நாகர் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 36°15′55″N 74°42′49″E / 36.2652548°N 74.7135025°E / 36.2652548; 74.7135025
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர் பள்ளத்தாக்கு
கன்சா பள்ளத்தாக்கிலிருந்து 7,788 மீ (25,551 அடி) உயரமான இராகபோசியின் காட்சி
நாகர் பள்ளத்தாக்கு is located in பாக்கித்தான்
நாகர் பள்ளத்தாக்கு
நாகர் பள்ளத்தாக்கு
பாக்கித்தானில் நகர் பள்ளத்தாக்கின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 36°15′55″N 74°42′49″E / 36.2652548°N 74.7135025°E / 36.2652548; 74.7135025[1]
நாடுபாக்கித்தான்
நிலப்பரப்புவடக்கு நிலங்கள்
மாவட்டம்நாகர் மாவட்டம்
Nagar States Logo
நாகர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சின்னம்

நாகர் பள்ளத்தாக்கு ( Nagar Valley ) [2] ஒரு காலத்தில் சமஸ்தானமாக இருந்தது. இப்போது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள பத்து மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த பள்ளத்தாக்கு கில்கிட் நகரத்திலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் போது, புகழ்பெற்ற காரகோரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.[3][4][5] இந்த பள்ளத்தாக்கில் இராகபோசி, திரன் சிகரம் (7265 மீ), தங்கச் சிகரம் மற்றும் ரஷ் சிகரம் உள்ளிட்ட பல உயரமான மலைச் சிகரங்கள் உள்ளன.

நாகர் பள்ளத்தாக்கு, நிர்வாக ரீதியாக நகர்-I மற்றும் நகர்-II என இரண்டு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[6] புருசாசுகி மற்றும் சினா மொழிகள் பள்ளத்தாக்கில் அதிகம் பேசப்படுகின்றன.[3]

இந்தப் பள்ளத்தாகிலுள்ள உலகின் 27 வது உயரமான ஏரியான ரஷ் ஏரி, பாக்கித்தானின் மிக உயரமான அல்பைன் ஏரி ஆகும.[7]

நிலவியல்[தொகு]

நாகர் பள்ளத்தாக்கின் நிலப்பரப்பு சிகரங்கள் மற்றும் மலைகளால் வகைப்படுத்தப்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக ஒரு மலைப்பகுதியாக உள்ளது. இருப்பினும், பள்ளத்தாக்கின் நிலப்பரப்பு அதன் அனைத்து பகுதிகளையும் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது. காரகோரம் மலைத்தொடர் இராகபோசி சிகரம் உட்பட முழுப் பகுதியையும் சூழ்ந்துள்ளது. நாகர் பள்ளத்தாக்கின் மொத்த பரப்பளவில், 90% கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்திலும், 30% கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டர் உயரத்திலும் உள்ளது.[8]

வரலாறு[தொகு]

நில்ட் கோட்டைகள், நாகர்

நாகர், 1,200 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திர மாநிலமாக இருந்தது. ஆங்கிலோ-புருஷோ போரின் போது ஆங்கிலேயர்கள் நாகரின் கட்டுப்பாட்டைப் பெற்றனர். இது உள்நாட்டில் ஜாங்கிர்-இ-லே என்று அழைக்கப்படுகிறது. ஜாங்கிர்-இ-லே நாகர் மாநில மக்களுக்கும் பிரித்தானியத் துருப்புக்களுக்கும் இடையே 1891 டிசம்பர் 1 முதல் 23 வரை நில்ட்டில் சண்டை நடந்தது. [9]

பிரித்தானியத் துருப்புக்கள் நில்ட் நல்லாவில் (ஜமிலா மோ ஹார் என்று அழைக்கப்படும்) அக்கால தாம் (தலைவர்) அசூர் கான் தலைமையில் நகர் மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.[10] நாகர் மக்கள் 20 நாட்களுக்கும் மேலாக துணிச்சலுடன் போராடிய போதிலும் ஆயுதங்கள் இல்லாததால் தோற்கடிக்கப்பட்டனர். 100 நாகர்கள் உயிர் இழந்தனர். மேலும், 127 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரிட்டன் தரப்பில், நான்கு பிரித்தானிய அதிகாரிகளும், 50க்கும் மேற்பட்ட டோக்ராக்களும் உயிரிழந்தனர்.[9] ஆங்கிலேயர்கள் நகரின் அந்தஸ்தை ஒரு மாநிலமாகத் தக்க வைத்துக் கொண்டனர்.[11] காஷ்மீர் மன்னனுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் 1948 இல் நிபந்தனையின்றி பாக்கித்தானுடன் இணைந்த பிறகும், நாகரின் அந்தஸ்து ஒரு மாநிலமாகத் தொடர்ந்தது.

