பயனர் பேச்சு:Thaumanavar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Thaumanavar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:34, 17 பெப்ரவரி 2013 (UTC)

குறவர் சமுதாயத்தைப் பற்றிய கட்டுரை[தொகு]

தாயுமானவர், குறவர்கள் என்ற தலைப்பிலும் நரிக்குறவர் என்ற தலைப்பிலும் ஏற்கனவே கட்டுரைகள் உள்ளன. அங்கு விடுபட்டுள்ள தகவல்களை கலைக்களஞ்சிய நடையில் நீங்கள் சேர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 14:06, 20 பெப்ரவரி 2013 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரை பற்றிய விளக்கம்[தொகு]

வணக்கம், Thaumanavar!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 10:57, 2 மார்ச் 2013 (UTC)

குறவர் பற்றிய தகவல்[தொகு]

வணக்கம், தாயுமானவர். ஒத்தாசைப் பக்கத்தில் உங்கள் கருத்தைக் கண்டேன். தமிழ் விக்கிப்பீடியாவில் தாராளமாக குறவர்களைப் பற்றியோ வேறு எந்த சமூகத்தைப் பற்றியோ தகவலைச் சேர்க்கலாம். நீங்கள் தவறேதும் செய்யவில்லை. அவ்வாறு நீங்கள் எண்ண நேர்ந்திருந்தால் வருந்துகிறோம். நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விசயம் என்னவென்றால், தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இது ஒரு வரலாற்று ஆவணம் போன்றது. நாளை நடக்க இருக்கும் செய்தியை விட 50, 100 ஆண்டுகள் கழித்தும் முக்கியத்துவம் உள்ள தகவலுக்கு இங்கு முன்னுரிமை அளிக்கிறோம். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். குறவர் சமூகத்தின் மக்கள் தொகை, மக்கள் பரவல், வரலாறு, பண்பாடு, சமூக நிலை ஆகியவை குறித்து தகுந்த ஆதாரங்களோடு எழுதலாம். ஏற்கனவே உள்ள குறவர் கட்டுரையில் தகவலைச் சேர்க்க இங்கு சொடுக்குங்கள். நன்றி--இரவி (பேச்சு) 04:03, 4 மார்ச் 2013 (UTC)

உங்கள் முதல் தொகுப்பு[தொகு]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Thaumanavar!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.


வணக்கம் தாயுமானவர், உங்கள் முதல் தொகுப்புக்கள் சிறப்பாக உள்ளன. அவற்றை உங்களுக்குப் பிறகு இரு பயனர்கள் திருத்தி உள்ளனர். இவற்றை உள்வாங்கி தமிழ் விக்கிப்பீடியாவில் கடைபிடிக்கப்படும் வடிவமைப்புக்கு ஏற்ப பங்களிக்கப் பழகுங்கள். மேலும் உங்கள் கூற்றுக்களுக்கு ஆதாரமாக நூல் அல்லது வலைத்தள முகவரிகளைத் தந்தால் கட்டுரை நிறைவு பெறும். குறவர் சமுதாயத்தினருடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாது நீங்களறிந்த பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து பங்களியுங்கள். வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 03:30, 9 மார்ச் 2013 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thaumanavar&oldid=3185049" இலிருந்து மீள்விக்கப்பட்டது