பறக்கை

ஆள்கூறுகள்: 8°08′09″N 77°27′06″E / 8.135800°N 77.451600°E / 8.135800; 77.451600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பறக்கை
Parakkai

பறக்கை
புறநகர்ப் பகுதி
பறக்கை Parakkai is located in தமிழ் நாடு
பறக்கை Parakkai
பறக்கை
Parakkai
பறக்கை, கன்னியாகுமரி (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 8°08′09″N 77°27′06″E / 8.135800°N 77.451600°E / 8.135800; 77.451600
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
ஏற்றம்40 m (130 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629601
தொலைபேசி குறியீடு+914652xxxxxx
வாகனப் பதிவுTN-74 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்நாகர்கோவில், கோட்டாறு, தேரூர், தெங்கம்புதூர் மற்றும் வல்லன் குமாரன் விளை
மாநகராட்சிநாகர்கோவில் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்விஜய் வசந்த்
இணையதளம்https://kanniyakumari.nic.in

பறக்கை (ஆங்கில மொழி: Parakkai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பறக்கை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°08′09″N 77°27′06″E / 8.135800°N 77.451600°E / 8.135800; 77.451600 (அதாவது, 8°08'08.9"N, 77°27'05.8"E) ஆகும். நாகர்கோவில், கோட்டாறு, தேரூர், தெங்கம்புதூர் மற்றும் வல்லன் குமாரன் விளை ஆகியவை பறக்கை பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான பறக்கை ஏரி இங்கு அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ மற்றும் விவசாய சமூகத்தின், சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக, 2017ஆம் ஆண்டு பறக்கையில் உள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நிலையான மீன்வளர்ப்பு இயக்குனரகத்துடன் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி - பறக்கை நிலையான மீன்வளர்ப்பு மையம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[2] For the cultivation of loaches and to run research centre in Parakkai, necessary steps are underway by the State Government of Tamil Nadu.[3] இங்கிருந்து சுமார் 1.6 கி.மீ. தூரத்தில் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் அமையப் பெற்றுள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுசூதன பெருமாள் கோயில், பறக்கையில் கட்டப்பட்டுள்ளது.[4][5] அக்கரை மகாதேவர் கோயில் இங்குள்ள மற்றொரு முக்கியமான கோயிலாகும்.[6] இவ்விரு கோயில்களும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. பறக்கை முத்தாரம்மன் கோயில், பறக்கை காளியாளன் என்ற கைலாசநாதர் கோயில், பறக்கை சந்தனமாரியம்மன் கோயில் ஆகியவை இங்குள்ள மற்ற கோயில்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கை&oldid=3714278" இருந்து மீள்விக்கப்பட்டது