உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சை கதிர்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை கதிர்க்குருவி
Green warbler
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைலோசுகோபிடே
பேரினம்:
பைலோசுகோபசு
இனம்:
பை. நைட்டிடசு
இருசொற் பெயரீடு
பைலோசுகோபசு நைட்டிடசு
(பிளைத், 1836)

பச்சை கதிர்குருவி (Green warbler) என்பது பச்சை வில்லோ கதிர்குருவி அல்லது பச்சை இலை கதிர்குருவி என்று அழைக்கப்படுகிறது பைலோசுகோபசு நைட்டிடசு எனும் இக்கதிர்குருவி தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள காகசசு மலைகளில் காணப்படும் ஒரு கதிர்குருவி சிற்றினம் ஆகும்.

அனைத்து இலை கதிர்குருவிகளைப் போல, இது முன்பு "பழைய உலக கதிர்குருவி" குழுவில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது புதிய இலை கதிர்குருவி குடும்பமான பைலோசுகோபிசுடேயினைச் சேர்ந்தது.[2][3] பைலோசுகோபசு என்ற பேரினத்தின் பெயர் பண்டைய கிரேக்க "இலை" எனும் பொருள் கொண்ட புல்லான் (phullon) மற்றும் "தேடுபவர்" (skopos) எனும் பொருள் கொண்ட இசுகோபோசு, (இசுகோப்பியோ (skopeo)- "பார்க்க") ஆகியவற்றிலிருந்து வந்தது. சிற்றினப் பெயரான நைட்டிடசு இலத்தீன் மொழியிலிருந்து வந்தது. இதன் பொருள் "பிரகாசிக்கிறது" என்பதாகும்.

இது பச்சை நிறக் கதிர்குருவிகளுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது, ஆனால் பிரகாசமான நிறத்தில் உள்ளது. மேலும் அடிப்பகுதி மிகவும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. இது வலுவான மற்றும் மங்கலான இறக்கையைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_கதிர்குருவி&oldid=4053041" இலிருந்து மீள்விக்கப்பட்டது