பிலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலானி
தலேல்கார்
ஊர்
பிலானி is located in Rajasthan
பிலானி
பிலானி
பிலானி is located in இந்தியா
பிலானி
பிலானி
ஆள்கூறுகள்: 28°22′N 75°36′E / 28.37°N 75.6°E / 28.37; 75.6ஆள்கூறுகள்: 28°22′N 75°36′E / 28.37°N 75.6°E / 28.37; 75.6
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்சுன்சுனூ
மொழிகள் இராஜஸ்தானி & இந்தி
ஏற்றம்279 m (915 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்40,590
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்333031
தொலைபேசி குறியீடு91-1596

பிலானி (Pilani) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சேகாவதி பிரதேசத்தில் உள்ள சுன்சுனூ மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றத்துடன் கூடிய சிறு நகரம் ஆகும். இங்கு செயல்படும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தால், பிலானி நகரம் இந்தியா முழுவதும் அறியப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

பிலானி நகரம், ஜெய்ப்பூரிலிருந்து 208 கிலோ மீட்டர் தொலைவிலும், தில்லியிலிருந்து 193 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் சிராவா[1] மற்றும் லோகரு[2] ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பிலானி நகரத்தின் மக்கள் தொகை 29,741 ஆகும். அதில் ஆண்கள் 15,291 (51%) ஆகவும்; பெண்கள் 14,450 (49%) ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 72% ஆகும். அதில் ஆண்களின் எழுத்தறிவு 80% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 63% ஆகவும் உள்ளது. மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3422 {11.51%) ஆகவுள்ளனர்.[3] பிலானி நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 92.21%; இசுலாமியர்கள் 7.61%; மற்றவர்கள் 0.19% ஆக உள்ளனர். பிலானி நகரத்தை நிர்வகிக்க 25 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சி மன்றம் செயல்படுகிறது.

கல்வி & ஆராய்ச்சி நிலையங்கள்[தொகு]

  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் உயர் மின்னணுவியல் மத்திய ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. [5]
  • ஜி டி பிர்லா நினைவு பல்தொழில் பயிற்சிப்பள்ளியும், பி கே. பிர்லா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியும் உள்ளது.
  • பிர்லா உயர்நிலப் பள்ளி, பிர்லா பன்னாட்டுப் பள்ளி, பிர்லா பாலிகா வித்தியாபீடமும் உள்ளது.
  • பிலானியில் ஸ்ரீதர் பல்கலைக் கழகம் 2009-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

தட்ப வெப்பம்[தொகு]

பிலானியில் மார்ச் இறுதி முதல் சூன் மாதம் முடிய கடும் வெப்பமும், வறண்ட வானிலையும் காணப்படுகிறது. சூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் முற்பகுதி வரை பருவ மழை பொழிகிறது. அக்டோபர் இறுதி முதல் மார்ச் மாதம் முற்பகுதி வரையில் கடுங்குளிரும், வறண்ட வானிலையும் காணப்படுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பிலானி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 22.2
(72)
25.8
(78.4)
31.4
(88.5)
37.1
(98.8)
41.0
(105.8)
40.5
(104.9)
36.1
(97)
34.3
(93.7)
34.8
(94.6)
34.1
(93.4)
29.8
(85.6)
24.7
(76.5)
32.65
(90.77)
தாழ் சராசரி °C (°F) 6.0
(42.8)
8.6
(47.5)
13.9
(57)
19.2
(66.6)
24.6
(76.3)
27.7
(81.9)
26.6
(79.9)
25.3
(77.5)
23.5
(74.3)
17.4
(63.3)
10.5
(50.9)
6.8
(44.2)
17.51
(63.52)
பொழிவு mm (inches) 6
(0.24)
9
(0.35)
4
(0.16)
3
(0.12)
11
(0.43)
22
(0.87)
129
(5.08)
128
(5.04)
67
(2.64)
11
(0.43)
4
(0.16)
4
(0.16)
398
(15.67)
ஆதாரம்: Climate data[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலானி&oldid=2276290" இருந்து மீள்விக்கப்பட்டது