நவ்செரா மாவட்டம்
நவ்செரா மாவட்டம் ضلع نوشہرہ | |
---|---|
மாவட்டம் | |
மேல்:நவ்செரா நகரத்தின் பிரித்தானிய ஆட்சிக்கால கட்டிடம் கீழ்:தக் இஸ்மாயில் கேல் காட்சி | |
![]() பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் நவ்செரா மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | ![]() |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
கோட்டம் | பெசாவர் |
தலைமையிடம் | நவ்செரா |
ஒன்றியக் குழுக்கள் | 47 |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மாவட்டம் | 1,748 km2 (675 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மாவட்டம் | 1,520,995 |
• அடர்த்தி | 870/km2 (2,300/sq mi) |
• நகர்ப்புறம் | 339,535 |
• நாட்டுப்புறம் | 1,181,460 |
நேர வலயம் | பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5) |
தாலுகாக்கள் | 3 |
இணையதளம் | nowshera |
நவ்செரா மாவட்டம் (Nowshera District) (பஷ்தூ: نوښار ولسوالۍ, உருது: ضلع نوشہرہ),பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இது பெசாவர் கோட்டத்தில் உள்ளது.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் நவ்செரா நகரம் ஆகும். நவ்செரா நகரம், மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 1,748 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 608 பேர் வீதம் உள்ள்னர். இதன் வேளாண்மைப் பரப்பளவு 52,540 எக்டேர் ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 15,20,995 ஆகும். அதில் ஆண்கள் 783,035 மற்றும் பெண்கள் 737,834 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 58.21% ஆகும். 77.68% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 7,096 பேர் மட்டுமே உள்ளனர்.[1]இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழி 92.82%, பஞ்சாபி மொழி 2.04%, இண்டிக்கோ மொழி 3.06% மற்றும் பிற மொழிகள் 1.15% மக்களால் பேசப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம்[தொகு]
தாலுகாக்கள்[தொகு]
இம்மாவட்டம் 3 தாலுகாக்கள் கொண்டது.[3][4]அவைகள்:
- நவ்செரா தாலுகா
- ஜெகான்கீரா தாலுகா
- பாப்பி தாலுகா[5]
ஒன்றியக் குழுக்கள்[தொகு]
இம்மாவட்டம் 47 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள்[தொகு]
இம்மாவட்டம் கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 5 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 2 தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". Pakistan Bureau of Statistics. https://www.pbs.gov.pk/content/district-wise-results-tables-census-2017.
- ↑ "PDWP approves 32 projects" (in en-US). The Nation. http://nation.com.pk/06-May-2017/pdwp-approves-32-projects.
- ↑ "Pakistan Tehsil Wise Census 2017 [PDF"] இம் மூலத்தில் இருந்து 7 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107021641/http://www.pbscensus.gov.pk/sites/default/files/PAKISTAN%20TEHSIL%20WISE%20FOR%20WEB%20CENSUS_2017.pdf.
- ↑ "Division, District and Tehsil/Census District Khyber Pakhtoonkhwa Province (PDF)" இம் மூலத்தில் இருந்து 1 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201031007/http://www.pbscensus.gov.pk/sites/default/files/admin_districts/Admn_census_Unit/kpk.pdf.
- ↑ "Nowshera: Pabbi declared as tehsil" (in en-US). DAWN.COM. 2008-01-17. https://www.dawn.com/news/285149.