பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு02

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Can you tell me what the title of The Rescuers would be in Tamil please? 64.134.147.25 15:01, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

The Rescuers = தி ரெஸ்கியூயர்ஸ் or தி ரெசுக்கியூயர்சு. transliterate english titles wherever possible. translate them only if they have been officially translated in Tamil. The meaning can be given within braces inside the article--சோடாபாட்டில் 15:25, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
Can you restore the page and then move it to the Tamil translation please? Thanks. 64.134.147.25 15:32, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
Done. the page is at தி ரெஸ்கியூயர்ஸ். And one more thing - in most of the animation movie articles you have created, the first external link has the text "south park studios". I guess you are copypasting and then modifying each article. Please remember to change the description in each case to an appropriate one.--சோடாபாட்டில் 15:37, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
Can you translate the names in the infobox for தி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட்? I did some but not all because some were in தி ரெஸ்கியூயர்ஸ். Also can you upload the poster for தி ரெஸ்கியூயர்ஸ்? Thanks. 64.134.149.79 21:17, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
Done and Done. Did the same for Dumbo. I should have completed the transliteration request you put in for the rescuers long back. Some how forgot to do it. You seem to be fairly active here. why not register an account. With an account, you can do the uploading yourself?. An account is more anonymous than an IP--சோடாபாட்டில் 08:23, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

வகைப்படுத்தப்பட்டாத பக்கங்கள்[தொகு]

நிர்வாகப் பணிகளில் சிறப்பாக ஈடுபடுவதால், உங்கள் கவனத்துக்கு இந்தப் பக்கத்தை சுட்டுகிறேன்:

வகைப்படுத்தப்பட்டாத பக்கங்கள்

--Natkeeran 16:28, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி நற்கீறன். செய்யவேண்டிய பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன்--சோடாபாட்டில் 16:29, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இணைக்க வேண்டும்[தொகு]

தேனி மற்றும் தேனி அல்லிநகரம் எனும் இரு கட்டுரைகளும் ஒன்றே. இரண்டு கட்டுரைகளையும் இணைத்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 02:15, 11 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தென்னாபிரிக்க -> தென்னாப்பிரிக்க[தொகு]

சோடாபாட்டில், நீங்கள் மட்டுமே இன்று (மாரத்தான்) முழுதும் தொடர்ந்து பங்களித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

ஒரு வேண்டுகோள். தென்னாபிரிக்க நகரங்கள் என்றொரு பகுப்பு இருக்கிறது. டர்பன்இல் அதனை தென்னாப்பிரிக்க என்று மாற்றினேன். ஆனால், பகுப்புத் தலைப்பையும் பிற இணைப்புக்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் உங்களால் மாற்ற முடியுமா? நன்றி --இரா. செல்வராசு 20:53, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி செல்வராசு,
இந்த ஆபிரிக்கா -> ஆப்பிரிக்கா வேறுபாடு எழுத்துப்பிழையல்ல. ஈழத்தமிழ்->தமிழ்நாட்டுத் தமிழ் வேறுபாடு. ஈழத்தார் ஆபிரிக்கா என்றே எழுதுவதால் தென்னாபிரிக்கா என்று பகுப்புகள் உருவாக்கியுள்ளனர். விக்கி மரபுப்படி ஒரு வட்டார வழக்கில் முதலில் உருவாக்கப் பட்டால் அதனை மாற்றுவதில்லை. அதையே மற்றவர்களும் பயன்படுத்திக் கொள்கிறோம். கட்டுரையாக இருந்தால், அடைப்புக் குறிக்குள் ஏனைய வழக்கினைத் தருவது வழக்கம், பகுப்பென்பதால் அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். மாற்ற வேண்டாம். --சோடாபாட்டில் 03:46, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

போஸ்ட்கிரே எஸ்குயெல் மற்றும் போஸ்கிரெஸ்குயெல்[தொகு]

