பக்த கௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்த கௌரி
இயக்கம்எஸ். நோதானி
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
நடிப்புஎஸ். டி. சுப்பையா
நாகர்கோவில் கே. மகாதேவன்
கே. கே. பெருமாள்
காளி என். ரத்னம்
எல். நாராயண ராவ்
யு. ஆர். ஜீவரத்தினம்
பி. ஏ. ராஜாமணி
பி. எஸ். சிவபாக்கியம்
வெளியீடுஏப்ரல் 5, 1941
நீளம்18700 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

யு. ஆர். ஜீவரத்தினம் முதன் முதலில் இத்திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாடிய தெருவில் வாராண்டி, வேலன் தேடி வாராண்டி பாடல் இவருக்குப் புகழ் பெற்றுக் கொடுத்தது.

கதைச் சுருக்கம்[தொகு]

இத்திரைப்படத்தின் கதை திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. சிவனும் விஷ்ணுவும் ஒருவரா அல்லது வேறு வேறா என்பதே கதையின் கரு. இது குறித்து பூலோகத்தில் பல வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. நாரத முனிவரின் படி இருவரும் ஒருவரே. நாரதர் இவ்வாக்குவாதம் குறித்து சிவனுக்குத் தெரிவிக்கிறார். இதனை நிரூபிக்க, சைவத் தம்பதிகள் இருவரையும் (கே. கே. பெருமாள், ராஜாமணி) ஆசீர்வதிக்கிறார். இவர்களது மகள் (ஜீவரத்தினம்) வைணவ இளைஞர் ஒருவரை (எஸ். டி. சுப்பையா) சந்தித்து மணந்து கொள்கிறாள். அவளது மாமியார் (சிவபாக்கியம்) இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாள். பல இன்னல்களுக்கு மத்தியில் இருவரும் ஒன்றிணைந்து சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என நிரூபிக்கின்றனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்துக்கான பாடல்களை யாத்தவர் எஸ். வேலுசாமி கவி.

இசை வழங்கிய வாத்திய குழுவினர்:

  • டி.எம்.இப்ராஹீம் ... ஆர்கன்,பியானா
  • பி(B). ரெங்கையா நாயுடு ... கிளாரினெட்.
  • எம். கே. நடராஜா பாகவதர் ... பிடில் (வயலின்)
  • எஸ். ஆர். மருத பிள்ளை ... புல்லாங்குழல்
  • கே. ஆர். ஹரிஹர ஐயர் ... ஜலதரங்கம்
  • எஸ். அப்துல் காதர் ... சாரங்கி
  • டி. பி. சின்னையா ... தபேலா
  • டி. ஆர். ராவ் ... கடம்
  • எஸ். பி. பொன்ராஜ் ... உடோபோன்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_கௌரி&oldid=2706007" இருந்து மீள்விக்கப்பட்டது