நேரு விளையாட்டரங்கம், கோட்டயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
Jawaharlal Nehru Stadium
നാഗമ്പടം സ്റ്റേഡിയം
அமைவிடம்கோட்டயம், கேரளம்
உருவாக்கம்1972
இருக்கைகள்18,000
உரிமையாளர்கேரள அரசு
கட்டிடக் கலைஞர்தகவல் இல்லை
இயக்குநர்கோட்டயம் நகராட்சி
முடிவுகளின் பெயர்கள்
கிரீன் பார்க்கு முனை
பாலம் முனை
25 சூலை 2015 இல் உள்ள தரவு
மூலம்: Cricinfo

சவகர்லால் நேரு விளையாட்டரங்கம் (Nehru Stadium, Kottayam) இந்தியாவின் கேரளாவிலுள்ள கோட்டயத்தில் உள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். இந்த விளையாட்டரங்கம் பெரும்பாலும் தடகளம் மற்றும் கால்பந்து போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சவகர்லால் நேருவின் பெயரில் உள்ள இந்திய மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். .

18,000 பேர் உட்கார்ந்து பார்க்கும் திறன் கொண்ட இந்த விளையாட்டரங்கம் 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1972 முதல் 1993 ஆம் ஆண்டு வரை துடுப்பாட்டப் போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன. இங்கு ஐந்து முதல்தர போட்டிகளும் [1] இரண்டு பட்டியல் ஏ வகைப் போட்டிகளும் நடந்தன. [2] நீச்சல் குளம், செயற்கைப் பாதை, கூடைப்பந்து மற்றும் தென்னிசு மைதானங்கள் போன்றவற்றுடன் 2014 ஆம் ஆண்டு இந்த விளையாட்டரங்கம் புதுப்பிக்கப்பட்டது [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Firs-class matches". பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  2. "List A". பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  3. "Nehru Stadium to be modern sports complex". 26 January 2014. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/nehru-stadium-to-be-modern-sports-complex/article5619440.ece. 

புற இணைப்புகள்[தொகு]