பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு
Stereo structural formula of bis(trimethylsilyl)sulfide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
டிரைமெத்தில்[(டிரைமெத்தில்சிலில்)சல்பேனைல்]சிலேன்
வேறு பெயர்கள்
அறுமெத்தில் இருசிலாதையேன்
இனங்காட்டிகள்
3385-94-2 Y
Beilstein Reference
1698358
ChemSpider 69371 Y
EC number 222-201-4
InChI
  • InChI=1S/C6H18SSi2/c1-8(2,3)7-9(4,5)6/h1-6H3 Y
    Key: RLECCBFNWDXKPK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H18SSi2/c1-8(2,3)7-9(4,5)6/h1-6H3
    Key: RLECCBFNWDXKPK-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 76920
SMILES
  • C[Si](C)(C)S[Si](C)(C)C
  • S([Si](C)(C)C)[Si](C)(C)C
UN number 1993
பண்புகள்
C6H18SSi2
வாய்ப்பாட்டு எடை 178.44 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம், விரும்பத்தகாத மணம்
அடர்த்தி 0.846 g cm−3
கொதிநிலை 163 °C (325 °F; 436 K)
நீராற்பகுப்படையும்
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் டெட்ரா ஐதரோபியூரான் போன்ற ஈதர்கள்
தொலுயீன் போன்ற அரீன்கள்
[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4586
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.85 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் "External MSDS"
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H331, H311, H301[2]
P261, P280, P301+310, P311[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு (Bis(trimethylsilyl) sulfide) ((CH3)3Si)2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மம் (tms)2S என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படுகிறது. நிறமற்றும் விரும்பத்தகாத மணமும் கொண்ட இந்நீர்மம் புரோட்டான் தரா மூலப்பொருளாக “S2−“ அயனியை வழங்கி கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுகிறது. [3]

தயாரிப்பு[தொகு]

மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் நீரற்ற சோடியம் சல்பைடைச் சேர்த்து சூடுபடுத்துவதால் பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு உருவாகிறது[4]

2 (CH3)3SiCl + Na2S → ((CH3)3Si)2S + 2 NaCl

((CH3)3Si)2S சேர்மத்தை காற்றில் படாமல் பாதுகாப்பது அவசியமாகும். ஏனெனில் இது எளிதாக நீராற்பகுப்பு அடைந்துவிடும்.

((CH3)3Si)2S + H2O → ((CH3)3Si)2O + H2S

பயன்கள்[தொகு]

உலோக ஆக்சைடுகளையும் உலோக குளோரைடுகளையும் தொடர்புடைய சல்பைடுகளாக மாற்ற ஒரு வினையூக்கியாக பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு பயன்படுத்தப்படுகிறது.[5] இந்த மாற்றத்திற்காக ஆக்சிசன் மற்றும் ஆலைடுகளுக்காக சிலிக்கான்(IV) இன் தொடர்பைப் பயன்படுத்துகிறது. ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வினை கீழே கொடுக்கப்படுகிறது:

((CH3)3Si)2S + MO → ((CH3)3Si)2O + MS

இதே தயாரிப்பு முறையில் ஆல்டிகைடுகளையும் கீட்டோன்களையும் அவற்றுடன் தொடர்புடைய தயோன்களாக மாற்றவும் பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு பயன்படுத்தப்படுகிறது.[6][7]

பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பெரிய Ag-S தொகுதி[8]

பாதுகாப்பு[தொகு]

பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு நீருடன் வினைபுரிகையில் வெப்பம் உமிழப்படுகிறது. நச்சுத்தன்மை கொண்ட ஐதரசன் சயனைடு வாயு வெளிப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. mastersearch.chemexper.com/cheminfo/servlet/org.dbcreator.MainServlet
  2. 2.0 2.1 http://www.sigmaaldrich.com/MSDS/MSDS/DisplayMSDSPage.do?country=US&language=en&productNumber=283134&brand=ALDRICH&PageToGoToURL=http%3A%2F%2Fwww.sigmaaldrich.com%2Fcatalog%2Fproduct%2Faldrich%2F283134%3Flang%3Den
  3. Matulenko, M. A. (2004). "Bis(trimethylsilyl) Sulfide". Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette), J. Wiley & Sons, New York 1: 5. doi:10.1002/047084289X. 
  4. So, J.-H.; Boudjouk, P. (1992). "Hexamethyldisilathiane". in Russell, N. G.. Inorganic Syntheses. 29. New York: Wiley. பக். 30. doi:10.1002/9780470132609.ch11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-54470-1. 
  5. Lee, S. C.; Holm, R. H., "Nonmolecular Metal Chalcogenide/Halide Solids and Their Molecular Cluster Analogues", Angewandte Chemie International Edition in English, 1990, volume 29, pages 840-856.
  6. A. Capperucci; A. Degl’Innocenti; P. Scafato; P. Spagnolo (1995). "Synthetic Applications of Bis(trimethylsilyl)sulfide: Part II. Synthesis of Aromatic and Heteroaromatic o-Azido-Thioaldehydes". Chemistry Letters 24 (2): 147. doi:10.1246/cl.1995.147. 
  7. W. M. McGregor; D. C. Sherrington (1993). "Some Recent Synthetic Routes to Thioketones and Thioaldehydes". Chemical Society Reviews 22 (3): 199–204. doi:10.1039/CS9932200199. https://archive.org/details/sim_chemical-society-great-britain-chemical-society-reviews_1993-06_22_3/page/199. 
  8. Fenske, D.; Persau, C.; Dehnen, S.; Anson, C. E. (2004). "Syntheses and Crystal Structures of the Ag-S Cluster Compounds [Ag70S20(SPh)28(dppm)10] (CF3CO2)2 and [Ag262S100(St-Bu)62(dppb)6]". Angewandte Chemie International Edition 43: 305-309. doi:10.1002/anie.200352351. பப்மெட்:14705083.