பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்

ஆள்கூறுகள்: 28°21′49.96″N 75°35′13.26″E / 28.3638778°N 75.5870167°E / 28.3638778; 75.5870167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்(பிட்சு), பிலானி
Birla Institute of Technology & Science, (BITS),Pilani
குறிக்கோளுரைज्ञानं परम् बलं
gyanam paramam balam

"அறிவே மிக உயர்ந்த வல்லமை"
வகைதனியார்
உருவாக்கம்1929. நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக 1964
வேந்தர்குமார் மங்கலம் பிர்லா
துணை வேந்தர்எல் கே மகேசுவரி
நிருவாகப் பணியாளர்
593[1][2]
பட்ட மாணவர்கள்1970 ஆண்டுச் சேர்க்கை[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்216 ஆண்டுச் சேர்க்கை [3]
அமைவிடம்
சேர்ப்புபொபச[4], WACE, பமாகு[5] NAAC[6], இமஅ[7], இபச[8]
இணையதளம்பிட்சு-பிலானி, பிலானி வளாகம்,
கோவா வளாகம்
ஐதராபாத் வளாகம்
துபாய் வளாகம்
படிமம்:மூலக்கூறு (அறிவியல்), தாமரை(கலைத்துறை), விறிசு (தொழில்நுட்பம்)

பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், (Birla Institute of Technology & Science) (பரவலாக பிட்சு பிலானிஎன அறியப்படுவது) இந்தியாவின் பழமையான மற்றும் முதன்மையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தகுதிநிலை பெற்றுள்ள பிட்சு,பிலானி உலகளவில் சிறந்த கல்விக்கூடமாக புகழ்பெற்றுள்ளது. இராசத்தான் மாநில சுன்சுனூ மாவட்டத்தின் பிலானி நகரத்தில் துவங்கப்பட்ட இக்கழகம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் இந்தியாவில் கோவா, ஐதராபாத் ஆகிய இடங்களிலும் வளாகங்கள் துவங்கியுள்ளது. தவிர, பெங்களூருவில் ஓர் விரிவு மையமும் உள்ளது. இக்கழகம் நெகிழ்வான கல்வித்திட்டத்திற்கும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்சேர்க்கை நடத்துவதற்கும் புகழ் பெற்றது.[9] தனியார்த்துறை கல்விக்கூடமான இங்கு விடுதியில் சேருதல் கட்டாயமானது. [10] பிட்சு,பிலானியே வெளிநாடு ஒன்றில் வளாகம் துவங்கிய முதல் இந்தியப் பல்கலைக்கழகமாகும்.[11][12][13]

வரலாறு[தொகு]

1929ஆம் ஆண்டு கன்சியாம் தாஸ் பிர்லா அவர்களால் ஓர் இடைநிலைக் கல்லூரியாக நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் ஆட்சி புரிந்த பிரித்தானிய அரசு படைச்சேவைகளுக்காக நுட்பவியலாளர்களை பயிற்றுவிக்க இங்கு ஓர் தொழில்நுட்ப பயிற்சி மையத்தை துவங்கியது. 1946ஆம் ஆண்டு, போர் முடிந்த நிலையில், இது பிர்லா பொறியியல் கல்லூரியாக மாறியது.மின்னியல் மற்றும் இயந்திரவியல் பட்டக் கல்வித்திட்டங்கள் நடத்தப்பட்டன. [14] கல்லூரி மிகக் குறைந்த கட்டமைப்புடன் அமைக்கப்பட்டிருந்தது. பேராசிரியர் வி. இலட்சுமிநாராயண் உதவி முதல்வராக இருந்தார். 1955ஆம் ஆண்டு இலத்திரனியல்|இலத்திரனியலில் பட்ட மேற்படிப்பு துவங்கியது.[15]

பிட்சு பிலானி பல்கலைக்கழகமாக[தொகு]

