பர்டன் இசுடெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்டன் இசுடெய்ன் (1926 - ஏப்ரல் 26, 1996) ஓர் அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆவார். இவரது கவனம் இந்தியாவைப் பற்றி இருந்தது.

வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

இசுடெய்ன் இலினொயின் சிகாகோவில் பிறந்து வளர்ந்தார். இரண்டாம் உலகப் போரில் பணியாற்றினார். 1945இல் இல்லினொய் பல்கலைக்கழகத்தின் சிகாகோ வளாகத்தில் இப்போது பயன்படுத்தப்படாத நேவி பியர் கல்லூரியில் மூன்றாம் நிலைப் படிப்பைத் தொடங்கினார். ஒரு அசாதாரண நபரான, இவர் ஒருபோதும் இளங்கலைப் பட்டப்படிப்பை முடிக்கவில்லை. இவர் நேரடியாக சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டார், இராபர்ட் கிரேனின் மேற்பார்வையின் கீழ் 1954இல் தனது முதுகலை முடித்தார். 1957இல் தனது முனைவர் ஆராய்ச்சியை தென்னிந்தியாவின் இடைக்கால திருப்பதி கோவிலின் பொருளாதார செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதினார்.

பின்னர், மினசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கு இவர் 1965 இறுதி வரை பணிபுரிந்தார். பின்னர் இவர் எழுத்தாளர் டோரதி என்பவரை மணந்து, ஹவாய் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு 1983 வரை 17 ஆண்டுகள் தங்கினார். இவர் சிகாகோ பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் பல்கலைக்கழகம், பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகம்,ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையம் ஆகியவற்றில் வருகை தரும் பேராசிரியர் பதவிகளை வகித்தார். இவர் பல்கலைக்கழகத்தில் கீழைநாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் பேராசிரியர் ஆராய்ச்சி கூட்டாளராகவும் பணியாற்றினார்.

இசுடெயின் கருத்தரங்குகளுக்காகவும்,பிற தெற்காசிய அறிவார்ந்த பணிகளுக்ககவும் தனது பரந்த அளவிலான பங்கேற்பிற்காக அறியப்பட்டார். இவர் தனது ஓய்வு காலத்திலும் தொடர்ந்து எழுதினார். மேலும் மாணவர்களுடனும், பிற அறிஞர்களுடனும் ஆலோசனையில் கணிசமான நேரத்தை செலவிட்டார். இவர் வறண்ட நகைச்சுவை உணர்வுக்கு பெயர் பெற்றவர். மேஎலும், வழக்கமாக மாணவர்களின் கேள்விகளுக்கு எதிர்கேள்விகளை முன்வைப்பதன் மூலம் பதிலளித்தார்.

ஆராய்ச்சி[தொகு]

ஆராய்ச்சி அறிஞராக இசுடெயினின் பங்களிப்புகள் முக்கியமாக நவீன மற்றும் காலனித்துவ தென்னிந்தியாவில் கவனம் செலுத்தியது. 1960களின் முற்பகுதியில் தென்னிந்தியாவில் "மாநிலத்தின்" தன்மை பற்றி ஒரு கருதுகோளை உருவாக்கினார். சோழ வம்சத்தில் அதிகாரத்துவ முறை இருந்ததா என சந்தேகம் கொண்டிருந்தார் . இவர் பழங்குடி சமூகத்தின் கோட்பாட்டை ஆராய்ந்தார். மேலும், இதற்காக ஐடன் சௌதாலின் "தி இல்யூசன் ஆப் டிரைப்" என்ற படைப்பைக் குறிப்பிட்டார். [1] இவர் தனது முதல் புத்தகமான, இடைக்கால தென்னிந்தியாவில் விவசாயிகள், மாநிலம் மற்றும் சமூகம் (1980) என்ற தலைப்பில் பிரிவினைப் பரம்பரையின் கருப்பொருளை வெளியிட்டார் .

ஓய்வு காலத்தில், இவரது எழுத்துத் திறன் காலப்போக்கில் அதிகரித்தது. மேலும் நான்கு புத்தகங்களை எழுதினார். ஐந்தாவதாக எழுதப்பட்ட, எ ஹிஸ்டரி ஆஃப் இந்தியா, 1998இல் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது. இரண்டாவது, சற்று திருத்தப்பட்ட, பதிப்பு 2010இல் வெளியிடப்பட்டது. கதையை மேலும் முன்னோக்கி கொண்டு வர ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டது. [2]

மினசோட்டாவைச் சேர்ந்த சக ஊழியரான ஜான் புருக்கும் , இவரும் சேர்ந்து தெற்காசியாவின் வரலாற்று வரைபட நூல் பற்றிய யோசனையை முதலில் வகுத்தனர். மேலும் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்று வரைபடத்தில் ஒரு கூட்டுறவு நிறுவ சார்லஸ் லெஸ்லி அமெசின் ஆதரவைப் பெற்றனர். ஜோசப் இ. இசுவார்ட்சுபெர்க்கின் தலைமையில், 1960களின் நடுப்பகுதியில் வரைபட வேலை தொடங்கியது. 1978இல் சிகாகோ பல்கலைகழக அச்சகத்தால் வெளியிடப்பட்ட தெற்காசியாவின் வரலாற்று வரைபடத்தின் வெளியீடுகளில் இசுடெயின் ஒரு செயலில் ஆலோசகராக இருந்தார்.

பணிகள்[தொகு]

புத்தகங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்

சான்றுகள்[தொகு]

  1. Aidan Southall (1970) The Illusion of Tribe in Perspectives on Africa: A Reader on Culture, History and Representation, edited by R.R. Grinker and others, John Wiley & Sons via Google Books
  2. Arnold, David (2010). "Introduction to Burton Stein's A History of India". A History of India (Second ). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-2351-1. https://books.google.com/books?id=QY4zdTDwMAQC&pg=PR14. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்டன்_இசுடெய்ன்&oldid=3520368" இலிருந்து மீள்விக்கப்பட்டது