பல்லவர் காலத்துக்கு முந்தைய காஞ்சிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வட தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டமானது தமிழ்நாட்டில் முதலில் ஆரியமயமான பகுதியாக கருதப்படுகிறது.   பல்லவர் காலத்துக்கு முந்தைய காலத்தில், இந்தப் பகுதி சமஸ்கிருத கலாச்சாரத்தின் தெற்குப் பகுதியாக பி. டி. சீனிவாச ஐயங்கார் கருதுகிறார். அவரது இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக "காஞ்சிபுரம்" என்ற சொல்லின் சொற்பிறப்பியல் மற்றும் மற்ற ஆதாரங்களை மேற்கோளாக காட்டுகிறார். இத்தகையக் கூற்றுக்கள் இருந்தபோதிலும், காஞ்சிபுரத்தை தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் குறிப்பிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

4 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் பல்லவப் பேரரசின் தலைநகரமாக மாறியது. 7 ஆம் நூற்றாண்டில் சீனப் பயணியான சுவான்சாங் இங்கு வந்தபோது, இந்த நகரம் அதன் செல்வாக்கின் உச்சக்கட்டத்தில் இருந்தது.

சொற்பிறப்பு[தொகு]

காஞ்சிபுரம் என்ற பெயரானது சில தமிழ்ச் செய்யுள்களில் குறிப்பிடப்பட்டுள்ள "காஞ்சியூர்" என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] காஞ்சியூர் என்பது சோழ நாட்டின் ஒரு இடம் ஆகும். அதன் பொருள் "காஞ்சி மரங்களால் சூழப்பட்ட இடம்" என்பதாகும். காஞ்சியூர் பல துவக்கக் கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, அவற்றுள் ஒன்று புறநானூறு ஆகும்.

எனினும், திராவிடவியல் பேராசிரியர் டி. வி. சீனிவாச ஐயங்கார் தனது புத்தகத்தகமான தமிழர் வரலாறு முற்காலத்தில் இருந்து கி.பி 600 வரை (Tamils from the Earliest Times to 600AD) என்ற நூலில் முற்கால தமிழ்ச் செய்யுள்களில் குறிப்பிடப்பட்டுள்ள காஞ்சியூர் என்பது காஞ்சிபுரம் அல்ல, அது வேறு ஒரு நகரமே என்கிறார்.[2]

காஞ்சிபுரம் என்பது ஒரு சமஸ்கிருத சொல் அது தமிழ்ப் பெயர் அல்ல என்று சீனிவாச ஐயங்கார் கூறுகிறார். அவரது கூற்றுக்கு ஆதரவாக, காஞ்சிபுரமானது கி.மு 3ஆம்-2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத இலக்கண நூலான பதஞ்சலி போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார். மாறாக, தமிழ் இலக்கியத்தில் காஞ்சிபுரத்தைப் பற்றிய முதல் குறிப்புகள், கி.பி இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து எழுதப்பட்ட பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில் குறிப்படப்பட்டுள்ளது. இங்கு, காஞ்சி என்ற சமஸ்கிருத வடிவத்தில் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அதன் பிராகிருத வடிவமான கச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சான்றுகளின் அடிப்படையில், காஞ்சிபுரமானது சமஸ்கிருத கலாசாரத்தின் தெற்குப் புறப்பகுதியாக இருந்திருக்கலாம் என்று சீனிவாச ஐயங்கார் முடிவுசெய்கிறார்.

பண்டைய தமிழ் நாட்டின் வடக்கு எல்லை[தொகு]

பண்டைய தமிழ் நாட்டின் வடக்கு மாகாணமானது அருவா நாடு (தற்போதைய தென் ஆற்காடு மாவட்டம்) என்பதாகும். அருவாவுக்கு அப்பால் உள்ள இடங்கள் அருவாவடதலை என அழைக்கப்பட்டது. பல்லவர் காலம் வரை காஞ்சிபுரம் மாவட்டமானது தொண்டைமண்டலம்  என்று பெயரையும் கொண்டிருக்கவில்லை.

