உள்ளடக்கத்துக்குச் செல்

ஈர் ராஞ்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஞ்சா துறவியாக இருந்தபோது தங்கியிருந்த டில்லா ஜோகியாங் (யோகியர் மேடு)
ஜங் நகரில் ஈர்-ராஞ்சா ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டவிடம்
ராஞ்சாவின் கல்லறை

ஈர் ராஞ்சா (Heer Ranjha) பஞ்சாப் பகுதியில் (தற்போது பாக்கித்தானில் உள்ள பகுதி) மிகவும் அறியப்பட்ட சோகத்தில் முடியும் காதல் கதை ஆகும்.[1]

இந்தக் கதை செல்வமிக்க, உயர்ந்த குடும்பத்து ஈர் என்ற அழகான சிற்றூரைச் பெண்ணிற்கும் ராஞ்சா என்ற பண்ணை இளைஞருக்கும் இடையே எழுந்த காதலைக் குறித்தது. ஈரின் தந்தையின் பண்ணையில் ராஞ்சா எருமைகளை மேய்த்து வந்தான். இருவருக்குமிடையே துளிர்த்த காதலை ஈரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை. ஈரைக் கட்டாயமாக ஒரு பணக்கார இளைஞருக்கு திருமணம் செய்விக்கின்றனர். இதனால் மனமுடைந்த ராஞ்சா துறவியாகின்றான். பின்னர் ஈராவைச் சந்திக்க முயன்றும் இயலாமல் இறுதியில் இருவரும் மனமுடைந்து இறக்கின்றனர்.

இந்தக் கதையை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இவற்றில் மிகச் சிறப்பாகக் கருதப்படுவது 1761ஆம் ஆண்டில் வாரிசு ஷா எழுதிய ஈர் என்பதாகும்.[2] பஞ்சாபி மொழியிலும் உருது மொழியிலும் சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கதை இன்றும் பாக்கித்தானில் மிகவும் புகழ்பெற்றுள்ளது. காதல் வயப்பட்ட பல இளைஞர்களும் இளமங்கையரும் இன்னமும் இத்தகையத் தடைகளை எதிர்கொள்கின்றனர்.[3] சிலர் இந்தக் கதையின் நாயக, நாயகி உண்மையில் வாழ்ந்திருந்ததாக நம்புகின்றனர். இருவரும் இறந்தபோது ஒன்றாக பாக்கித்தானிய பஞ்சாபில் உள்ள ஜங் என்றவிடத்தில் புதைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.[4] ஆனால் இதற்கு மெய்ச்சான்றுகள் எதுவும் இல்லை.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. A. Tahir, 'Punjabi Folk tales' Lahore, 1992
  2. Tahir, aa p.78
  3. Dr ST Mirza 'Resistance themes in Punjabi Literature' Lahore, 1991.
  4. Mirza

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்_ராஞ்சா&oldid=3235109" இலிருந்து மீள்விக்கப்பட்டது