நோவார்ட்டீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோவார்ட்டீசு இன்டர்நேசனல் ஏஜி
வகைபொது AG
நிறுவுகை1996 (ஒருங்கிணைப்பிற்கு பிறகு)
தலைமையகம்பேசெல், சுவிட்சர்லாந்து
முக்கிய நபர்கள்டேனியல் வாசெல்லா (தலைவர்), ஜோசப் ஜிமனெசு (முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைமருந்து தயாரிப்பு
உற்பத்திகள்மருந்துகள், வர்க்க மருந்துகள், நேரடி விற்பனை மருந்துகள், தடுப்பு மருந்துகள், அறுதியிடல் கருவிகள், தொடு வில்லைகள், கால்நடை மருத்துவம் (பட்டியல்...)
வருமானம் US $58.566 பில்லியன் (2011)[1]
இயக்க வருமானம் US $10.998 பில்லியன் (2011)[1]
நிகர வருமானம் US $9.245 பில்லியன் (2011)[1]
மொத்தச் சொத்துகள் US $117.496 பில்லியன் (2011)[1]
மொத்த பங்குத்தொகை US $65.940 பில்லியன் (2011)[1]
பணியாளர் 119,418 (முழு-நேர சமானம், இறுதி 2010)[1]
துணை நிறுவனங்கள்சிபா விசன், சாண்டோசு, அல்கான், சிரான் கார்ப்பொரேசன்
இணையத்தளம்www.novartis.com

நோவார்ட்டீசு இன்டர்நேசனல் ஏஜி (Novartis International AG) சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரைத் தலைமையகமாகக் கொண்ட ஓர் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகும். $46.806 பில்லியன் ஆண்டு வருமானமுள்ள இந்நிறுவனம் 2010ஆம் ஆண்டில் உலகின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டாவது நிலையில் இருந்தது.[2]

நோவார்ட்டீசு கிளோசபைன் (கிளோசாரில்), டைக்ளோஃபீனாக் (வோல்டரென்), கார்பமசெபைன் (டெக்ரெடோல்), வல்சார்ட்டன் (டியோவான்) மற்றும் இமாடினிப் மெசைலேட் (கிளீவெக்/க்ளிவெக்) போன்ற மருந்துகளைத் தயாரிக்கிறது. கூடுதலாக சைக்ளோசுபோரின் (நியோரல்/சான்டிமுன்), லெட்ரோசோல் (ஃபெமரா), மிதைல்பெனிடேட் (ரிடாலின்), டெர்பினபைன் (லாமிசில்), மற்றும் பிற மருந்துகளையும் தயாரிக்கிறது.

பெரியளவில் வர்க்க மருந்துகளை (generic drug) தயாரித்து வந்த சாண்டோசு என்ற நிறுவனத்தை சிபா-கெய்கி கையகப்படுத்தி ஒருங்கிணைத்து நோவார்ட்டீசு எனப் பெயரிட்டது. இந்தநிறுவனம் மழலையர் மற்றும் குழந்தைகள் உணவு பொருட்கள் தயாரித்து வந்த கெர்பர் நிறுவனத்திற்கு உரிமையானதாக இருந்தது. செப்டம்பர் 1, 2007இல் இதனை நெஸ்லே நிறுவனம் வாங்கியது.[3][4][5]நோவார்ட்டீசு ஐரோப்பிய மருந்து தயாரிப்பு தொழில் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பிலும் (EFPIA)[6]பன்னாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பிலும் (IFPMA)முழுமையான அங்கத்துவம் பெற்றுள்ளது.

வரலாறு[தொகு]

பேசெல் நகரில் அமைந்துள்ள நோவார்ட்டீசு நிறுவனத்தின் தலைமையகம்.

நோவார்ட்டீசு இரு பழமையான நீண்ட வரலாறுடைய சுவிட்சர்லாந்து நிறுவனங்களான சிபா-கெய்கி மற்றும் சாண்டோசு இலாபரேட்டரீசு இரண்டையும் ஒன்றிணைத்து 1996இல் உருவாக்கப்பட்டதாகும். 1970இல் ஜே. ஆர். கெய்கி லிமிட் (பேசலில் 1758இல் நிறுவப்பட்டது) நிறுவனமும் சிபா (பேசலில் 1859இல் நிறுவப்பட்டது) நிறுவனமும் இணைந்து சிபா-கெய்கி உருவானது. இணைந்த நிறுவனங்களின் வரலாற்றை வைத்து பார்க்கும்போது புதியநிறுவனம் 250 ஆண்டுக்கால வரலாற்றுக்கு உரிமை கொண்டாடுகிறது. [7]

இந்தியப் காப்புரிமை சட்டங்களுடன் முரண்பாடு[தொகு]

