வெப்பம் உமிழ் செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப இயக்கவியலில், வெப்பம் உமிழ் செயல்முறை (Exothermic process) என்பது தன் அமைப்பில் இருந்து சூழலுக்கு ஆற்றலை வெளியேற்றும் ஒரு வேதிவினை அல்லது செயல்முறையாகும். இவ்வாறு வெளியேற்றப்படும் ஆற்றலானது பொதுவாக வெப்பமாக இருக்கும் என்றாலும், ஒளி (தீப்பிழம்பு, பொறி), மின்னாற்றல், ஒலி (ஐதரசன் எரியும்போது உண்டாகும் வெடிப்பொலி) போன்ற பிற வடிவங்களிலும் அமைந்திருக்கலாம்.

வெப்பம் உமிழ் செயல்முறைக்கு எதிரானதாக, வினையின் போது வெப்பத்தை உள்ளெ இழுத்துக் கொள்ளும் செயல்முறைகள் வெப்பம் கொள் செயல்முறை எனப்படும். இவையிரண்டும் இயற்கையாக நிகழும் வேதிவினைகளின் இரு வகைகளாகும்.

வேதிவினைகளில் வேதிப்பொருள்களின் பிணைப்புகளில் இருக்கும் ஆற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றம் பெறுகிறது. ஒரு வினையைத் தொடங்கிவைக்கத் தேவையான ஆற்றலை விட அதிக அளவில் இப்பிணைப்பில் இருந்து ஆற்றல் வெளியேறுவதால், அமைப்பில் இருந்து சூழலுக்கு இவ்வெப்பம் வெளியேற்றப் படுகிறது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

வெப்பம் உமிழ் செயல்முறைகளுக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் சிலவற்றைக் காட்டலாம்.[1]

  • கரி, நெய், விறகு, பெட்ரோலியம் போன்ற எரிபொருள்களின் எரிதல் வினை
  • நீரும் வலிமையான அமிலமும் சேர்தல்
  • நீரும் வலிமையான காரமும் சேர்தல்
  • அமிலமும் காரமும் சேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பம்_உமிழ்_செயல்முறை&oldid=2748339" இலிருந்து மீள்விக்கப்பட்டது