நீளக்கால் கொசு உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீளக்கால் கொசு உள்ளான்
Calidris subminuta - Pak Thale.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: இசுகோலோபாசிடே
பேரினம்: கேலிடிரிசு
இனம்: கே. சப்மினுட்டா
இருசொற் பெயரீடு
கேலிடிரிசு சப்மினுட்டா
மிட்டெண்டார்ப், 1853
வேறு பெயர்கள்

எரோலியா சப்மினுட்டா

நீளக்கால் உள்ளான் (Long-toed stint) கேலிடிரிசு சப்மினுட்டா), என்பது ஒரு சிறிய கரைப்பறவை ஆகும். இதன் பேரினத்தின் பெயர்  பண்டைய கிரேக்கச் சொல்லான kalidris அல்லது skalidris என்ற சொல்லில் இருந்தும் இனப்பெயர் லத்தீன் சொல்லான subminuta என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது, எனவே Calidris minuta.[2]

பரவல்[தொகு]

தென்மேற்கு சைபீரியாவின் வனப்பகுதிகளில் தொடங்கி மங்கோலியா, கோர்யாக் மலையின் பனிச்சமவெளிப் பகுதிகள், வடகிழக்கு காம்சட்கா, கமாண்டர் தீவுகள், வட குரில் தீவுகளும் இவற்றின் இனப்பெருக்கப் பகுதிகளாக இருக்கலாம். குளிர்காலங்களில் (குறிப்பாக, சூலை முதல்) இந்தியாவின் கிழக்குப் பகுதி, இலங்கை, தென்கிழக்கு ஆசியா தொடங்கி தாய்வான் வரையிலும் தெற்கே பிலிப்பைன்சு, இந்தோனேசியா, மேற்கு ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆஸ்திரேலியா வரை வலசை செல்லும்[3].

உடலமைப்பு தோற்றம்[தொகு]

நீளக்கால் உள்ளான் ஒரு மிகச் சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் நீளம் வெறும் 13 முதல் 16 செமீ ; இறக்கைகளின் அகலம் 26.5 முதல் 30.5 செமீ; எடை 25 கி. [4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Calidris subminuta". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 84, 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. 
  3. "Long-toed Stint". 25 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Calidris subminuta — Long-toed Stint". Species Profile and Threats Database. Australian Government: Department of the Environment. 2014-02-18 அன்று பார்க்கப்பட்டது.
  5. Hayman, Peter; Marchant, John; Prater, Tony (1986): Shorebirds: an identification guide to the waders of the world.