1960 களில், மக்கள் தங்களை ஆட்சி செய்த சுல்தானின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட்டம் நடத்தத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டில், அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக கில்கிட் நோக்கி ஒரு அணிவகுப்பை ஏற்பாடு செய்தனர். அதே நேரத்தில் ஆட்சியாளர் மக்களுக்கு எதிராக காவலர்களை அனுப்பினார். சால்ட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். போராட்டத்தின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.[2] பின்னர், 25 செப்டம்பர் 1974 அன்று, பாக்கித்தான் பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ, நகர் மற்றும் உன்சா மாநிலங்களைக் கலைத்து, கைதிகளை விடுவித்து, தற்போது கில்கிட்-பால்டிஸ்தான் சட்டப் பேரவையாக இருக்கும் வடக்குப் பகுதிக்கு ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வழங்கினார்.[12]

சுற்றுலா அமசங்கள்[தொகு]

இராகபோசி, குல்மெட் நகர்
தங்கச் சிகரம், இசுபர் நகர்
நாகர் பள்ளத்தாக்கு
ரஷ் ஏரி, கோப்பர் பள்ளத்தாக்கு, நாகர்
பனி ஏரி, இசுபர், நாகர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nagar on map". கூகுள் நிலப்படங்கள். பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
  2. 2.0 2.1 Martin, Sokefeld (2005). "From Colonialism to Postcolonial Colonialism: Changing Modes of Domination in the Northern Areas of Pakistan". The Journal of Asian Studies 64 (4): 939–973. doi:10.1017/S0021911805002287. https://www.jstor.org/stable/25075905. 
  3. 3.0 3.1 "Nagar Valley". visitgilgitbaltistan.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
  4. "Dividing governance: Three new districts notified in G-B". The Express Tribune (in ஆங்கிலம்). 2015-07-25. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  5. "Nagar Valley, Gilgit Baltistan, Pakistan". myadventure.pk. பார்க்கப்பட்ட நாள் 7 November 2018.
  6. "Geography & Demography of Gilgit-Baltistan". Gilgit-Baltistan Scouts. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
  7. "27th highest peak".
  8. Spies, Michael (2019). Norther Pakistan: High Mountain Farming and Changing Socionatures. Lahore Pakistan: Vanguard books. பக். 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789694026091. 
  9. 9.0 9.1 Syed, Yahya. Broshaal Ke Qabail. Gilgit: North News Agency. 
  10. Zulfiqar Ali, Khan; Farman Karim, Baig. "128th Anniversary of the Anglo-Burusho War". PAMIR TIMES. https://pamirtimes.net/2019/12/02/128th-anniversary-of-the-anglo-burusho-war/. 
  11. Masud, Khan. "Anglo-Brusho War Of 1891". Daily Times. https://dailytimes.com.pk/476678/anglo-brusho-war-of-1891/. 
  12. Ahmad, Sajjad (2020-11-01). "HISTORY: THE GILGIT-BALTISTAN CONUNDRUM". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
  • Leitner, G. W. (1893): Dardistan in 1866, 1886 and 1893: Being An Account of the History, Religions, Customs, Legends, Fables and Songs of Gilgit, Chilas, Kandia (Gabrial) Yasin, Chitral, Hunza, Nagyr and other parts of the Hindukush, as also a supplement to the second edition of The Hunza and Nagyr Handbook. And An Epitome of Part III of the author’s "The Languages and Races of Dardistan". First Reprint 1978. Manjusri Publishing House, New Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்_பள்ளத்தாக்கு&oldid=3862455" இலிருந்து மீள்விக்கப்பட்டது