Clock Tower, BITS Pilani

1964ஆம் ஆண்டு பிர்லா கலைக்கல்லூரி,பொறியல் கல்லூரி மற்றும் வணிகம்,மருந்தியல் மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஒன்றிணைந்து பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் உருவாக்கப்பட்டது. ஜ.டி.பிர்லா நிறுவனத் தலைவரானார். பேரா.வி. இலட்சுமிநாராயண் இந்தக் கல்லூரிகளை ஒன்றிணைப்பதற்கு பெரிதும் பங்காற்றினார்.[15] இந்த வளர்ச்சி காலத்தில் (முக்கியமாக 1964–1970), பிட்சு பிலானிக்கு அமெரிக்க ஃபோர்ட் அறக்கட்டளை துணை நின்றது [16]. அவர்களது உதவியால் எம்.ஐ.டி (1964-1970 காலகட்டத்தில்)பிட்சுடன் கல்வி சார்ந்த உறவு கொண்டிருந்தது. [17] எம்.ஐ.டி ஆசிரியர்கள் பிட்சின் கல்வித்திட்டத்தை வடிவமைக்கப் பெரிதும் உதவினர். [18]. பிட்சு பிலானி பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956 பகுதி 3ன்படி சூன் 18,1964 நாளிட்ட இந்திய அரசாணை எண்.F.12-23/63.U-2 படி 1964ஆம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தகுதிநிலை பெற்றது.[19]

பல்வளாக கழகமாக விரிவாக்கம்[தொகு]

தரமிக்க பொறியாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள வளர்முகத் தேவையை கருத்தில்கொண்டு பிட்சு பிலானி 1999 ஆண்டு முதல் இந்தியாவினுள்ளும் வெளிநாட்டிலும் தனது வளாகங்களை அமைத்து கல்விச்சேவையை விரிவாக்கி உள்ளது. 1999ஆம் ஆண்டு பிலானியில் மாணவர் சேர்க்கை 2500இலிலிருந்து 4000ஆக உயர்த்தப்பட்டது. புதிய வளாகங்கள் துபாய் (2000) மற்றும் கோவா (2004) நகரங்களில் ஏற்படுத்தப்பட்டது. 2006ஆம் ஆண்டு ஆந்திர அரசிடமிருந்து பிட்சு பிலானி 200 ஏக்கர் நிலத்தை புதிய வளாகம் அமைக்க கையகப்படுத்தியுள்ளது. [20][21] இங்கு புதிய வளாகம் 2008 முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. தவிர, பிட்சு ஓர் இணையப் பல்கலைக்கழகத்தையும்[22] பெங்களூருவில் ஓர் விரிவாக்க மையத்தையும் நடத்தி வருகிறது.

வேந்தரும் கல்வித்தலைவரும்[தொகு]

கல்வித் தலைவர்கள்
 • முனைவர் வி. இலட்சுமிநாராயண், 1946–1969
 • முனைவர் சி.ஆர். மித்ரா, 1969–1989
 • முனைவர் எஸ். வெங்கடேசுவரன், 1989–2006
 • முனைவர் எல்.கே. மகேசுவரி, 2006–நடப்பு

பிட்சு பிலானியின் வேந்தர்களும் துணைவேந்தர்களும் நெடுங்காலம் பணியாற்றுகின்ற பேற்றினைப் பெற்றுள்ளனர். இதன் நிறுவனர் ஜி.டி.பிர்லா துவக்கத்திலிருந்து 1983இல் அவரது மறைவு வரை வேந்தராக இருந்தார். அவரைத்தொடர்ந்து அவரது மகன் முனைவர் கிருஷ்ண குமார் பிர்லா தமது மறைவு 2008வரை வேந்தராக இருந்தார். [23] தற்போது குமார் மங்கலம் பிர்லா வேந்தராகவும் திருமதி சோபனா பார்தியா இணைவேந்தராகவும் உள்ளனர்.[24] இக்கழகத்தின் முதல் கல்வித் தலைவராக (அப்போது பிரின்சிபால்)இருந்த முனைவர் இலட்சுமிநாராயண் 1946 முதல் 1969 வரை ிந்நிலையில் பணியாற்றினார். [25] இவரைத்தொடர்ந்து பிட்சு இயக்குனர்களாக முனைவர் சி.ஆர். மித்ரா (1969–1989)[26] மற்றும் முனைவர் எஸ். வெங்கடேசுவரன்(1989–2006) பணியாற்றினர். பல வளாகங்கள் திறக்கப்பட்டதை அடுத்து பல்வளாகத்தலைவர் 'துணைவேந்தர்' என்றும் வளாகத்தலைவர் 'இயக்குனர்' என்றும் அழைக்கப்படுகின்றனர். தற்போது முனைவர் எல்.கே. மகேசுவரி துணைவேந்தராக பணியாற்றி வருகிறார்.[27]


