பரோ சோனா பள்ளி வாசல்

ஆள்கூறுகள்: 24°52′58″N 88°07′41″E / 24.8829°N 88.1280°E / 24.8829; 88.1280
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரோ சோனா பள்ளி வாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ராம்கேலி, கௌடா, மால்டா , இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்24°52′58″N 88°07′41″E / 24.8829°N 88.1280°E / 24.8829; 88.1280
சமயம்ஆனபி-சுன்னி
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகி.பி.1526
செயற்பாட்டு நிலைஇடுபாடுகளுடன் உள்ளது

பரோ சோனா பள்ளிவாசல் (Baro Shona Masjid) ( சிறந்த தங்க பள்ளிவாசல் ) பரோதௌரி மஸ்ஜித் (12-வாயில் பள்ளிவாசல்) என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள கௌடா நகரில் அமைந்துள்ளது. கி.பி.1526 இல் இது கட்டி முடிக்கப்பட்ட இது மால்டா நகரத்திலிருந்து தெற்கே 12 கிமீ தொலைவில் ராம்கேலிக்கு தெற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[1] இடிபாடுகளுடன் காணப்படும் இந்த பள்ளிவாசல் இந்தியா-வங்காளதேச எல்லைக்கு மிக அருகில் உள்ளது. செங்கல் மற்றும் கல்லால் ஆன பிரம்மாண்டமான செவ்வக அமைப்பைக் கொண்ட இந்த பள்ளிவாசல் கௌடாவின் மிகப்பெரிய நினைவுச்சின்னமாகும். பன்னிரண்டு வாயில்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், உண்மையில் இது பதினொன்றையேக் கொண்டுள்ளது. [2]

மேற்கு வங்காளத்தில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலின் படி இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பட்டியலிடப்பட்ட நினைவுச்சின்னமாகும். [3]

வரலாறு[தொகு]

பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களுக்கு புனிதமான இடமாகும். பள்ளிவாசல் என்பது இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் வழிபடும் இடமாகும். உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு பொதுவான முக்கியத்துவத்திற்காகவும், இஸ்லாமிய கட்டிடக்கலை மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தின் பிரதிநிதித்துவத்திற்காகவும் நன்கு அறியப்பட்டவை. மசூதி அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யும் இடமாக இருந்தாலும், மசூதியானது உலகம் முழுவதும் பிரபலமான அழகிய கட்டிடக்கலை இடமாகவும் இருக்கலாம்.

பரோ சோனா பள்ளிவாசலின் கட்டுமானம், 50.4 மீ 22.8 மீ மற்றும் 12 மீ. உயரத்தில், வங்காள சுல்தான் அலாவுதீன் உசைன் சாவால் தொடங்கப்பட்டது. பின்னர், கி.பி 1526 இல் அவரது மகன் நசிருதின் நசரத் சாவால் முடிக்கப்பட்டது. இந்தோ-அரேபிய கட்டிடக்கலை மற்றும் அலங்கார கல் செதுக்கல்களால் கட்டப்பட்டுள்ள் இந்த பள்ளிவாசல் சுற்றுலா பயணிகளின் சிறப்பு ஈர்ப்பாக உள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramkeli
  2. Place to Visit Malda district Official website.
  3. "List of Ancient Monuments and Archaeological Sites and Remains of National Importance". West Bengal. Archaeological Survey of India. Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020.
  4. Place to Visit Malda district Official website.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோ_சோனா_பள்ளி_வாசல்&oldid=3852618" இலிருந்து மீள்விக்கப்பட்டது