உள்ளடக்கத்துக்குச் செல்

நாங்கூர் நாராயணபெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு நாராயணபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, நாங்கூர், சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:நாராயணபெருமாள்
தாயார்:புண்டரீகவல்லி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:4 மற்றும் 9, 11 கருட சேவை
வரலாறு
கட்டிய நாள்:ஆறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நாங்கூர் நாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், நாங்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் நாராயணபெருமாள், புண்டரீகவல்லி தாயார் சன்னதிகளும், கருடன், ஆழ்வார், ஆச்சாரியாள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் 4 மற்றும் 9 முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] 11 கருட சேவை திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் 9-ம் திருநாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.