நவின் சந்திரா பாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவின் சந்திரா பாகு
Nabin Chandra Bag
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்பிரசந்தா மாச்சி
தொகுதிகந்தகோசு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வாழிடம்(s)கிழக்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம்
தொழில்அரசியல்வாதி

நவின் சந்திரா பாகு (Nabin Chandra Bag) இந்திய அரசியல்வாதியாவார். மேற்கு வங்காள அரசியலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். [1] [2] [3] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு கந்தககோசு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5] பொதுவுடைமைக் கட்சியை விட்டு விலகி 2015 ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார் [6] 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இவர் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [7] [8] [9] 2007 ஆம் ஆண்டில் பர்த்வான் பல்கலைக்கழகத்தின் கீழ் வங்காள மொழிப் பாடத்தில் நபின் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nabin Chandra Bag Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  2. "West Bengal Assembly Election Candidate Nabin Chandra Bag". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  3. "Khandaghosh, West Bengal Assembly election result 2021". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  4. "West Bengal Assembly Election Results in 2011". Khandaghosh. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  5. "2016 Winner Nabin Chandra Bag". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  6. "CPM legislator Nabin Chandra Bag shifts to Trinamool camp". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  7. "Khandaghosh Assembly Election Result 2021". ABP Live. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  8. "Nabin Chandra Bag is a TMC candidate from Khandaghosh constituency in the 2021 West Bengal Assembly elections". News18. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  9. "Nabin Chandra Bag - खंडघोष विधानसभा चुनाव 2021 परिणाम". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவின்_சந்திரா_பாகு&oldid=3840706" இலிருந்து மீள்விக்கப்பட்டது