இராகபோசி
இராகபோசி | |
---|---|
![]() | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 7,788 m (25,551 அடி)[1] மிக உயர்ந்த மலைகளில் 27வது இடம் |
புடைப்பு | 2,818 m (9,245 அடி)[2] மிக உயர்ந்த மலைகளில் 122வது இடம் |
பட்டியல்கள் | மிக முக்கியமான சிகரம் |
ஆள்கூறு | 36°08′33″N 74°29′21″E / 36.14250°N 74.48917°E[2] |
புவியியல் | |
வடக்கு நிலங்களில் நகர் பள்ளத்தாக்கில் இராகபோசியின் அமைவிடம் | |
அமைவிடம் | நகர் பள்ளத்தாக்கு மற்றும் , பக்ரோட் பள்ளத்தாக்குகளின் இடையே அமைந்துளது |
மூலத் தொடர் | இராகபோசி, காரகோரம் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | மைக் பேங்க்ஸ் மற்றும் டாம் பாட், 1958 |
எளிய வழி | தென்மேற்கு மலைச்சிகரம்/பனிப்பாறை |
![]() |
இராகபோசி ( Rakaposhi )[3] துமானி எனவும் அறியப்படும் இது காரகோரம் மலைத்தொடரில் உள்ள ஒரு மலைச்சிகரமாகும். இது நகர் பள்ளத்தாக்கு மற்றும் பாக்கித்தானின் வடக்கு நிலங்களின் ஒரு பகுதியாக இருக்கும் பக்ரோட் பள்ளத்தாக்குக்கு நடுவில் அமைந்துள்ளது. மலையானது மிகவும் அகலமானது. மேலும், கிழக்கிலிருந்து மேற்காக ஏறக்குறைய 20 கிலோமீட்டர் அகலம் கொண்ட அதன் உச்சியிலிருந்து அதன் அடிவாரத்திற்கு கிட்டத்தட்ட 6,000 மீட்டர் தூரத்திற்கு நேரடியாகவும் எந்த இடையூறும் இல்லாமல் கீழே இறங்குகிறது.[3]
நிலவியல்
[தொகு]இராகபோசி என்பது கில்கிட்-பால்டிஸ்தான் பிரதேசத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடரில் கில்கிட் நகருக்கு வடக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவிலுள்ள ஒரு மலை.[1] இது உலகின் 27வது உயரமான மலையாகும். இராகபோசி நகர் பள்ளத்தாக்கின் மேல் எழும்பி நிற்கிறாது.
தென்மேற்கு மலைப் பாதை வழியாக ஐக்கிய இராச்சியத்தின் மைக் பேங்க்ஸ் மற்றும் டாம் பேட் ஆகிய மலையேற்ற உறுப்பினர்களால் 1958 இல் முதல் வெற்றிகரமான மலையேற்றம் பதிவுசெய்யப்பட்டது.
பூங்கா
[தொகு]இராகபோசி, துமானி ("மூடுபனியின் தாய்" அல்லது "மேகங்களின் தாய்") என்றும் அழைக்கப்படுகிறது.[4] நகர் மற்றும் பக்ரோட் பள்ளத்தாக்குகளில் வசிக்கும் மக்கள் இந்த மலைப் பகுதியை சமூகப் பூங்காவாக பராமரித்து வருகின்றனர். இந்த மலைச் சிகரம் மார்கோ போலோ செம்மறி ஆடுகள், பனிச்சிறுத்தை, பழுப்பு கரடி மற்றும் ஓநாய்கள் போன்ற அழிந்து வரும் உயிரினங்களின் தாயகமாகும்.[5]


மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Rakaposhi". Peakbagger.com.
- ↑ 2.0 2.1 "Karakoram ultras". peaklist.org. Retrieved 25 September 2011.
- ↑ 3.0 3.1 "Rakaposhi : Climbing, Hiking & Mountaineering : SummitPost". www.summitpost.org. Retrieved 2023-02-17.
- ↑ "Rakaposhi". PeakVisor (in ஆங்கிலம்). Retrieved 2023-02-17.
- ↑ "Hunza Adventure Tours". HunzaATP.
ஆதாரங்கள்
[தொகு]- Neate, Jill (1989). High Asia: An Illustrated History of the 7000 Metre Peaks. ISBN 0-89886-238-8.
- Fanshawe, Andy; Venables, Stephen (1995). Himalaya Alpine-Style. Hodder and Stoughton. ISBN 0-89886-456-9.
- Himalayan Index
- DEM files for the Himalaya/Karakoram (Corrected versions of SRTM data)
வெளி இணைப்புகள்
[தொகு]- Rakaposhi on Summitpost.org
- A list of mountains by local relief and steepness showing Rakaposhi as the world #3.
- Northern Pakistan- highly detailed place marks of towns, villages, peaks, glaciers, rivers and minor tributaries in Google Earth பரணிடப்பட்டது 2012-02-04 at the வந்தவழி இயந்திரம்
- A Quick approach through lovely meadows leads to the base camp of RAKAPOSHI