பயனர் வழிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர் வழிகாட்டி அல்லது பயனர் கையேடு (User Guide) என்பது ஒரு பொருளைப் பயன்படுத்த உதவும் குறிப்புகள் கொண்ட ஒரு தொழில்நுட்பத் தொடர்பு ஆவணம் ஆகும்[1]. பொதுவாக இவை தொழிற்நுட்ப எழுத்தாளர்களால் எழுதப்படும், ஆனால் சிறு நிறுவனங்களில், நிரலாளர், தயாரிப்பு அல்லது திட்ட மேலாளர்களால் எழுதப்படும். இவை பெரும்பாலும் மின்னணு சாதனங்கள், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் போன்றவற்றிற்காக எழுதப்படுகிறது. இந்தக் கையேடுகள் எழுத்துவடிவமுடன் விளக்கப்படங்களும் கொண்டிருக்கும். தொழிற்நுட்ப குறியீடுகள் தவிர்க்கப்பட்டு பயனர்களின் வசதிக்கேற்ப மொழியும், நடையும் அமைந்திருக்கும்.

பயனர் வழிகாட்டியின் உள்ளடக்கம்[தொகு]

பயனர் வழிகாட்டியில் பெரும்பாலும் இருப்பவைகள்:

  • அட்டைப் பக்கம்
  • தலைப்புப் பக்கம் மற்றும் பதிப்புரிமைப் பக்கம்
  • வழிகாட்டியை எப்படி பயன்படுத்துவதென்று சில விளக்க இடைமுகங்கள்
  • உள்ளடக்கப் பக்கம்
  • முக்கிய செயல்படுகளை விளக்கும் குறிப்புகள்
  • பிழைகளுக்கும், பிரச்சனைக்கும் தீர்வாக பழுது குறிப்புகள்
  • அ.கே.கே (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
  • மேலும் விபரங்கள் மற்றும் தொடர்புக்கான தகவல்கள்
  • திரிசொல் விளக்கத் தொகுதி, பெரிய ஆவணஙளுக்கு ஒரு சுட்டி (நூல்)

கணினி மென்பொருள் கையேடுகளும் வழிகாட்டிகளும்[தொகு]

முக்கிய பயன்பாட்டு மென்பொருள்களுக்கெல்லாம் மேற்கண்ட பட்டியலைப் போன்ற தகவல்கள் கொண்ட புத்தக வடிவ ஆவணமாக இருக்கும். கூகிள் எர்த்தின் பயனர் வழிகாட்டி ஒரு சிறந்த ஆங்கில உதாரணம் [2] சில வணிக மென்பொருட்களில், ஒரு குறிப்பிட்ட குழிவினர் மட்டும் பயன்படுத்து வகையில் பிரத்யேக கையேடுகளும் தயாரிக்கப்படும். உதாரணம்: ஆட்டோடெஸ்க் டாபோபேஸ் 2010 உதவி[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. guides.html "Online Technical Writing: User Guides" Check |url= value (உதவி). hcexres@io.com. 13 August 2009 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Google Earth User Guide". Google. 4 June 2009. 13 August 2009 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Autodesk Topobase 2010 Help". Autodesk. 13 August 2009 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_வழிகாட்டி&oldid=3219775" இருந்து மீள்விக்கப்பட்டது