ஆங்கிலத்தில் postgresql போஸ்கிரெஸ்குயெல் எனவே உச்சரிக்கவேன்டும்(உச்சரிக்கப்படுகிறது.)((எ-டு)ajax - ஏஜக்ஸ், mySQL - மைசெக்யூல், Linux - லைனக்ஸ் என்றே உச்சரிக்கவேண்டும் ஆனால் தமிழ் நடைமுறையில் அஜாக்ஸ், மைஎஸ்க்யூஎல், லினக்ஸ் என்றே வழங்கப்படுகிறது.) அதை எண்ணிதான் அவ்வாறு தலைப்பிட்டேன். நடைமுறைக்கு ஏற்றவண்ணம் திருத்திக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனையில்லை. விரும்பினால் தலைப்பை நகர்த்தும் முன் இன்னும் சிலரிடம்(கணிணி சார்ந்த தொழில்நுட்பம் குறித்து அறிந்தவர்கள், எழுதிவருபவர்கள்) வேண்டுமாணால் கேட்டுவிடுங்கள். --நன்றி கி. கார்த்திகேயன்

ஆங்கிலத்தில் சேர்த்தே உச்சரிக்கப்படுகின்றதெனில் நீங்கள் சொல்வது போலவே இருக்கட்டும். நான் நிரல் உலகை விட்டு வெளியே போய் பல வருடங்களாவதால் சட்டென்று விளங்கவில்லை. ;-)--சோடாபாட்டில் 09:06, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மென்பொருள் உருவாக்குனர்[தொகு]

மென்பொருள் உருவாக்குனர் கட்டுரையை திருத்தி மேம்படுத்த வேண்டுகிறேன்.

அட்லசு[தொகு]

நீண்ட நாட்களாய்க் கிடப்பிலிருந்த அட்லஸ் கட்டுரையைச் செம்மை செய்தமைக்கு நன்றி ! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 14:25, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

:-) --சோடாபாட்டில் 15:26, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

about Tamil wikipedia article Pandya[தொகு]

Mr.Sodabottle in that Tamil wikpedia article about Pandya someone has added claims about the pandians belonging to a particular caste without any references or any historical background i have only removed it.

oh ok. Thanks for catching that. I was mistaken in reverting your edits. I saw some lines removed without explanation and undid it. In the future, if you leave an edit summary in the சுருக்கம் field while making edits like this, it would be helpful for people like me who review edit to not make mistakes. Again my apologies. --சோடாபாட்டில் 08:05, 21 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

Bias என்று தேடிப்பார்த்து எதுவும் வராததால் இப்படி ஒரு கட்டுரை இல்லை ‌என்று எண்ணி விட்டேன். தாங்கள் எப்படி கண்டறிந்தீர்கள் ? --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 08:08, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நீங்கள் bais என்று தேடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதான் உங்களுக்கு சிக்கவில்லை. உங்கள் முதல் draft ல் bais என்றே உள்ளது. அதனால் சிக்காமல் போயிருக்கும்.--சோடாபாட்டில் 08:16, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு[தொகு]

இக்கட்டுரை பற்றி எனது பயனர் பக்கத்தில் இருந்த தங்களது கருத்தைக் கண்டேன். இடைவெளி தொடர்பான மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. --Tamil sarva 08:29, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி. இனி எந்த மாற்றமாயினும் உங்கள் பயனர்வெளியில் உள்ள கட்டுரையிலேயே செய்யுங்கள். அக்கட்டுரை பிற விக்கியர்களின் மேய்ப்பு/கருத்துகளுக்குப் பின்னர் பொதுவெளிக்கு (இச்சுற்றில் உருவாக்கப்படும் ஏனைய 24 கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுடன் சேர்த்து) மாற்றப்படும். அதுவரை பயனர் வெளியிலேயே மாற்றங்கள்/திருத்தங்கள் செய்ய வேண்டும்.--சோடாபாட்டில் 08:38, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

tell us about your wikipedia[தொகு]

மெட்டாவிக்கியில் உங்கள் விக்கிப்பீடியாவைப் பற்றிச் சொல்லுங்கள் எனும் பகுதியில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆலமரத்தடியில் மெட்டா விக்கி பக்கத்திற்கான இணைப்பு தந்துள்ளேன். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 17:36, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பார்த்தேன் கார்த்தி, மூத்தோர்கள் யாரும் (நான் இங்கு வந்து நான்கு மாதங்களே ஆகின்றன. மயூரநாதன், நற்கீரன், கனக்ஸ், ரவி, செல்வா, சுந்தர் போன்றோர் என்னை விட த. விக்கியின் வரலாறை நன்கறிவர்) சில நாட்களுள் எழுதவில்லையெனில், நான் அதை எழுதுகிறேன்.--சோடாபாட்டில் 17:47, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

