பயனர்:Kalaivanan S/மணல்தொட்டி/பஞ்சாபி கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஞ்சாபி கதைகள் அல்லது பஞ்சாபி கிஸ்ஸே (சாமுகி: پنجابی قصه,பஞ்சாபி: ਕਿੱਸਾ,பஞ்சாபி: ਕਿੱਸਾ) அராபியத் தீபகற்த்திலிருந்தும் தற்போதைய ஈரான், ஆப்கானித்தான் பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தோரிடமிருந்து தெற்கு ஆசியாவிற்கு வந்த வாய்வழி கதை சொல்லுதலின் பஞ்சாபி மொழி மரபாகும்.[1]

கதைகள் முஸ்லிம்களிடையே அறமுறையான நேர்மை, காதல், வீரம், பெருமை குறித்த புகழ்பெற்ற கதைகளை பரப்பும் இசுலாமிய அல்லது பெர்சிய பாரம்பரியத்தை எதிரொளித்தாலும் சமயத்தின் எல்லைகளைக் கடந்த சார்பற்ற நிலைக்கு முதிர்ந்துள்ளது; இந்தியப் பகுதியை அடைந்தபிறகு முன்பிருந்த பஞ்சாபிப் பண்பாட்டையும் நாட்டுப்புற பண்பாட்டையும் தன்னுள் ஏற்றுக்கொண்டது.[1]

கிஸ்ஸாவின் சொற்பிறப்பியல்[தொகு]

கிஸ்ஸா (Qissa) அராபிய சொல்லாகும்; ‘காப்பிய செவிவழிக்கதை’ அல்லது ‘நாட்டார் கதை’ என்ற பொருளுடையது. இந்தச் சொல் தெற்கு ஆசியாவின் பெரும்பாலான மொழிகளில் தாக்கமேற்படுத்தியுள்ளது; வடமேற்கு தெற்காசிய மொழிகளான பஞ்சாபி, உருது, இந்தியில் வழக்கமான பொதுப் பெயர்ச்சொல்லாகப் பயன்படுதப்படுகின்றது. இது பொதுவாக சுவையான கதை, ‘கட்டுக்கதை’ எனக் கொள்ளப்படுகின்றது.

குறிப்பிடத்தக்க கதைகள்[தொகு]

பெரும்பாலான பஞ்சாபி கதைகளை முசுலிம் கவிஞர்கள் எழுதியுள்ளனர். மிகத் தொன்மையானவை உருது எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளன. சில மிகவும் புகழ்பெற்ற கதைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன;

 • மிர்சா சாகிபா’ - பீலு
 • ஈர் ராஞ்சா’ - வாரிசு சா
 • சோனி மகிவால்’ - பசல் சா சையது
 • சாஸ்ஸி புன்னுன்’ - அஷம் சா /
 • சுச்சா சிங் சூர்மா
 • ஜியோனா மோர் - பகவான் சிங்
 • சோசுரோசு & சிரின் பர்காத்
 • பூரன் பகத் - கதர்யார்
 • கேகர் சிங் ராம் கவுர்
 • ஷாம் கவுர், ஷாம் சிங், ஷாம் லால்
 • தோல் சம்மி
 • யூசஃப் & சுலைக்கா - ஆபீசு பர்குர்தார்
 • லைலா மஜ்னு
 • கவுலன்
 • துல்லா பட்டி
 • மனு குஃக்கு
 • உசுத்தாது அர்மான்
 • ஜாட் பர்மசு

மேற்சான்றுகள்[தொகு]