நியூ ஹரைசன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ ஹரைசன்ஸ்
New Horizons
இயக்குபவர்நாசா
திட்ட வகைஅண்மிப்பது
அணுகிய விண்பொருள்ஜுப்பிட்டர், புளூட்டோ, சாரன்
அணுகிய நாள்ஜூலை 14, 2015
ஏவப்பட்ட நாள்ஜனவரி 19, 2006
ஏவுகலம்ஆட்லஸ் V-551
திட்டக் காலம்புளூட்டோவை அண்மிப்பது (>10 ஆண்டுகள்)
தே.வி.அ.த.மை எண்2006-001A
இணைய தளம்நியூ ஹரைசன்ஸ் இணையம்
நிறை478 கிகி
நியூ ஹரைசன்ஸ் இனால் காணப்பட்ட 132524 APL என்ற சிறுகோள்

நியூ ஹரைசன்ஸ் (New Horizons) என்பது தற்போது நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் ஒரு தானியங்கி விண்கலமாகும். இதுவே புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்ட முதலாவது விண்கலமாகும். இது புளூட்டோவையும் அதன் நிலாக்களான சாரன், நிக்ஸ், மற்றும் ஹைட்ரா ஆகியவற்றை ஆராயும்.

நியூ ஹரைசன்ஸ் விண்ணுளவி ஜனவரி 19, 2006 இல் புளோரிடாவில் உள்ள கேப் கனவேரல் வான்படைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இது பெப்ரவரி 28, 2007 இல் வியாழனை 5:43:40 UTC நேரத்தில் அண்மித்தது. புளூட்டோவை இது ஜூலை 2015 இல் இது புளூட்டோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பூமி சார்பான வேகம் 16.21 கிமீ/செ (36,260 மைல்/மணி) ஆகும். இதுவே இதுவரை விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில் அதிகூடிய வேகத்தைக் கொண்டதாகும்.

இதற்கான மொத்த செலவீனம் 15 ஆண்டுகளுக்கு (2001 இலிருந்து 2015 வரை) கிட்டத்தட்ட $650 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், மற்றும் சிறுகோள்களை தாண்டல்[தொகு]

ஏப்ரல் 7, 2006, 1000 UTC நேரத்திற்கு, இவ்விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டத்தை 21 கிமீ/செக் வேகத்தில் கடந்தது. அப்போது அது 243 மில்லியன் கிலோ மீட்டர் சூரிய தூரத்தில் இருந்தது.[1]

நியூ ஹரைசன்ஸ் தனது வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை ஜூன் 13, 2006 இல் சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. இச்சிறுகோளின் விட்டம் கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் ஆகும். இதிலிருந்து மிக வேகமாய்ச் செல்லும் பொருட்களை இனங்காணும் வலிமையை இவ்விண்கலம் பெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டது. ரால்ஃப் தொலைக்காட்டி மூலம் இதன் படங்கள் பிடிக்கப்பட்டன.[2]

பயணத் திட்டக் காலக்கோடு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஊடகம்[தொகு]

(சலனப்படம்)
நியூ ஹரைசன்ஸ் புறப்படல் (தகவல்)
நியூ ஹரைசன்ஸ் விண்ணுளவி கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஜனவரி 19, 2006 ஏவப்படல் (5.8 MB).
இந்த நிகழ்படத் துண்டினை சரியாக இயக்கிப்பார்க்க முடியவில்லையா?ஊடக உதவி ஆவணத்தை பார்வையிடவும்.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_ஹரைசன்ஸ்&oldid=3377062" இலிருந்து மீள்விக்கப்பட்டது