இங்கு உங்கள் பெயரை சேர்த்துள்ளேன். தப்பில்லை என நினைக்கிறேன். ஸ்ரீகாந்த் 09:56, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா தப்பே இல்ல..ஆஆஆ...--சோடாபாட்டில் 10:04, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நாமக்கல் மாவட்ட ஊர்கள்[தொகு]

'நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஊர்கள்' என்பதைவிட 'நாமக்கல் மாவட்ட ஊர்கள்' என்னும் தலைப்பு சுருக்கமாக இருக்கும் என்பதால் இதைப் பகுப்பாகக் கொள்ளலாம் என நினைக்கிறேன். மேலும் பல ஊர்களைப் பற்றி இத்தலைப்பில் எழுதலாம் என்றிருக்கிறேன். எழுதும் முறையில் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். --பயனர்:பெருமாள்முருகன் 11.15, 26.11.10

நன்றி[தொகு]

நான் தொடங்கும் பக்கங்களைச் செம்மை செய்யும் உங்கள் பங்களிப்புக்கு நன்றி. சில விஷயங்கள் நினைவில் இருப்பதில்லை. குறிப்பாக வடிவமைப்பு. விக்சனரியில் ஏதேனும் இயலுமா எனப் பார்க்கிறேன்.--Perumalmurugan 14:58, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தொடக்க நூல் - ஆதியாகமம் இணைப்பு[தொகு]

  • சோடாபாட்டில், நீங்கள் கேட்டபடி, ஆதியாகமத்திலுள்ள செய்திகளின் சாரத்தைத் தொடக்க நூல் இடுகைக்குள் கொணர்ந்து, அதைச் சற்றே விரிவாக்கியுள்ளேன். எனவே, ஆதியாகமம் இடுகையில் உள்ள உள்ளடக்கத்தை அகற்றிவிடலாம், ஆனால் அப்பெயரில் மீள்படுத்துங்கள்.

விவிலியத்தின் பிற நூல்களுக்கும் மேற்கூறியவாறே செய்யவேண்டும். அவ்வப்போது உங்களுக்குத் தெரிவிக்கிறேன். வாழ்த்துகள்!--பவுல்-Paul 19:53, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

விடுதலைப் பயணம் - யாத்திராகமம் இணைப்பு[தொகு]

இரண்டனது வரலாறுகளையும் இணைத்து விட்டேன்.--சோடாபாட்டில் 04:59, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஐயம்![தொகு]

ஆங்கில விக்கியில் நான் எழுதிய இக்கட்டுரை நீக்கப்பட்டதன் காரணம் அக்கட்டுரை விளம்பரப் படுத்தும் விதமாக இருந்தது என்பதா? அல்ல மேற்கோள்கள் ஏதும் காட்டப் படவில்லை என்பதா? எனக்குப் புரியவில்லை. சற்று விளக்கவும் அண்ணா!!!

  • மேலும் அக்கட்டுரையை விரிவு படுத்த உதவவும்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 05:45, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

