பிந்தைய பாரம்பரிய வரலாறு
பிந்தைய செவ்வியல் வரலாறு (பின்னைத் தொல்பழம் வரலாறு, பிந்தைய பண்டைய வரலாறு, அல்லது முன்-நவீன வரலாறு)[1][2][3] என்பது பண்டைய வரலாற்றுக்குப் பிந்தைய ஆனால் நவீன வரலாற்றுக்கு முந்தைய காலமாகும்.[4] கண்டத்தைப் பொறுத்து, இது பொதுவாக 200-600 ஆண்டுகளுக்கு இடையிலோ 1200-1500 ஆண்டுகளுக்கு இடையிலோ அமையும். இந்த காலத்தின் முதன்மையான செவ்வியல் நாகரீகங்களாக சீன ஆன் அரசமரபு (220 இல் முடிவடைந்தது), மேற்கத்திய உரோமப் பேரரசு (476), குப்தப் பேரரசு (550 களில்), சாசானியப் பேரரசு (651 இல்) ஆகியவை அமைகின்றன. இக்காலம் நவீன காலத்துக்கு முந்தையதாகும். இது உலக வரலாற்றின் மூன்று காலப் பிரிவுகளில் (பண்டைய, பிந்தைய செவ்வியல், நவீன) நடுவண் காலத்தை உருவாக்குகிறது. மத்திய ஆசியாவிலிருந்து படையெடுப்புகள், பெரிய உலக மதங்களின் வளர்ச்சி (கிறித்துவம், இஸ்லாமியம், புத்தமதம்), மற்றும் நாகரிகங்களுக்கு இடையில் வணிக, இராணுவ தொடர்பின் இணைப்புகள் ஆகியவை இந்தக் கால கட்டத்தின் பான்மையாக கருதப்படுகிறது.[5]
வரலாற்றின் இந்தக் கால கட்டத்தின் பெயர் ஐரோப்பாவின் பழஞ்செவ்வியல் காலத்தில் (அல்லது கிரேக்க- உரோமக் காலத்தில்) இருந்து வந்தது.[6] ஐரோப்பிய வரலாற்றில், "பிந்தைய செவ்வியல் காலம்" என்பது இடைக்காலத்தில், 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் ஆகும்.[7] ஐரோப்பாவில், மேற்கத்திய உரோமப் பேரரசின் வீழ்ச்சியால் மக்கள்தொகை குறைவு, எதிர்-நகரமயமாக்கல், எழுத்தறிவின்மை, "இருண்ட காலங்களில்" (கிழக்கு நடுத்தரைக்கடல் ஐரோப்பா தவிர) ஏற்பட்டது. ஆனால், கிழக்கு ரோம சாம்ராஜ்யம் 1204 வரை செழித்தோங்கியது) வரையறுக்கப்பட்ட கற்றலைக் கண்டது. ஆனால் படிப்படியாக நிலக்கீழாண்மை, வல்லமைவாய்ந்த கத்தோலிக்க தேவாலய நிறுவனங்களின் கீழ் புத்துயிர் பெற்றது. கலையும் கட்டிடக்கலையும் கிறித்தவக் கருப்பொருள்களால் வகைப்படுத்தப்பட்டன, ஆனால், கிறித்துவத்திற்கான புனித நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான சிலுவைப்போர்களின் பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roger Allen, D. S. Richards. Arabic Literature in the Post-Classical Period. Cambridge University Press, Apr 13, 2006. Page 8.
- ↑ Peter Stearns. World History in Documents: A Comparative Reader. Reviews NYU Press, Apr 1, 2008. Page 79.
- ↑ Classical Pasts: The Classical Traditions Of Greece And Rome edited by James I. Porte. Page 17.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-10-09. பார்க்கப்பட்ட நாள் 2017-11-13.
- ↑ The Post‐Classical Era பரணிடப்பட்டது 2014-10-31 at the வந்தவழி இயந்திரம்| Joel Hermansen
- ↑ Though, the everyday context in use is reverse (such as historians reference to Medieval China).
- ↑ The term "Middle Ages" reflects the events leading to the renaissance period was in the "middle" – between the ancient Greco-Roman and the Modern eras.
</nowiki>