வரலாறு[தொகு]

வரலாற்றுக்கு முந்தைய காஞ்சிபுரம்[தொகு]

1863 ஆம் ஆண்டில் பல்லாவரத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய கற்கருவியை ஹென்றி ப்ரூஸ் ஃபுட் கண்டுபிடித்தார்,இது இப்பகுதியின் கற்காலத்தின் துவக்கக்காலத்தைக் காட்டுவதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.[3] தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த இரும்புக் காலத்தைச் சேர்ந்த கண்டுபிடிப்புகள் இரும்புக் கால குடியேற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன.[3] சென்னை நகரத்தின் வடமேற்கில் இருந்து காஞ்சிபுரம்வரை காணப்படும் தொல்லுயிர்ப் புதை படிவுகள் மற்றும் கல் கருவிகள் 85000 ஆண்டுகளுக்கு முற்பட்டைவையாக இருக்கும்.[4][5]

திராவிடம்[தொகு]

காஞ்சிபுரம் குறித்த பழங்காலக் குறிப்புகள் சமசுகிருத நூலான பதஞ்சலியில் உள்ளது.[2] மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் திராவிட நாடானது காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டிருந்திருக்க வேண்டும்.[6] ஒரு பாரம்பரியக் கூற்றின்படி, சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரான சாணக்கியர் திராவிடத்தைச் சேர்ந்தவர்.[6] சாணகியரின் பல்வேறு பெயர்களில் ஒன்றான திரமிளா என்பது "தமிழர்" என்பதன் சமஸ்கிருத வடிவம்.[7] காஞ்சிபுரத்தை சத்தியவரதன் என்பவன் ஆண்ட காரணத்தால் பாகவத புராணமானது இதை சத்யவரதசேத்ரம் என்று குறிப்பிடுகிறது. அதன்பிறகு, காஞ்சிபுரத்தை ஆண்ட அரசர்களான பல்லவர்களின் காலம் வரை, "சத்யுபுத்திரா" அல்லது சத்தியவரதனின் மகன் என்ற பட்டத்தைக் கொண்டிருந்தனர்.[8]

ஆகமப் பண்பாடு[தொகு]

தமிழ்நாட்டில் ஆகமப் பண்பாடு முதலில் வளர்ந்த பகுதிகளில் கஞ்சிபுரம் பகுதியும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் ஏழு புனித கோயில் நகரங்களில் காஞ்சிபுரமும் ஓன்று என கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்தைய நூற்றாண்டுகளின் சமஸ்கிருத நூல்கள் குறிப்பிடுகின்றன.[9] மௌரிய பேரரசர் அசோகரின் காலத்தில் பல புத்த மடாலயங்கள் கட்டப்பட்டன.[10] இப்பகுதியில் உள்ள பெளத்த மற்றும் சைன நினைவுச்சின்னங்கள் அந்தக் காலத்தில் இப்பகுதியில் பௌத்தம் மற்றும் சைனத்தின் இருப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சான்றாக இருக்கின்றன.[10]

குறிப்புகள்[தொகு]

  1. P. T. Srinivasa Iyengar, Pg 323
  2. 2.0 2.1 P. T. Srinivasa Iyengar, Pg 322
  3. 3.0 3.1 Muthiah, Pg 129
  4. Shanti Pappu; Yanni Gunnell; Maurice Taieb; Jean-Philippe Brugal; K. Anupama; Raman Sukumar; Kumar Akhilesh. "Excavations at the Palaeolithic Site of Attirampakkam, South India". Antiquity 77 (297). http://antiquity.ac.uk/ProjGall/pappu/pappu.html. 
  5. Sastri, Pg 44
  6. 6.0 6.1 P. T. Srinivasa Iyengar, Pg 325
  7. P. T. Srinivasa Iyengar, Pg 326
  8. P. T. Srinivasa Iyengar, Pg 327
  9. P. T. Srinivasa Iyengar, Pg 328
  10. 10.0 10.1 P. T. Srinivasa Iyengar, Pg 329

மேற்கோள்கள்[தொகு]