நாராயண் சுப்பாராவ் ஹார்திகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர் நாராயண் சுப்பாராவ் ஆர்திகர் (Narayan Subbarao Hardikar) (7 மே 1889   - 26 ஆகஸ்ட் 1975) இவர் ஓர் சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரசு சேவா தளத்தை நிறுவிய காங்கிரசு அரசியல்வாதியுமாவார்.

சுயசரிதை[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமான தார்வாரில் சுப்பாராவ் மற்றும் யமுனாபாய் ஆகியோருக்குப் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். [1] [2] கொல்கத்தாவின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர் பின்னர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் வாழ்க்கை[தொகு]

1916 இல், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்தில் முதுகலை முடித்தார். [1] அமெரிக்காவில் இருக்கும்போது, இவர் லாலா லஜ்பதி ராயின் நெருங்கிய கூட்டாளியானார். ராயின் சகாவாக, இவர் அமெரிக்காவில் பல அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றார். தன்னாட்சி இயக்கத்தின் செயலாளராக இருந்த இவர் அமெரிக்காவின் இந்திய தொழிலாளர் சங்கத்தை ஒழுங்கமைக்க உதவினார். அமைப்பின் அலுவலக பொறுப்பாளர்களாக இருந்த இவரும் , ராயும் அமெரிக்க செனட்டின் வெளியுறவுக் குழுவில் உரையாற்றினர். [3] அமெரிக்காவின் இந்துஸ்தான் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். [2] இவரது இந்தியா   - ஒரு கல்லறை என்ற துண்டுப்பிரசுரம் பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் விரிவாக விவாதிக்கப்பட்டது. வெளியுறவுக் குழுவில் மேரிலாந்தின் செனட்டர் பிரான்ஸ் கவனித்த 'யங் இந்தியா' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருந்த இவர், "இந்திய மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளை அமெரிக்க மக்களை அறிந்து கொள்வதில் ஒரு மதிப்புமிக்க சேவையை" வழங்கியுள்ளார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்[தொகு]

இவர் 1921 இல் இந்தியா திரும்பினார். [1] 1923 ஆம் ஆண்டின் கொடி சத்தியாக்கிரகத்தின் போது, இவரும் இவரது ஹூப்ளி சேவா தளத்தைச் செர்ந்தவர்களும் சிறை தண்டனைகளில் ஒரு பரிமாற்றத்தைப் பெற பிரிட்டிசு அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்க மறுத்ததைத் தொடர்ந்து தேசிய முக்கியத்துவம் பெற்றது. இந்த எதிர்ப்பானது, பிரிட்டிசு இராச்சியத்தை எதிர்த்துப் போராடுவதற்காக தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டுவருவதற்காக இது போன்ற ஒரு அமைப்பை அமைக்க காங்கிரசைத் தூண்டியது. 1923 ஆம் ஆண்டு காக்கிநாடா காங்கிரசு அமர்வின் போது, அத்தகைய அமைப்பை நிறுவுவதை கவனிக்க இவரின் கீழ் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்துஸ்தானி சேவா தளம் இவ்வாறு 1923 இல் உருவாக்கப்பட்டது. பின்னர் சேவா தளம் என மறுபெயரிடப்பட்டது. இவர் கர்நாடக பிரதேச காங்கிரசு அமைப்பின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 'வாலண்டியர்' என்ற பத்திரிகையை வெளியிட்டார்.

சேவா தளம்[தொகு]

1923 இல் காங்கிரசின் காக்கிநாடா கூட்டத்தைத் தொடர்ந்து சேவா தளம் 1923 இல் உருவாக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு இவரை ஆதரித்த போதிலும், அமைப்பு போன்ற ஒரு போராட்டக் குழுவை உருவாக்கும் யோசனை காங்கிரசுகாரரிடமிருந்து பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டது. அது கட்சிக்குள் பொதுமக்கள் அதிகாரம் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அஞ்சியது. மேலும், அது அகிம்சை கொள்கைக்கு முரணானது என்று வாதிடபட்டது. [1] உப்பு சத்தியாகிரகத்தில் சேவா தளம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. பொதுமக்கள் மறியல் மற்றும் புதிய உறுப்பினர்களை காங்கிரசு கட்சியில் சேர்ப்பதற்கும் வழிவகுத்தது. 1934 ஆம் ஆண்டில், இயக்கம் முடிவுக்கு வந்ததும், காலனித்துவ அதிகாரிகள் காங்கிரசு மற்றும் அதன் அமைப்புகளின் மீதான தடையை நீக்கியதும், அவர்கள் தொடர்ந்து சேவா தளத்திற்கு தடை விதித்ததில் இருந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் தளத்தின் முக்கியத்துவத்தை அறிய முடியும். [4] சேவ தளம் காங்கிரசின் மைய தன்னார்வ அமைப்பாக மாறியதுடன், தன்னார்வலர்களுக்கு உடல் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தியதுடன், வகுப்புவாத நட்பை வளர்ப்பதில் பணியாற்றியது.

சுதந்திரத்திற்குப் பிறகு[தொகு]

இவர், கட்டபிரபாவில் கர்நாடக சுகாதார நிறுவனத்தைக் உருவாக்க உதவினார். 1952 முதல் 1962 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினரக இருந்த இவருக்கு 1958 இல் பத்ம பூசண் கௌரவம் வழங்கப்பட்டது. [5] இவர், 26 ஆகத்து 1975 இல் இறந்தார். இவரது பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், இந்திய அஞ்சல் துறை 1989 ஆம் ஆண்டில் ஒரு நினைவு முத்திரையை வெளியிட்டது. [2]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Biography: N.S. Hardikar". Kamat Research Database. பார்க்கப்பட்ட நாள் 31 October 2012.
  2. 2.0 2.1 2.2 "Dr. N. S. Hardikar". Indian Post. பார்க்கப்பட்ட நாள் 31 October 2012.
  3. Puri, Harish K. "Lajpat Rai in USA 1914 -1919: Life and Work of a Political Exile" (PDF). பார்க்கப்பட்ட நாள் 31 October 2012.
  4. The Ascendancy of the Congress in Uttar Pradesh: Class, Community and Nation in Northern India, 1920–1940. Anthem Press. 
  5. .