பல்பீர் சிங் மூத்தவர்
மெல்போர்ன் ஒலிம்பிக் வெற்றி விழா | ||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | பல்பீர் சிங் தோசன்ஜ் | |||||||||||||||||||||||||
சுட்டுப் பெயர்(கள்) | பல்பீர் சிங் மூத்தவர் | |||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியன் | |||||||||||||||||||||||||
பிறப்பு | 10 அக்டோபர் 1924[1] ஹரிப்பூர் கலசா, பஞ்சாப் | |||||||||||||||||||||||||
வசிப்பிடம் | பர்னபை, கனடா சண்டிகர், இந்தியா | |||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||
விளையாட்டு | வளைதடிப் பந்தாட்டம் | |||||||||||||||||||||||||
அணி | இந்தியா (சர்வதேச அணி) பஞ்சாப் மாநிலம் (தேசிய அணி) பஞ்சாப் காவல் துறை (தேசிய அணி) பஞ்சாப் பல்கலைக்கழகம் (தேசிய அணி ) | |||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||
29 September 2012 இற்றைப்படுத்தியது. |
பல்பீர் சிங் தோசன்ஜ் (Balbir Singh Dosanjh, 31 திசம்பர் 1923 – 25 மே 2020)[2][3] என்பவர் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வளைதடிப் பந்தாட்ட வீரராவார். இந்தியா மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். [4] லண்டன் (1948), ஹெல்சின்கி (துணைத் தலைவர்) (1952), மற்றும் மெல்போர்ன் (1956) (தலைவர்) போன்ற போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட வீரர்களில் ஒருவராவார். [5] இவர் எல்லா காலத்திலும் சிறந்த வளைதடி பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஒலிம்பிக்கில் ஆண்கள் வளைதடி பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஒரு நபர் அடித்த அதிக கோல்களுக்கான இவரது ஒலிம்பிக் சாதனை எவராலும் முறியடிக்க முடியாமல் உள்ளது. [6] 1952 ஒலிம்பிக் போட்டியின் தங்கப் பதக்க ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் 6–1 வெற்றியில் ஐந்து கோல்களை அடித்தபோது சிங் இந்த சாதனையை படைத்தார். பல்பீர் சிங் என்ற பிற இந்திய வளைதடி பந்தாட்ட வீரர்களிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக இவர் பெரும்பாலும் பல்பீர் சிங் மூத்தவர் என்று அழைக்கப்படுகிறார்.
ஆரம்ப ஆண்டுகளில்
[தொகு]1936 ஒலிம்பிக் வளைதடி பந்தாட்ட போட்டியில் இந்தியாவின் வெற்றிகுறித்த ஒரு செய்திப்படத்தை சிங் கண்டார். அப்போது கல்சா கல்லூரி வளைதடி பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்த ஹர்பைல் சிங் இவருடைய ஆட்டதிறமையை அடையாளம் கண்டார். பிரிக்கப்படாத இந்தியாவில் லாகூரின் சீக்கிய தேசியக் கல்லூரியில் இருந்து அமிர்தசரஸ், கல்சா கல்லூரிக்கு பல்பீரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியது ஹர்பைல் தான். இறுதியாக, பல்பீர் தனது குடும்பத்தினரிடமிருந்து 1942 ஆம் ஆண்டில் கல்சா கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய அனுமதி பெற்றார். ஹர்பைலின் வழிகாட்டுதலின் கீழ் தீவிர பயிற்சிகளைத் தொடங்கினார். பின்னர், ஹெல்பிங்கி மற்றும் மெல்போர்ன் ஒலிம்பிக்கில் வெற்றிகரமான இந்திய தேசிய வளைதடி பந்தாட்ட அணியை ஹர்பெயில் பயிற்றுவித்தார்.
விருதுகள் மற்றும் சாதனைகள்
[தொகு]1957 ஆம் ஆண்டில் பல்பீர் சிங்குக்கு இந்திய அரசு பத்மசிறீ விருதை அளித்து கௌரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு ஆளுமை இவர்தான்.[7] 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியின் நினைவாக டொமினிகன் குடியரசு 1958இல் வெளியிட்ட அஞ்சல்தலைமயில் இவரும் குர்தேவ் சிங்கும் இடம்பெற்றிருந்தனர். புதுதில்லியில் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நினைவுச் சுடரை இவர் ஏற்றினார். 2006 ஆம் ஆண்டில் இவர் 'மிகச் சிறந்த சீக்கிய வளைதடி பந்தாட்ட வீரர்' என்ற விருத்துக்கு சீக்கியர்களால் தேர்வு செய்யப்பட்டபோது, தன்னை ஒரு மதச்சார்பற்ற தேசியவாதி என்று வர்ணித்த இவர், மதத்தை அடிப்படையாகக் கொண்ட வீரர்களின் பட்டியலைக் கொண்டிருப்பது குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார், ஆனால் இந்திய வளைதடி பந்தாட்டத்தின் மேம்பாட்டிற்கு இது நல்லது என்று நம்பியதால் இந்த விருதை ஏற்றுக்கொண்டார். [8] மேலும், 1982 ஆம் ஆண்டில் தேசபக்த செய்தித்தாள் நடத்திய ஒரு தேசிய வாக்கெடுப்பில் இவர் நூற்றாண்டின் இந்திய விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில், இவருக்கு வளைதடி பந்தாட்ட இந்தியாவின் மேஜர் தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
குடும்பம்
[தொகு]இவரது தந்தைவழி தாத்தா, பாட்டி பவாட்ரா பஞ்சாபி கிராமத்தைச் சேர்ந்த தோசன்ஜ் மற்றும் தாய்வழி தாத்தா பாட்டி ஹரிபூர் கல்சா கிராமத்தைச் சேர்ந்த தனோவா ஆவர். இருவரும் பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பில்லார் வட்டத்தில் இருந்தனர். பல்பீரின் தந்தை தலிப் சிங் தோசன்ஜ் ஒரு சுதந்திர போராட்ட வீரராவார். பல்பீரின் மனைவி சுசில் லாகூரின் நவீன நகரத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 1946 இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுஷ்பீர் என்ற ஒரு மகளும் மற்றும் கன்வல்பீர், கரன்பீர், குர்பீர் என்ற மூன்று மகன்களும் இருக்கின்றனர். இவர்கள் கனடாவின் வான்கூவரில் குடியேறினர்.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Olympic Captains of India". Hockey India. Archived from the original on 13 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 10 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Triple Olympic Gold-winning Hockey Icon Balbir Singh Sr Passes Away". Republic World. 25 May 2020. பார்க்கப்பட்ட நாள் 25 May 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Oldest Living Olympians
- ↑ "Singh on song for India". IOC. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
- ↑ Balbir Singh Senior stakes claim for Bharat Ratna. The Tribune, 24 April 2012.
- ↑ Most Goals scored by an Individual in an Olympic Hockey Final (Male). Guinness World Records
- ↑ Padma Awards Directory (1954–2007) பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம், Ministry of Home Affairs.
- ↑ "Balbir (Sr.) gets the top accolade". Archived from the original on 2006-05-29. பார்க்கப்பட்ட நாள் 2020-02-22.
மேலும் படிக்க
[தொகு]- Blennerhassett, Patrick. A Forgotten Legend: Balbir Singh Sr., Triple Olympic Gold & Modi's New India (2016) online review