நைட்ரசக் காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Cytosine
Thymine
Uracil
Adenine
Guanine

நைட்ரசக் காரம் (Nitrogenous base) என்பது நைட்ரசன் அடங்கியிருக்கும் காரம் என்று பொருள்படும். ஒரு கரிம மூலக்கூறில் இடம்பெற்றுள்ள நைட்ரசன் அணு ஒரு காரத்தின் வேதிப் பண்புகளைப் பெற்றிருக்குமேயானால் அக்கரிம மூலக்கூறை நைட்ரசக் காரம் என்று அழைக்கலாம். உட்கரு அமிலங்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருப்பதுதான் நைட்ரசக் காரத்தின் முக்கியமான உயிரியல் செயல்பாடு ஆகும். ஒரு நைட்ரசக் காரமானது தன்னுடைய காரப்பண்புகளை நைட்ரசனின் தனித்த இலத்திரன் இரட்டைகளுக்குக் கொடுக்கிறது.

தளமூலக்கூற்று வடிவம், வளையப் பண்பு, முனைவற்ற தன்மை முதலான காரணங்களால் பிரிமிடின் மற்றும் பியூரின் போன்ற மூலச்சேர்மங்களின் வழிப்பொருட்களே நைட்ரசக் காரங்கள் எனக் குறிப்பிட்டு வகைப் படுத்தப்படுகின்றன.[1] பிரிமிடின், பியூரின் ஆகிய இரண்டு சேர்மங்களும் பிரிடின் சேர்மத்தை ஒத்திருக்கின்றன. எனவே இவையிரண்டும் வலிமை குறைந்த காரங்களாகும். எனவே இலத்திரன் கவர் வளையபதிலீட்டு வினைகளில் இவை பங்கேற்பதில்லை.[2]

உட்கரு அமிலங்களில் நைட்ரசக் காரம்[தொகு]

உயிரின அறிவியல் துறையில் இத்தகைய நைட்ரசக் காரங்கள் மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உட்கருக்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை உட்கரு அமிலங்களின் செயல்பாட்டில் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. டி,என்,ஏ மற்றும் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் கட்டுமானத் தொகுதிகள் செயல்படுவதற்கு இவற்றின் தளமூலக்கூற்று வடிவம் பெரிதும் உதவுகிறது. நியுக்ளியோடைடு எனப்படும் உட்கருக்கூறுகளின் கட்டுமானத்திற்கு ஐந்து வகையான நைட்ரசக் காரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு உருவான உட்கருக்கூறுகள் தங்களுக்குள் இணைந்து டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ. போன்ற உட்கரு அமிலங்களை உருவாக்குகின்றன. அடினின் (A), யுராசில் (U), குவானின் (G), தைமின் (T), மற்றும் சைட்டோசின் (C) என்பவை இந்த ஐந்து வகையான நைட்ரசக் காரங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nelson and Cox 2008, p. 272.
  2. Carey 2006, p. 1206.
  • Nelson, David L. and Michael M Cox (2008). Principles of Biochemstry, ed. 5, W.H. Freeman and Company.
  • Carey, Francis A. (2008). Organic Chemistry, ed. 6, Mc Graw Hill.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரசக்_காரம்&oldid=1996392" இருந்து மீள்விக்கப்பட்டது