All of the above reasons and some more :-). ஆங்கில விக்கியின் notability and inclusion criteria மிகவும் கடுமையானது. நீங்கள் எழுதியுள்ள கட்டுரை மிகவும் பொதுப்படையாக ஆரம்பிக்கின்றது. கலைகளஞ்சியக் கட்டுரையென்பது முன்னுரை, கொள்கை விளக்கங்களுடன் இருக்கக் கூடாது. Tamil medium engineering in Tamil Nadu என்பது ஒரு குறிபிட்டத் தலைப்பு. இதனைச் சரியாக புற உசாத்துணைகளுடன் எழுத வேண்டும். எ. கா தாய்மொழிக் கல்வி, பிற நாடுகளில் எப்படி என்பதெல்லாம் விரிவாகச் சொல்லக் கூடாது. ஓரிரு வரிகளில் விளக்கி விட்டு நேரடியாக விஷயத்துக்கு வரவேண்டும். மேலும் it requrires lots of news coverage to qualify under en:WP:GNG criteria. Benefits என்று போட்டு கொ. விளக்கம் போல் உள்ளது. எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள் நானும் ஸ்ரீகாந்தும் உங்கள் ஆ. விக்கி பயனர்வெளியில் அதனை ஆ. விக்கி விதிகளுக்கு எற்றார் போல் மாற்றுகிறோம்.
மாற்றினாலும், பிறர் அதனை “anna university" கட்டுரையோடு இணைத்துவிடக் கூடிய அபாயமும் உள்ளது. என்னால் முயன்றதைச் செய்கிறேன். give me a week.--சோடாபாட்டில் 05:53, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி அண்ணா!
  • நான் தமிழில் எழுதும் கட்டுரைகளும் இதைப் போலத்தான் உள்ளனவா? இல்லை அவை விக்கி விதிகளுக்கு உட்பட்டு இருக்கின்றனவா?

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 05:59, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கி ஆ. விக்கியைப் போன்று கடுமையான விதிகளைக் கொண்டதல்ல (சொல்லப்போனால் அதிகாரப்பூர்வ notability criteria என்பதே நமக்கு கிடையாது). it is more inclusive and relaxed. எல்லா தகவல்களுக்கும் மேலதிக உசாத்துணைகளை நாம் கேட்பதில்லை. சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கும், நம்பமுடியாத வண்ணமுள்ள தகவல்களுக்கும் மட்டுமே புற உசாத்துணைகளைக் கேட்கிறோம். மேலும் நீங்கள் இதுவரை எழுதிய கட்டுரைகள் குறிப்பாக உள்ளன (கொ. விளக்கம், சொந்த கமண்டரி இல்லாமல்). எனவே ஒரு பிரச்சனையும் இல்லை. மேலும் அப்படியே நீங்கள் எழுதியிருந்தாலும், அதனை நீக்குவதற்கு முன் யாரேனும் செம்மைப்படுத்தி பிழைக்க வைக்கவே முயல்வார்கள். இங்கு நீக்கமென்பது கடைசி கட்ட செயல்பாடு. (சிறிய விக்கிகளில் எல்லாம் இப்படித்தான்). ஆனால் ஆ. விக்கி பெரிய விக்கி என்பதால், அங்கு முதலில் சேமிக்கும் உள்ளடக்கமே சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீக்கி விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் :-). இது ஒரு எண்ணிக்கை தரக்கட்டுப்பாட்டுப் பிரச்சனை. நமக்கு இப்போது நாளொன்றுக்கு 20 கட்டுரைகள் உருவாவதால் நிதானமாக அவற்றை கவனித்து சரிப்படுத்த முடிகிறது. ஆ. விக்கி போல நமக்கும் தினம் 2000 கட்டுரைகள் உருவானால், நாமும் வெட்டு ஒண்னு துண்டு ரெண்டு என்று ஆகி விடுவோம் என்று நினைக்கிறேன் :-)--சோடாபாட்டில் 06:07, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி!

--சூர்ய பிரகாசு.ச.அ. 06:14, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

படம் சேர்ப்பு[தொகு]

தியான்கே-1க்குப் படம் சேர்த்துள்ளேன் பார்க்கவும்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 17:12, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்று சூர்யா, நியாயப் பயன்பாட்டுப் படிமம் என்பதால் மூலம் தேவை. எனவே அந்த இணைப்பையும் கொடுத்துவிடுங்கள். நியாயப்பயன்பாட்டுக்கான காரணங்களை விளக்கி ஒற்றை வரி ஒன்றை இணைத்துள்ளேன்.--சோடாபாட்டில் 06:19, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

எமது சிந்தனை ஊற்றுக்களை அறிதல்[தொகு]