மேற்கோள்கள்[தொகு]

 1. BITS, Pilani. "Faculty Information" இம் மூலத்தில் இருந்து 2010-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100106194450/http://discovery.bits-pilani.ac.in/statistics/2008/body_facultyinfo.html. பார்த்த நாள்: 2009-10-21. 
 2. BITS, Pilani - Dubai. "Faculty Information (Dubai Campus)" இம் மூலத்தில் இருந்து 2010-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100210134925/http://www.bitsdubai.com/faculty.html. பார்த்த நாள்: 2009-10-21. 
 3. 3.0 3.1 BITS, Pilani. "Student Information" இம் மூலத்தில் இருந்து 2010-01-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100102191110/http://discovery.bits-pilani.ac.in/statistics/2008/body_summary.html. பார்த்த நாள்: 2009-10-21. 
 4. Association of Commonwealth Universities. "Institutions affiliated to ACU". http://www.acu.ac.uk/institutions/view?id=356. பார்த்த நாள்: 2009-10-21. 
 5. Pharmacy Council of India. "Pharmacy Council of India: Recognized Institutes" இம் மூலத்தில் இருந்து 2007-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928063823/http://naacindia.org/Universities.asp?state=21. பார்த்த நாள்: 2009-10-21. 
 6. University Grants Commission, India. "Approved Deemed Universities". http://www.ugc.ac.in/inside/deemeduniv.html#rajasthan. பார்த்த நாள்: 2009-10-21. 
 7. National Assessment and Accreditation Council. "Accredited Universities" இம் மூலத்தில் இருந்து 2009-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090409234542/http://pci.nic.in/institute_cities/degree/Rajasthan.htm. பார்த்த நாள்: 2009-10-21. 
 8. Association of Indian Universities. "AIU Member Universities". http://www.aiuweb.org/Members/MembersB.asp. பார்த்த நாள்: 2009-10-28. 
 9. http://www.expressindia.com/news/fullstory.php?newsid=76135[தொடர்பிழந்த இணைப்பு]
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090405145023/http://www.bits-hyderabad.ac.in/history.php. 
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-04-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120411163412/http://www.bitsdubai.com/aboutus.html. 
 12. <http://www.business-standard.com/india/storypage.php?autono=315054
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100612195213/http://spjain.org/aboutus.asp. 
 14. BITS, Pilani. "Mechanical Engineering Group" இம் மூலத்தில் இருந்து 2007-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070619044929/http://discovery.bits-pilani.ac.in/Homepage/disciplines/mechanical/MECH/index.htm. பார்த்த நாள்: 2007-05-29. 
 15. 15.0 15.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120407040244/http://www.indiaprwire.com/pressrelease/education/20060917613.htm. 
 16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081202024231/http://www.fordfound.org/archives/item/0136/text/42. 
 17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081130073439/http://www.fordfound.org/elibrary/documents/0136/normal/low/0136norm-low.pdf. 
 18. http://web.mit.edu/india/pdf/India-Prospectus-11.30.07.pdf
 19. http://www.ugc.ac.in/inside/deemeduniv.html#rajasthan
 20. http://www.thehindubusinessline.com/bline/2006/02/18/stories/2006021803700900.htm
 21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-07-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090727195027/http://www.bits-hyderabad.ac.in/campuses.php. 
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110609024110/http://vu.bits-pilani.ac.in/. 
 23. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080914110835/http://www.pr-inside.com/bits-pilani-mourns-the-death-of-r780664.htm. 
 24. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100328082216/http://www.1888pressrelease.com/bits-pilani-moves-ahead-with-chancellor-kumar-mangalam-birla-pr-73542.html. 
 25. http://www.prlog.org/10030780-bits-pilani-rajasthan-prof-lakshminarayanan-memorial-lecture-2007-curtain-raiser.html
 26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110715111532/http://www.pr-inside.com/former-bits-pilani-director-dr-cr-r775845.htm. 
 27. http://news.education4india.com/1151/birla-institute-of-technology-and-science-gets-new-vice-chancellor/

வெளியிணைப்புகள்[தொகு]