உள்ளடக்கத்துக்குச் செல்

நோகை நாடோடிக் கூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோகை நாடோடிக் கூட்டம் (Nogai Horde) என்பது நோகை இனத்தவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இது பான்டிக்-காசுப்பியன் புல்வெளியை சுமார் 1500ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமித்திருந்தது. 17ஆம் நூற்றாண்டில் மேற்கு நோக்கி கல்மிக்குகளாலும், தெற்கு நோக்கி உருசியர்களாலும் இடம்பெற செய்ய வைக்கப்படும் வரை இது நீடித்திருந்தது. மங்குத் என்று அழைக்கப்பட்ட மங்கோலிய பழங்குடியினத்தவர் நோகை நாடோடிக் கூட்டத்தின் மையப் பகுதியை அமைத்திருந்தனர்.

13ஆம் நூற்றாண்டில் தங்க நாடோடிக் கூட்டத்தின் தலைவரான நோகை கான் பல்வேறு துருக்கிய பழங்குடியினங்களுடன் இந்த மங்குத்துகளின் ஓர் இராணுவத்தை உருவாக்கினார். இவர் செங்கிஸ் கானின் மகன் சூச்சியின் நேரடி வழித்தோன்றல் ஆவார். ஒரு நூற்றாண்டுக்கு பிறகு நோகைகளுக்கு எதிகு தலைமை தாங்கினார். இவர் மங்குத் வழித் தோன்றலைச் சேர்ந்த ஒரு தளபதி ஆவார். இவர் தாய் வழியில் சூச்சியின் வழித்தோன்றலாக இருந்தார். இவர் நோகை அரசமரபை தோற்றுவித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Khodarkovsky, Russia's Steppe Frontier p. 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோகை_நாடோடிக்_கூட்டம்&oldid=3775417" இலிருந்து மீள்விக்கப்பட்டது