உள்ளடக்கத்துக்குச் செல்

தொடு வில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடு வில்லை

தொடு வில்லை (Contact Lens) பார்வைக் குறைபாட்டை சீர் செய்கின்ற, நேரடியாக கண்ணின் விழிவெண்படலத்தில் அணியப்படுகின்ற ஒருவித வில்லையாகும். இது செக்கோசுலோவாக்கியா வேதியியலாளர்களான ஒட்டோ விச்ரேலே (Otto Wichterle), டிராஃகோசுலாவ் லிம் (Drahoslav Lim) ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடுவில்லையானது மூக்குக் கண்ணாடியைப் போன்று பார்வைக் குறைபாட்டை சீர் செய்கின்றமைக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் இது பாரமற்றது; ஏறத்தாழ மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாத வகையில் மிகவும் மென்மையானதாக காணப்படுகின்றது. சில தொடுவில்லைகள் கண்ணுக்கு புலனாகும் விதத்தில் கண்ணின் "கருமணியின்" நிறத்தை மாற்றி காட்டக்கூடியனவும் உண்டு.

உலகளாவிய வகையில் மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் 125 மில்லியன் மக்கள் தொடுவில்லையைப் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. இது உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 2% [1]. இதில் அமெரிக்காவில் மட்டும் 28 முதல் 38 மில்லியன் மக்கள் வரையிலும்[1][2], நிப்பானில் மேலும் ஒரு 13 மில்லியன் மக்களும்[3] பயன்படுத்துகிறார்கள்.

மனிதனது முதன்மையான உறுப்புக்களில் ஒன்றான கண்ணுக்கு பாவிக்கப்படும் ஒன்றாகையால் இதனை ஒரு வித மருந்துப்பொருள் கலந்த நீர்மத்தில் அமிழ்த்தி சேமித்து வைக்கப்படும். இவை அணியப்படுவதற்கு பல காரணங்களைக் கூறலாம். மூக்குக் கண்ணாடியினை விட இவை பரந்த பார்வையினை அளிக்கக்கூடியது. ஈரலிப்பான காலநிலையில் பாதிப்பு குறைவானதாக இருக்கும்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. 1.0 1.1 Barr, J. "2004 Annual Report". Contact Lens Spectrum. January, 2005.
  2. Dixie Farley. "Keeping an Eye on Contact Lenses: Safety, Options Shape Contact Lens Decisions." U.S. Food and Drug Administration: FDA Consumer. March-April 1998; revised August 1998.
  3. National Consumer Affairs Center of Japan. NCAC News Vol. 12, No. 4 பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம். NCAC News. March, 2001.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடு_வில்லை&oldid=3711424" இலிருந்து மீள்விக்கப்பட்டது