பல்முகட்டு மெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்முகட்டு மெய் என்பது நாக்கினால் பல்முகடு அல்லது அதன் அருகைத் தொடுவதன் மூலம் உருவாக்கப்படும் மெய்யொலிகளைக் குறிக்கும். பல்முகட்டு மெய்கள், ஆங்கில மொழியில் உள்ளதுபோல் நாக்கின் நுனியைப் பயன்படுத்தியோ, பிரெஞ்சு, [[ஸ்பானிய மொழி|ஸ்பானியம் ஆகியவற்றில் உள்ளதுபோல் நாக்கு நுனிக்குச் சற்று மேலுள்ள தட்டைப் பகுதியைப் பயன்படுத்தியோ உருவாக்க முடியும். நாக்கின் நுனி, பற்கள் அதற்கு அருகாமையைத் தொடுவதுபோல் காணப்படக்கூடும் என்பதால், நாவிளிம்பு பல்முகட்டு ஒலிப்பு பல்லொலிப்பாகப் பிழையாகக் கருதப்படுவதும் உண்டு.

அனைத்துலக ஒலியெழுத்து (IPA) முறையில் பல்முகட்டு மெய்களுக்குத் தனிக் குறியீடுகள் கிடையா. ஆங்கிலத்தில் உள்ளது போன்ற அண்ண-பல்முகட்டொலி sh, அல்லது நாவளை ஒலி போன்ற அண்ணவாக்கம் இல்லாத, எல்லா உச்சியிட (coronal) ஒலிப்புக்களுக்கும் ஒரே குறியீடே பயன்படுத்தப்படுகின்றது.

அனைத்துலக ஒலியெழுத்து முறையில் காணப்படும் பல்முகட்டு / உச்சியிட (alveolar/coronal) மெய்களாவன:

IPA விளக்கம் எடுத்துக்காட்டு
மொழி Orthography IPA பொருள்
Xsampa-n.png பல்முகட்டு மூக்கொலி ஆங்கிலம் run [ɹʷɐn] ஓடு
Xsampa-t.png ஒலிப்பற்ற பல்முகட்டு வெடிப்பொலி ஆங்கிலம் tap [tʰæp] தட்டு
Xsampa-d.png ஒலிப்புடைப் பல்முகட்டு வெடிப்பொலி ஆங்கிலம் debt [dɛt] கடன்
Xsampa-s.png ஒலிப்பற்ற பல்முகட்டு உரசொலி ஆங்கிலம் suit [sut] பொருத்தம்
Xsampa-z.png ஒலிப்புடைப் பல்முகட்டு உரசொலி ஆங்கிலம் zoo [zu] விலங்கினக் காட்சியகம்
ʦ ஒலிப்பற்ற பல்முகட்டு வெடிப்புரசொலி ஜெர்மன் zeit [ʦaɪt] நேரம்
ʣ ஒலிப்பிடைப் பல்முகட்டு வெடிப்புரசொலி இத்தாலியம் zucchero [ˈʣukkero] சர்க்கரை
Xsampa-K2.png ஒலிப்பற்ற பல்முகட்டுப் பக்க உரசொலி வெல்ஷ் Llwyd [ɬʊɪd] ஒரு பெயர்
Xsampa-Kslash.png ஒலிப்புடைப் பல்முகட்டுப் பக்க உரசொலி சூலு dlala [ˈɮálà] விளையாடல்
Xsampa-rslash2.png பல்முகட்டு உயிர்ப்போலி ஆங்கிலம் red [ɹʷɛd] சிவப்பு
Xsampa-l.png பல்முகட்டுப் பக்க உயிர்ப்போலி ஆங்கிலம் loop [lup] தடம்
Xsampa-4.png பல்முகட்டு வருடொலி ஸ்பானியம் pero [peɾo] ஆனால்
Xsampa-lslash.png பல்முகட்டுப் பக்க வருடொலி வெண்டா [vuɺa] திறத்தல்
Xsampa-r.png பல்முகட்டு உருட்டொலி ஸ்பானியம் perro [pero] நாய்
IPA alveolar ejective.png பல்முகட்டுப் புறவுந்தொலி ஜோர்ஜியன் [ia] துலிப்
IPA alveolar ejective fricative.png பல்முகட்டுப் புறவுந்து உரசொலி அம்ஹாரிக் [ɛɡa] grace
Xsampa-d lessthan.png ஒலிப்புடைப் பல்முகட்டு வெடிப்பொலி வியட்நாமியம் đã [ɗɐː] இறந்தகாலம் காட்டும் சொல்
Xsampa-doublebarslash.png பக்கப் பல்முகட்டுக் கிளிக்கு நாமா ǁî [kǁĩĩ] discussed
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்முகட்டு_மெய்&oldid=1443416" இருந்து மீள்விக்கப்பட்டது