பாலக் குலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலக் குலியா
தனிநபர் தகவல்
பிறப்பு9 நவம்பர் 2005 (2005-11-09) (அகவை 18)
அரியானா, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)துப்பாக்கி சுடுதல்
பதக்கத் தகவல்கள்
மகளிர் துப்பாக்கி சுடுதல்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 ஹாங்சோ 10 மீட்டர் கைத்துப்பாக்கி சுடுதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 ஹாங்சோ 10 மீட்டர் கைத்துப்பாக்கி சுடுதல் (அணி)

பாலக் குலியா (பிறப்பு 9 நவம்பர் 2005) ஹரியானாவின் ஜஜ்ஜரில் உள்ள நிமானா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இந்திய விளையாட்டு துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். இவர் 10 மீட்டர் காற்று கைத்துப்பாக்கி (ஏர் பிஸ்டல்) பிரிவில் போட்டியிடுகிறார். இவர் சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் குழுவில் இடம்பெற்று 10 மீட்டர் காற்று கைத்துப்பாக்கி பிரிவில் ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இவர் குழு போட்டியில் மற்றொரு வெள்ளி பதக்கம் வென்றார். பெண்கள் 10 மீட்டர் கைத்துப்பாக்கி போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் இரண்டையும் வென்றது, ஈசா சிங் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவர் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் பயிற்சி பெறுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள நிமனா கிராமத்தைச் சேர்ந்தவர் பாலக். 13 வயதில், பரிதாபாத் துப்பாக்கி சுடும் அரங்கில், பயிற்சியாளர் ராகேஷ் சிங்கின் கீழ், விளையாட்டை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கு முன், இவர் ஒரு பொழுதுபோக்காக இதை கற்க தொடங்கினார்.[1] இவரது தந்தை ஜோகிந்தர் சிங் ஒரு தொழிலதிபர் மற்றும் இவருக்கு இரண்டு இளைய உடன்பிறப்புகள், இரட்டையர், ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். இவரது பயிற்சிக்கு ஆதரவாக இவரது தந்தை குடும்பத்தை குருகிராமில் இருந்து பரிதாபாத்திற்கு மாற்றினார். இவரது பயிற்சியாளர் கைத்துப்பாக்கி மட்டுமே பயிற்றுவிப்பதால், இவர் கைத்துப்பாக்கி போட்டியில் பங்கேற்றார்.[1] இவர் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் பயிற்சி பெறுகிறார்.[2]

துப்பாக்கி சுடுதல்[தொகு]

2021 இல் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் இவர் 10 மீட்டர் காற்று கைத்துப்பாக்கி பிரிவில் 6வது இடத்தையும், ஜூனியர் வகுப்பில் 4வது இடத்தையும் பிடித்தார். ஆனால் கைத்துப்பாக்கி செயலிழந்ததால் இறுதிப் போட்டியைத் தவறவிட்டார்.[1] 2022 மே 11 அன்று, ஜெர்மனியின் சுஹ்லில் நடந்த ஜூனியர் உலக கோப்பையில் தங்கம் வென்றார்.[3] 2022 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற கைத்துப்பாக்கி உலக சாம்பியன் போட்டியில் காற்று கைத்துப்பாக்கி அணி போட்டியில் வெள்ளி வென்ற இந்திய பெண்கள் அணியில் இவர் இடம்பெற்றார்.[4] 2023 ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானின் பாகுவில் நடந்த உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் போட்டியில் ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்றார், ஆனால் தகுதி பெறத் தவறினார்.[5] 2023 ஜூன் மாதம், போபாலில்உள்ள மத்தியப் பிரதேச அகாடமியில் நடைபெற்ற 21வது குமார் சுரேந்திர சிங் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் கைத்துப்பாக்கி போட்டியில் பாலக் தங்கம் வென்றார்.[6]

இவர் சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் குழுவில் இடம்பெற்று 10 மீட்டர் காற்று கைத்துப்பாக்கி பிரிவில் ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார்.[7] இவர் குழு போட்டியில் மற்றொரு வெள்ளி பதக்கம் வென்றார்.[8] பெண்கள் 10 மீட்டர் கைத்துப்பாக்கி போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் இரண்டையும் வென்றது, ஈசா சிங் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Shooter Palak Gulia's journey from reluctant young shooter to Asian Games gold winner". The Indian Express (in ஆங்கிலம்). 2023-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.
  2. "Asian Games 2023: Reliance Foundation Athletes Eager to Stamp Their Seal in China". News18 (in ஆங்கிலம்). 2023-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  3. "ISSF - International Shooting Sport Federation - issf-sports.org". www.issf-sports.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.
  4. Scroll Staff (2022-10-27). "India at Shooting World C'ships: One champion, three Olympic quotas, second in medal tally". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  5. "ISSF World Championship 2023: Indian men's 10m air pistol team clinches bronze - Articles". ZEE5 (in ஆங்கிலம்). 2023-08-18. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  6. Bureau, Sports (2023-06-07). "Kumar Surendra Singh pistol championship" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/sport/palak/article66943226.ece. 
  7. Namra (2023-09-13). "Asian Games 2023: India's shooting squad analysis". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  8. Livemint (2023-09-29). "Asian Games: India's Palak bags gold, Esha Singh settles for silver in shooting". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
  9. "Shooter Palak Gulia's journey from reluctant young shooter to Asian Games gold winner". The Indian Express (in ஆங்கிலம்). 2023-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்_குலியா&oldid=3904033" இலிருந்து மீள்விக்கப்பட்டது