காப்புரிமை பெற்ற மருந்துகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் வர்க்க மருந்துகளைத் தயாரிக்க தடை கோரி 2006இல் நோவார்ட்டீசு இந்தியாவிற்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடுத்தது.[8] ஏற்கெனவே உள்ள ஒரு மருந்தின் மூலக்கூற்றை சற்றே மாற்றிய புதிய மருந்துகளுக்கான காப்புரிமையை இந்தியா அங்கீகரிக்க மறுத்ததை ஒட்டி இவ்வழக்கு போடப்பட்டது.[9] ஆக்சுபோம் "இவ்வழக்கை நோவார்ட்டீசு வென்றால் உலகின் பல்லாயிரக்கணக்கான வறுமையில் வாடும் மக்கள் தாங்கள் வாங்கக்கூடிய விலையிலுள்ள மருந்துகளை இழப்பர்" எனக் கூறியது.[10] அக்சுபோமும் ஃபெயர்பென்சன்சு அமைப்புகளும் இணைந்து நோவார்ட்டிசின் இந்தமுறையீட்டை இரத்து செய்ய தங்கள் பங்கு வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நிறுவன பங்குதாரர்களுக்கு கோரிக்கை விடுத்தன. ஆகத்து 5, 2007இல் சென்னை உயர் நீதிமன்றம் நோவார்ட்டீசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி "நோவார்ட்டீசின் சட்ட முறையீடு - அதனுடைய காப்புரிமை மருந்துகளுக்குள்ளேயே போட்டியை மட்டுப்படுத்துவதாகும் - புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் எய்ட்சு, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களால் வருந்தி அவற்றுக்கு பணம் செலுத்த முடியாத ஏழை மக்களுக்கான அச்சுறுத்தல்" எனக் கூறியது.[11] உயர் நீதிமன்றம் மேலும் உலக வணிக அமைப்பு காப்புரிமை வழிகாட்டுதல்களுக்கு இணங்கி உள்ளதா என தீர்ப்பு வழங்க தனக்கு ஆட்சிப்பரப்பு இல்லை எனவும் அறிவித்தது.

இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேலான மக்கள் இந்த வழக்கை கைவிடும்படி நோவார்ட்டீசின் முதன்மை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதினர். இருப்பினும் இத்தீர்ப்பை எதிர்த்தும் தலையிடலை வேண்டியும் நோவார்ட்டீசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.[12]ஏப்ரல்1, 2013 அன்று உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது.[13]. உச்ச நீதிமன்றம் புதிய மருந்து "புதுமைக்கான அல்லது கண்டுபிடிப்பிற்கான சோதனையில் தேறவில்லை" எனக் கூறியது.[14] இதற்கு எதிர்வினையாக, இந்தியாவில் மருந்து ஆராய்ச்சியில் தான் முதலீடு செய்யப்போவதில்லை என நோவார்ட்டீசு அறிவித்துள்ளது.[15]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2010" (PDF). Novartis. http://www.novartis.com/downloads/investors/reports/novartis-annual-report-2010-en.pdf. பார்த்த நாள்: 27 January 2011. 
  2. "Top 20 global corporations". IMS. http://www.imshealth.com/deployedfiles/ims/Global/Content/Corporate/Press%20Room/Top-line%20Market%20Data/2010%20Top-line%20Market%20Data/Top_20_Global_Companies.pdf. பார்த்த நாள்: 2012-01-06. 
  3. Lua error in Module:Citation/CS1 at line 3818: attempt to index local 'arch_text' (a nil value).
  4. François-Xavier Perroud, ed. (12 April 2007), Nestlé Consolidates Nutrition Leadership Position Through Acquisition of Gerber (press release), Nestlé, nestle.com, retrieved November 11, 2009[தொடர்பிழந்த இணைப்பு]
  5. François-Xavier Perroud, ed. (3 September 2007), Nestlé completes its acquisition of Gerber (press release), Nestlé, nestle.com, retrieved November 11, 2009[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "The Pharmaceutical Industry in Figures - 2008 Edition" (PDF). European Federation of Pharmaceutical Industries and Associations (EFPIA). p. 49 இம் மூலத்தில் இருந்து 2008-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20080916100937/http://www.efpia.eu/content/default.asp?PageID=559&DocID=4883. பார்த்த நாள்: 2008-08-25. 
  7. "Company history", corporate website, Novartis, novartis.com, archived from the original on 2010-12-30, retrieved 2013-04-03
  8. "India's cheap drugs under patent threat". BBC News. 2007-02-15. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6358721.stm. பார்த்த நாள்: 2007-04-07. 
  9. "Indian ruling against pharmaceutical giant Novartis a victory for public health". Maketradefair.com. 2006-11-23. http://www.maketradefair.com/en/index.php?file=a2m_main.html. பார்த்த நாள்: 2012-01-16. 
  10. "Oxfam International". Make Trade Fair. 2006-11-23. http://www.maketradefair.com/en/index.php?file=a2m_novartis_12022007.htm. பார்த்த நாள்: 2012-01-16. 
  11. "Ibid. Patients before Profits". Maketradefair.com. 2006-11-23. http://www.maketradefair.com/en/index.php?file=a2m_main.html. பார்த்த நாள்: 2012-01-16. 
  12. Priscilla Jebaraj (2011-09-06). "Ibid. The Hindu". Thehindu.com. http://www.thehindu.com/news/national/article2427529.ece. பார்த்த நாள்: 2012-01-16. 
  13. "Novartis: India rejects patent plea for cancer drug Glivec". 1 April 2013. http://www.bbc.co.uk/news/business-21991179. பார்த்த நாள்: 1 April 2013. 
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.google.com/hostednews/afp/article/ALeqM5iyC9u1HoA7Rlmn3jrFtUcIHuSx3g. 
  15. "Drug giant loses India patent case". 3 News NZ. 2 April 2013 இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131017123314/http://www.3news.co.nz/Drug-giant-Novartis-loses-India-patent-case/tabid/417/articleID/292613/Default.aspx. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவார்ட்டீசு&oldid=3791519" இருந்து மீள்விக்கப்பட்டது