  • பகுத்தறிவுவாத இதழ்களையும், திராவிட இதழ்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா?
  • தலித் இதழ்கள் என்ற ஒரு பிரிவு இருக்கா (அப்படி இலங்கையில் பிரிப்பதில்லை, அவர்கள் பொதுவாக இடதுசாரி வகைக்குள் வருகிறார்கள்)
  • இடதுசாரி இதழ்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது, ஆனால் வலதுசாரி இதழ்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் இதழ்கள் உள்ளனவா?
  • தற்போது திராவிடத்தில் இருந்து தமிழியம் என்ற ஒரு பிரிவு தமிழ்நாட்டில் உள்ளது. அந்தக் கூற்றுச் சரியா?
  • இலங்கையில் மேற்கூறிய பிரிவை தமிழ்த் தேசியம் என்பர்.
  • இலங்கையில் முற்போக்கு, மரபு, ஆகியவற்றோடு நற்போக்கு எனற ஒரு பிரிவும் உள்ளது. அதற்கு இணையாக தமிழ்நாட்டில் சுட்ட முடியுமா?
  • மலேசியா, மலையகத் தமிழர்களின் அடிப்படைச் சிந்தனை தத்துவங்களில் தனித்துவமான போக்குகள் உள்ளனவா?

சில அலசப்பட வேண்டிய கேள்விகள். --Natkeeran 05:55, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நான் அறிந்த வரையில்
  • பிரிக்கத் தேவையில்லை. 1940களில் இரு அணியினரும் ஒன்றாகி விட்டனர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பலதரப்படவர்களை இணைத்ததில், 1920களில் சற்றே உரசிக் கொண்டிருந்த அனைவரும் திராவிடர் கழகம்/பெரியார் பின் ஒன்றிணைந்தனர். பின் திமுக பிரிந்த போது பலர் சென்றாலும், 40களில் தி.க பின் நின்றதால் அனைவரும் திராவிட இயக்கத்தினரென்றே அறியப்படுகிறார்கள்
இருக்கின்றது. அதுவும் கடந்த இருபது ஆண்டுகளாக தலித் சாதிய கட்சிகளின் எழுச்சியால் (புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் et al) இடதுசாரி பாதையிலிருந்து விலகி “தலித்தியம்” (பொதுவுடைமை வாதிகளின் வர்க்கப்போரும், திராவிடவாதிகளின் இனபோரும் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை என்ற கருத்து) பேசும் இதழ்கள் பல உருவாகியுள்ளன. இதனைப் பற்றி நூல்களும் வெளியாகியுள்ளன.
உண்டு ஆனால் அவை குறைவு. எ. கா. சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையினர் அதே பேரில் ஒரு வலதுசாரி இதழை நடத்தினார்கள். கோவை, நாகர்கோவில் போன்று ஆர். எஸ். எஸ் அமைப்பு தீவிரமாக செயல்படும் இடங்களில் பல இதழ்கள் வெளியாகியுள்ளன. 2001ல் பாஜக அரசியல் ரீதியாக தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தபின்னர் குறைந்து விட்டன. இன்று இணையத்தில் தமிழ் ஹிந்து தளம் ஒரு வலதுசாரி இணைய இதழ்.
ஆம் உண்டு. 1960களில் திராவிட நாடு கொள்கை கைவிட்டபின் “தனித் தமிழ்நாடு” “தமிழ் தேசியம்” என்று சொல்வோர் (எண்ணிக்கையில் மிகக் குறைவு) உருவாகினர். தமிழ் தேசியம் கோருவது இந்தியச் சட்டப்படி குற்றமாகையால் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைந்து கூறி வருபவர்கள் பலர். இது ஒரு வானவில் கூட்டணி. சில நக்சல்பாரி குழுக்களும் இதில் அடக்கம். பழ. நெடுமாறன் இந்த வகையினரில் அரசியல் மைய நீரோட்டத்தில் இருப்பவர்.
இடது/வலது/திராவிட/தலித்திய/சாதிய/இந்திய தேசிய த்தைத் தவிர தமிழ்நாட்டில் நடுப்போக்காளர் என்று யாரும் இல்லை. விஜயகாந்தின் தேமுதிக சற்றே இது போன்று பேசி வந்தாலும், அதற்கு முறைப்படி கொள்கைகள் இல்லாததால், சினிமாக்காரன் கட்சி என்பதைத் தாண்டி அதனை யாரும் எந்தக் கொள்கைப் பிரிவினடியிலும் சேர்ப்பதில்லை.


