நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 12°56′53″N 80°09′43″E / 12.9480°N 80.1619°E / 12.9480; 80.1619
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்
நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்
நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில், நெமிலிச்சேரி, குரோம்பேட்டை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°56′53″N 80°09′43″E / 12.9480°N 80.1619°E / 12.9480; 80.1619
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:செங்கல்பட்டு மாவட்டம்
அமைவிடம்:நெமிலிச்சேரி, குரோம்பேட்டை
சட்டமன்றத் தொகுதி:பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:51 m (167 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அகத்தீசுவரர்
தாயார்:ஆனந்தவல்லி தாயார்
குளம்:அகத்திய புஷ்கரணி
வரலாறு
கட்டிய நாள்:ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது
அமைத்தவர்:குலோத்துங்க சோழன்

நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் குரோம்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள நெமிலிச்சேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 51 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 12°56′53″N 80°09′43″E / 12.9480°N 80.1619°E / 12.9480; 80.1619 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் இறைவி ஆனந்தவல்லி தாயார் ஆவர். இவர்களது சன்னதிகளுடன், சூரியன், சந்திரன் மற்றும் பைரவர் சன்னதி குறிப்பிடத்தக்கவை ஆகும். இக்கோயிலின் தலவிருட்சம் அரசமரம் மற்றும் தீர்த்தம் அகத்திய புஷ்கரணி ஆகும்.[5]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற கோயில்களில் திருப்பணிகள் நடக்கவுள்ள 55 கோயில்களில், நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயிலும் ஒன்றாகும்.[6] இக்கோயிலின் குளத்தை செம்மைப்படுத்த, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  2. Hariprasath (2018-11-24). "நீண்ட கால நோய்கள் இக்கோயிலில் வழிபட்டால் தீரும் தெரியுமா?". Dheivegam. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  3. "நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடி மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  4. Manoj Krishnamoorthi. "Nemilichery Agatheeswarar Temple". Search Around Web. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  5. "Agastheeswarar Temple : Agastheeswarar Agastheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  6. "55 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.41 கோடி: குழு அமைத்து பணிகள் துவங்க நடவடிக்கை - Dinamalar Tamil News" (in ta). 2022-05-27. https://m.dinamalar.com/detail.php?id=3039381. 
  7. "பல கோடி ரூபாயில் மாமல்லை கோவில்கள்...புதுப்பிப்பு!:சுற்றுலா பயணியரை கவர மேம்பாட்டு பணிகள் - Dinamalar Tamil News" (in ta). 2022-05-12. https://m.dinamalar.com/detail.php?id=3028193. 

வெளி இணைப்புகள்[தொகு]