிரீமிலேயர் (Creamy Layer in OBC) என்பது இந்தியாவில் கல்வி மற்றும் செல்வ வளம் மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். தற்போதைக்கு எட்டு லட்சம் ஆண்டு வருமானத்திற்கு மேலுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய அரசாங்கத்தின் கல்வி மற்றும் இதர தொழில்முறை சலுகைகளைப் பெறத் தகுதி பெறமாட்டார்.[1]

"பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதாரச் சமூகவாய்ப்பு பெற்றவர்கள்" அல்லது பசையடுக்கு என்ற சொல் சதானந்தன் கமிஷனால் 1971 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சதானந்தன் கமிஷன் மேல் குறிப்பிட்ட பிரிவில் வரும் மக்களுக்கு இடஒத்துக்கீடு வழங்கக்கூடாது எனப் பரிந்துரை செய்தது.

மத்திய வகைப்பாடு[தொகு]

நடுவண் நீதிமன்றம் செப்டெம்பர் 3, 1993 ஆம் ஆண்டு வெளியிட்ட குறிப்பின் படி அரசியலமைப்பு செயலர்களான ஜனாதிபதி, உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் பதவி வகிப்பவர்கள், படைப்பிரிவுகளில் கர்ணல் மற்றும் அதற்கு மேல் பதவி வகிப்பார்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது என அறிவித்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 8 இலட்சம் ரூபாய்க்கு மேல் குடும்பத்தின் ஆண்டு வருமானம் உடையவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள் பிரிவின் கீழ் வகைபடுத்தப்படுகின்றனர்.[2][3]. முன்னதாக 2004 ஆம் ஆண்டு வரை 4.5 லட்சமாக இருந்த உச்சவரம்பு, 2013 ஆம் ஆண்டு 6 லட்சமாகவும், 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இந்த வருமானத்தில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டாது.[4]

மாநில வகைப்பாடு[தொகு]

மாநில அரசுகள் தனது கட்டுப்பாட்டிலுள்ள இடஒதுக்கீட்டில் வெவ்வேறு வகைப்பாட்டில் கிரிமிலேயரைப் பயன்படுத்துகின்றனர். கேரளா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆண்டு வருமானம் எட்டு லட்சம் என்ற உச்ச வரம்பு நடைமுறையில் உள்ளது.[5] தமிழக அரசுத் துறைகளில் கிரிமிலேயர் முறை பயன்படுத்துவதில்லை.[6]

எதிர்ப்பும் ஆதரவும்[தொகு]

அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் அதிமுக, திமுக, மதிமுக, ஜனதா தளம், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கிரிமிலேயர் முறையை வெளிப்படையாக எதிர்க்கின்றனர்.[7] வேலைவாய்ப்பில் கிரிமிலேயர் வேண்டும் கல்வியில் வேண்டாம் என சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆதரிக்கின்றன.[8][9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "OBC Reservation Update". iitb.ac.in. பார்க்கப்பட்ட நாள் 10 January 2019.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2015-05-07.
  3. http://www.indiatimes.com/news/india/government-raises-obc-creamy-layer-income-limit-to-rs-6-lakh-78220.html
  4. Srivastava, Sharad Kumar [UnderSecretary to the Govt. of India] (2013-05-27). Subject: Revision of the income criteria to exclude socially advanced persons/sections (Creamy layer) from the purview of registration for Other Backward Classes (OBCs)-reg (Office Memorandum No. 36033/1/2013-Estt. [Res.]). New Delhi, IND: Ministry of Personnel, Public Grievances & Pensions, Department of Personnel and Training.
  5. "Income limit of creamy layer of OBCs raised from to Rs 8 L". business-standard. https://www.business-standard.com/article/pti-stories/income-limit-of-creamy-layer-of-obcs-raised-from-to-rs-8-l-118040401381_1.html. பார்த்த நாள்: 10 January 2019. 
  6. "‘TN not to exclude creamy layer in reservation’". இந்து பிஸ்னஸ். https://www.thehindubusinessline.com/economy/policy/%E2%80%98TN-not-to-exclude-creamy-layer-in-reservation%E2%80%99/article20322758.ece. பார்த்த நாள்: 10 January 2019. 
  7. "மதிமுக முப்பெரும் விழா தீர்மானங்கள்: ‘திமுக தலைமையில் அரசியல் கடமைகளை செய்வோம்’". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://tamil.indianexpress.com/tamilnadu/mdmk-erode-conference-resolutions/. பார்த்த நாள்: 10 January 2019. 
  8. "CPI-M's 3 principles for OBC reservations". ரீடிஃப். https://www.rediff.com/news/2006/jun/10cpi.htm. பார்த்த நாள்: 10 January 2019. 
  9. "Implement quota immediately: Left parties". நியூஸ்18. https://www.news18.com/news/politics/left-reax-2-287019.html. பார்த்த நாள்: 10 January 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]