அல்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்கான் ஆய்வகங்கள் Alcon Laboratories,
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகைஅமெரிக்கா, டெக்சாசு, வொர்த் கோட்டை (1945)
தலைமையகம்வொர்த் கோட்டை, USA[1]
முக்கிய நபர்கள்டேவிட் எண்டிகாட்
(சி.இ.ஓ)
தொழில்துறைகண்ணியல்
உற்பத்திகள்அறுவை சிகிச்சை உபகரணங்கள்
விழி உள்வில்லைகள்
விற்பனை மருந்துகள்
வருமானம் $7.1 பில்லியன் அமெரிக்க டாலர் (2018) [2]
பணியாளர்20,000+ (2017)
இணையத்தளம்www.alcon.com
சியார்ச்சிய அல்கான் அலுவலகம்

அல்கான் (Alcon) என்பது அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள வொர்த் கோட்டை நகரத்தில் அமைந்துள்ள கண்நலப் பொருட்கள் தயாரிக்கும் ஓர் உலகாய நிறுவனமாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரிபோர்க்கு நகரத்திலும், அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள வொர்த் கோட்டையிலும் இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அல்கான் நோவார்ட்டீசு என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனமாகவே இருந்தது.

வரலாறு[தொகு]

அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள வொர்த் கோட்டை நகரத்தில் 1945 ஆம் ஆண்டு அல்கான் நிறுவனம் தொடங்கப்பட்டது [3]. அல்கான் நிறுவனம் வொர்த் கோட்டையில் ஒரு சிறிய மருந்தகமாகத் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர்களான மருந்தாளுநர்கள் ராபர்ட் அலெக்சாண்டர் மற்றும் வில்லியம் கானர் ஆகியோரின் பெயரிலிருந்து அல்கான் என பெயரிடப்பட்டது. கானர் மற்றும் அலெக்சாண்டர் நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட கண் சிகிச்சை தயாரிப்புகளில் கவனம் செலுத்தினர்.

சுவிட்சர்லாந்தின் நெசுட்லே நிறுவனம்1977 ஆம் ஆண்டில் அல்கானை வாங்கியது. அல்கான் நிறுவனம் அதன் உற்பத்தி திறனை தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய ஆலைகளுடன் விரிவுபடுத்தியதுடன் ஆராய்ச்சியிலும் அதன் முதலீட்டை வெகுவாக அதிகரித்தது. 1979 ஆம் ஆண்டில் அல்கான் டெக்சாசு மருந்து நிறுவனத்தை வாங்கியது. இந்நிறுவனம் டெக்சாசின் தோல் சிகிச்சை தயாரிப்பு நிறுவனமாக மாறியது. தற்போது அது டிபிடி ஆய்வகங்கள் என்ற பெயரில் செயல்படுகிறது. 1984 ஆம் ஆண்டில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் சிறப்பான சாதனைகளை ஊக்கப்படுத்துவதற்காக அல்கான் தொழில்நுட்ப சிறப்பு விருது ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவரையில் 100 நபர்களுக்கும் மேற்பட்ட பெறுநர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அல்கான் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசை மருந்துகளிலிருந்து அறுவை சிகிச்சை அரங்கிற்கும் விரிவடைந்துள்ளது. இன்று அல்கான் நிறுவனம் 75 நாடுகளில் செயல்பட்டு வருகிறது, அவற்றின் தயாரிப்புகள் 180 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகின்றன.

நெசுலே 2002 ஆம் ஆண்டில் அல்கானின் தனது பங்குகளில் 25 சதவீதத்தை ஆரம்ப பொது வழங்கலை நடத்தியது. இந்த பங்கு சூலை 2008 இல் பொதுநிதிச் சின்னமான ஏ.எல்.சி இன் கீழ் வர்த்தகம் செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நெசுலேவின் மீதமுள்ள பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்துடன். நோவார்டிசு நிறுவனம் அல்கானில் நெசுலேவின் பங்குகளில் சுமார் 25 சதவீதம் பங்குகளை வாங்கியது[4].

நோவார்டிசு நிறுவனம் நெசுலேவிடம் 52 சதவீதம் பங்குகளை 28.1 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இந்த ஒப்பந்தம் காரணமாக நோவார்டிசின் மொத்த உரிமை 77 சதவீதமாக உயர்ந்து பெருகியது. சனவரி 2010 முதல் நோவார்டிசு முறையாக அல்கானின் மீதமுள்ள பங்குகளை வாங்குவதற்கான விருப்பங்களை பூர்த்தி செய்வதாக அறிவித்தது. .பின்னர் உடனடியாக அல்கானை ஒன்றிணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் ஆகியவற்றைத் தொடர வேண்டும். என திட்டமிட்டது[5].

2010 ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று, அல்கான் சிரியான் சிகிச்சை முறை நிறுவனத்திடமிருந்து டூரெசோல் மற்றும் சைக்ளோரின் ஆகிய மருந்துகளை வாங்கியது. அமெரிக்காவில் டூரெசோல் குழம்பின் உரிமைகளையும், சைக்ளோரினுக்கான லத்தீன் அமெரிக்க உரிமையைத் தவிர்த்து, உலகளாவிய உரிமைகளையும் சிரியான் சிகிச்சை முறை நிறுவனத்திடமிருந்து அல்கான் நிறுவனம் ஒப்புதல் பெற்றது[6].

2010 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 அன்று, அல்கானின் சுயாதீன இயக்குநர் குழு, நோவார்டிசு நிறுவனத்தின் இணைப்பு முன்மொழிவைப் பற்றி நிறுவனத்தின் வாரியம் முடிவு செய்வதற்கு முன்னர் குழுவின் பரிந்துரை ஒரு இன்றியமையாத முதல் படியாகும் என்று அறிவித்தது, இது ஒருதலைப்பட்சமாக முடியும் என்று நோவார்ட்டிசின் பொது மக்களை சம்பந்தப்படுத்துவதை மறுத்தது. நோவார்டிசு அல்கோனின் பெரும்பான்மை பங்குதாரராக ஆனவுடன் சுயாதீன இயக்குநர் குழுவின் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தவில்லை.. 2010 ஆம் ஆண்டு சூலை மாதம் எட்டாம் தேதியில் அல்கானின் சுயாதீன இயக்குநர் குழுவானது நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களுக்கு ஏலதாரர் நோவார்டிசு நிறுவனத்திடமிருந்து சிறந்த ஒப்பந்தத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக 50 மில்லியன் டாலர் வழக்காடும் அறக்கட்டளை ஒன்றை அமைத்தது[7].

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பதாம் நாளன்று அல்கான் நோவார்டிசிடமிருந்து 100% இணை உற்பத்தியை தொடங்கியது[8][9].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கான்&oldid=2917607" இருந்து மீள்விக்கப்பட்டது