உள்ளடக்கத்துக்குச் செல்

பிஜோலியா

ஆள்கூறுகள்: 25°09′50″N 75°19′30″E / 25.164°N 75.325°E / 25.164; 75.325
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஜோலியா
விந்தியவல்லி
பிஜோலியா காலன்
நகரம்
பிஜோலியா மந்தாகினி கோயில் (சிவ ஆலயம்)
பிஜோலியா மந்தாகினி கோயில் (சிவ ஆலயம்)
பிஜோலியா is located in இராசத்தான்
பிஜோலியா
பிஜோலியா
இரஜஸ்தானில் பிஜோலியாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°09′50″N 75°19′30″E / 25.164°N 75.325°E / 25.164; 75.325
நாடு இந்தியா
மாநிலம்ராஜஸ்தான்
மாவட்டம்பில்வாரா
அரசு
 • வகைஇந்திய அரசு
 • நிர்வாகம்பேரூராட்சி
ஏற்றம்
512 m (1,680 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்12,384
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஆர்ஜே-06

பிஜோலியா காலன் (Bijoliya Kalan) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும்.

நிலவியல்

[தொகு]

பிஜோலியா காலன் 25 ° 9′50 ″ வடக்கிலும் 75 ° 19′30 ″ கிழக்கிலும், சராசரியாக 512 மீ (1,680 அடி) உயரத்தில் பில்வாராவின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது பூண்டி மாவட்ட எல்லைகளுக்கு அருகில் உள்ளது. இது இரண்டு வாயில்களால் (வடக்கு மற்றும் தெற்கு) சுவர் மற்றும் உபர்மல் என்று அழைக்கப்படும் ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது.

பூண்டியிலிருந்து பூண்டி-சித்தௌராகர் சாலையில் 50 கி.மீ தூரத்திலும், தேசிய நெடுஞ்சாலை 27 இல் கோட்டாவிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், பில்வாராவிலிருந்து பில்வாரா-கோட்டா தேசிய நெடுஞ்சாலை 758 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 27 வழியாக 85 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[1] பிஜோலியாவில் 12,384 என்ற எண்ணிக்கையில் மக்கள தொகை இருந்தது. இதில் ஆண்கள் 52%, பெண்கள் 48%. நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 64% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்; 59% ஆண்கள் மற்றும் 41% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள். மக்கள் தொகையில் 15% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

பிஜோலியா பாறைக் கல்வெட்டு

[தொகு]

இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த ஒரு மன்னனான சோமேசுவரனின் காலத்தில் வெளியிடப்பட்ட விக்ரம் நாட்காட்டி 1226 (பொ.ச. 1170) க்கு முந்தைய பிஜோலியா கல்வெட்டு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது சௌகான் வம்சத்தின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றி பேசுகிறது. இதில் 30 வரிகளும் 90 வசனங்களும் உள்ளன. பல்வேறு வசனங்களில் சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் இரிஷபநாதர், 16-வது தீர்த்தங்கரர் சாந்திநாதர், 23 வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் ஆகியோரைப் பற்றி புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. [2]

இந்த இரு பாறைக் கல்வெட்டுகளில் ஒன்று ஆசியாவில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

சைன திகம்பரர் பார்சுவநாதர் சேத்திரம்

[தொகு]
பிஜோலியா சமணக் கோயில்

நகரின் தென்கிழக்கில் சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சமணக் கோவில்கள் மஹாஜன் லாலா என்பவரால் பொ.ச. 1170இல் சௌகான் மன்னர் சோமேசுவரரின் காலத்தில் கட்டப்பட்டன. [3] அவற்றில் ஒன்று கோயிலின் முழுமையான சிறிய மாதிரியைக் கொண்ட புனிதமாகக் கருதப்படுகிறது. பாறை கல்வெட்டுகள் இரண்டும் பொ.ச 1170 தேதியிடப்பட்டுள்ளன. இந்த கோயில் சமண மதத்தைச் சேர்ந்த தீர்த்தங்கர் பார்சுவநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [4]

போக்குவரத்து இணைப்புகள்

[தொகு]

விமானம் மூலம்

[தொகு]

உதயப்பூர் விமான நிலையம் பிஜோலியாவிலிருந்து 214 கி.மீ. தூரத்திலுள்ளது.

சாலை வழியாக

[தொகு]

பிஜோலியா தேசிய நெடுஞ்சாலை எண் 27இல் அமைந்துள்ளது. உதயப்பூர், சித்தோர்கார் (105 கி.மீ), கோட்டா (69 கி.மீ), இந்தோர், நீமச் ஆகிய பகுதிகளுக்கு நேரடி பேருந்துகள் கிடைக்கின்றன .

தொடர்வண்டி மூலம்

[தொகு]

உப்பர்மால் தொடர்வண்டி நிலையம் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள து. ஆனால் இதை அடைய போக்குவரத்து வசதி இல்லை. எனவே கோட்டா தொடர் வண்டி நிலையம், பூண்டி அல்லது மண்டல்கரில் ஏறலாம்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. Sudan 1989, ப. 240-242.
  3. Bakshi 2005, ப. 341.
  4. Kanakk 2020.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bijolia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜோலியா&oldid=4123941" இலிருந்து மீள்விக்கப்பட்டது