நல்ல பகிர்வுகள். ஐ.அமெரிக்காவில் சுதந்திரவாதம், அரசின்மை போன்ற கருத்துடையோர் யாரேனும் உள்ளார்களா? --Natkeeran 06:24, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]


திருத்தம்[தொகு]

தவறு ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தயவு செய்து திருத்தி விடவும். நிகழ்வுகளில், மூதறிஞர் கந்தமுருகேசனார் இறந்ததாக 2 வெவ்வேறு தினங்களில் அதாவது மே மாதம் 14 ந் திகதியும், யூன் மாதம் 14 ந் திகதியும், குறிப்பிடப்பட்டுள்ளது. யூன் மாதம் 14 ந் திகதி தான் அவர் இறந்த சரியான தினம் என்பதனால், மே மாதம் 14 ந் திகதியிலுள்ள பதிவை நீக்கி விடவும். தவறைக் கண்டதும் நானாக அதனைக் கடந்த வாரம் நீக்க முற்பட்ட போது, அதனை நீங்கள் அவதானித்து விட்டு எனது IP Addressஐ ஒரு நாள் முடக்கி விட்டீர்கள். நானாக நீக்க முற்பட்டது தவறு என்று நினைக்கிறேன். அதனால் இப்போது இந்தப் பணியை உங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன். உங்களின் இந்தப் பக்கத்தில் நான் நுழைந்து எழுதுவதும் தப்போ தெரியவில்லை. தவறென்றால் மன்னித்து விடுங்கள். இதுவும் தவறென்றால் உங்கள் பேச்சுப்பக்கத்துக்கு எப்படிச் செல்வது, எப்படி உங்களுக்கு சேதி சொல்வது (வழி முறை) என்பதைத் தெரிவிக்கவும். நன்றி.

உங்கள் செய்கைகள் மிகச்சரியானவை. நான் தான் தவறிழைத்து விட்டேன். தவறுதலாக உங்களது முகவரியைத் தடை செய்ததற்காக மன்னிப்புப் கோருகிறேன். பொதுவாக ஐபிகள் சுருக்கத்தில் எதுவும் விளக்காமல் உள்ளடகங்களை நீக்கினால் தடை செய்வது வழக்கம். நீங்கள் செய்யும் தொகுப்பு சரியா தவறா என்று சோதித்துப் பார்க்காமல் உங்கள் முகவரியை தடை செய்தது எனது பெரும் பிழை. தற்போது மே 14 பக்கத்திலிருந்து கந்த முருகேசனாரின் விவரத்தை நீக்கி விட்டேன். நீங்கள் இங்கு எனக்கு செய்தியிட்டதும் மிகச்சரி. இதுவே எனக்கு செய்தி சொல்லும் வழிமுறை.
எனது தவறுக்காக மீண்டும் மன்னிப்புக் கொருகிறேன். வரும் காலத்தில் விழிப்புடன் இருந்து செயல்படுகிறேன்.

--சோடாபாட்டில் 16:04, 9 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நீங்கள் எனக்காக இட்டிருந்த உங்கள் புதிய செய்திகளையும் கண்டேன். கடந்த ஒரு வார காலமாக இந்த திருத்தத்தை அறிவிப்பதற்கான சரியான வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உடனடியாக வேகமாக செயற்பட்டு திருத்தத்தை மேற்கொண்டதற்கும் நன்றி. அதற்கும் மேலாக உங்கள் பண்புக்கும் நன்றி. உங்கள் சேவை தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீண்ட காலம் கிடைக்க வாழ்த்திக் கொண்டு விடை பெறுகிறேன். தென்புலோலியூர் கிருஷ்ணலிங்கம்

நன்றி[தொகு]

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்கள் போன்றவர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னைப் போன்றவர்களிற்கு மென்மேலும் புதிய விடயங்களை இணைக்க பேருதவியாக இருக்கும். நன்றி.

  • ஜெய் -09/12/2010