உள்ளடக்கத்துக்குச் செல்

நிரந்தர பற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரந்தர பற்கள்
நிரந்தர பற்கள், வாய் முழுவதும்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்dentes permanentes
TA98A05.1.03.077
TA2913
FMA75152
உடற்கூற்றியல்

நிரந்தர பற்கள் (Permanent teeth) அல்லது முதிர்ந்த பற்கள் இருமுறைபல்லமைப்பு கொண்ட பாலூட்டிகளில் தோன்றும் இரண்டாவது பற்கள் ஆகும். மனிதர்கள் மற்றும் பழைய உலக சிமியன்களில், முப்பத்திரண்டு நிரந்தர பற்கள் உள்ளன. இதில் ஆறு மேல் மற்றும் கீழ் தாடைப் கடைவாய்ப் பற்கள், நான்கு மேல் மற்றும் கீழ் தாடை முன்கடைவாய் பற்கள், இரண்டு மேல் மற்றும் இரண்டு கீழ்த்தாடை கோரைப் பற்கள், நான்கு மேல் மற்றும் நான்கு கீழ்த்தாடை வெட்டுப் பற்கள் ஆகும்.[1]

காலவரிசை

[தொகு]

பொதுவாக குழந்தைகளின், ஆறாவது வயதில் முதல் நிரந்தரப் பல் வாயில் தோன்றும். பின்னர் வாயில் பாற் (அல்லது உதிரும் பல்) பற்கள் மற்றும் நிரந்தரப் பற்கள் இரண்டும் காணப்படும்.[2]

நிரந்தரப் பற்களில் முதன்மையானது, முதன்மைப் பற்களின் கடைசி 'பால்' கடைவாய்ப்பற்களுக்குப் பின்னால் நிரந்தரமான முதல் கடைவாய்ப்பற்கள் ஆகும். இந்த முதல் நிரந்தர கடைவாய்ப்பற்கள் நிரந்தர பற்களின் சரியான வளர்ச்சிக்கு முக்கியமானவை. பதின்மூன்று வயது வரை 32 நிரந்தரப் பற்களில் 28 பற்கள் தோன்றும்.

நிரந்தரப் பற்கள் முழு நிரந்தரப் பற்கள் தோன்றும் காலத்தின் பின்பகுதியில் தோன்றுகின்றன.[3] நான்கு கடைசி நிரந்தர பற்கள், மூன்றாவது கடைவாய்ப்பற்கள், பொதுவாக 17 முதல் 38 வயதுக்குள் தோன்றும். இவை அறிவுப் பற்களாகக் கருதப்படுகின்றன.[4]

நோயியல்

[தொகு]

கூடுதல் அல்லது "தேவைக்குமிகுந்த" பற்கள் இருப்பதும் சாத்தியமாக உள்ளது. இந்த நிகழ்வு தெற்றுப்பல் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் தவறான "பற்களின் மூன்றாவது தொகுப்பு" என்று இவை குறிப்பிடப்படுகிறது. இந்த பற்கள் வாயில் தோன்றலாம் அல்லது எலும்பின் தாக்கமாகவும் இருக்கலாம். தெற்றுப்பல் பெரும்பாலும் உதடு மற்றும் அண்ணப் பிளவு, ட்ரைக்கோ-ரினோ-பாலன்ஜியல் நோய்க்குறி, காரைக் கபாலத் திரிபு வளர்ச்சி மற்றும் கார்ட்னர் நோய்க்குறி போன்ற நோய்க்குறிகளுடன் தொடர்புடையது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tooth eruption: The permanent teeth". American Dental Association. Archived from the original (PDF) on July 15, 2016.
  2. "Permanent tooth eruption chart". American Dental Association.
  3. lllustrated Dental Embryology, Histology, and Anatomy. Elsevier. 1827-11. {{cite book}}: Check date values in: |date= (help)
  4. "Tooth eruption: The permanent teeth" (PDF). American Dental Association. Archived from the original (PDF) on June 27, 2012.
  • Ash, Major M. and Stanley J. Nelson, 2003. Wheeler’s Dental Anatomy, Physiology, and Occlusion. 8th edition.

This article incorporates text in the public domain from the 20th edition of Gray's Anatomy (1918)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரந்தர_பற்கள்&oldid=3641470" இலிருந்து மீள்விக்கப்பட்டது