பிசுவா பந்து சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுவா பந்து சென்
Biswa Bandhu Sen
சட்டப்பேரவைத் தலைவர்-திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மார்ச்சு 2023
முன்னையவர்இரத்தன் சக்கரபர்த்தி
தொகுதிதர்மநகர் சட்டமன்றத் தொகுதி
துணை-சபாநாயகர்-திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
21 சூன் 2018 – 2 மார்ச்சு 2023
முன்னையவர்பபித்ரா கார்
பின்னவர்இராம் பிரசாத் பால்
தொகுதிதர்மநகர் சட்டமன்றத் தொகுதி
உறுப்பினர்-திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
தொகுதிதர்மநகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 மே 1953 (1953-05-23) (அகவை 70)
தர்மநகர், திரிபுரா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2017 - முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2017 வரை)

பிசுவா பந்து சென் (Biswa Bandhu Sen)(பிறப்பு 23 மே 1953) ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டப் பேரவையின் சபாநாயகரும் ஆவார்.[1][2] இவர் வடக்கு திரிபுரா மாவட்டத்தின் 56-தர்மநகர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு சென் இரண்டு முறை காங்கிரசு கட்சி சார்பில் வெற்றி பெற்றார். 2017-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சென், 2018 சட்டமன்றத் தேர்தலில் 7287 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நான்காவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to the Official Website Before Legislative Assembly".
  2. "Tripura speaker Rebati Mohan Das resigns citing 'personal' reasons".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுவா_பந்து_சென்&oldid=3819269" இலிருந்து மீள்விக்கப்பட்டது