உள்ளடக்கத்துக்குச் செல்

நம்ம ஊரு மாரியம்மா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்ம ஊரு மாரியம்மா
இயக்கம்கே. ராஜன்
தயாரிப்புகே. ஆர். பிரபு
கே. ஆர். கணேஷ்
கே. ஆர். சுரேஷ்
கதைகே. ராஜன்.
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
கலையகம்கணேஷ் சினி ஆர்ட்ஸ்
வெளியீடுபெப்ரவரி 14, 1991 (1991-02-14)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நம்ம ஊரு மாரியம்மா (Namma Ooru Mariamma) 1991 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை கே. ராஜன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நிழல்கள் ரவி மற்றும் வைதேகி ஆகிய இருவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சரத்குமார், ஜெய்கணேஷ் மற்றும் கே. ஆர். விஜயா உடன் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை சங்கர் கணேஷ் இது 14 பிப்ரவரி 1991இல் வெளிவந்துள்ளது..[1]

கதைச்சுருக்கம்

[தொகு]

மாரியம்மா (கே. ஆர். விஜயா) தனக்கு திருமணமாகி நீண்ட நாளாகியும் குழந்தையில்லாததால் கவலை கொள்கிறார். இதற்காக அவரது கணவன் மற்றும் அவரது சகோதரன் முத்துவும் (நிழல்கள் ரவி) சேர்ந்து ஊரிலுள்ள செல்வந்தன் ராஜதுரையின் (சரத்குமார்) உதவியுடன் ஊர் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ராஜதுரை ஊர் மக்களை ஏமாற்றி கோவில் சொத்துகளை கொள்ளையடித்து வருகிறான். இதற்கிடையே முத்து காவேரி மீது காதல் கொள்கிறான். திருவிழா முடிந்ததும் ராஜதுரையின் தவறுகள் அனைவருக்கும் தெரிய வருகிறது. இதை தட்டி கேட்ட முத்து ஊர்மக்கள் உதவியுடன் அவனை நீதியின் முன் நிற்க வைக்கிறான். நீதி கிடைக்குமென்று காத்திருக்கிறார்கள். இதனால் ராஜதுரையின் அடியாட்கள் மாரியம்மாவின் கணவனை கொலை செய்துவிடுகின்றனர். பின்னர் முத்துவிற்கும், காவேரிக்கும் திருமணம் நடைபெறுகிறது. ராஜதுரை இவர்களை பழி வாங்க நினைக்கிறான். இறுதியில் என்ன நடந்தது என்பதே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

[தொகு]

ஒலித்தொகுப்பு

[தொகு]
நம்ம ஊரு மாரியம்மா
soundtrack
வெளியீடு1991
ஒலிப்பதிவு1991
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்23:58
இசைத் தயாரிப்பாளர்சங்கர் கணேஷ்

இப்படத்திற்கு வாலி, மு. மேத்தா, உளுந்தூர்பேட்டை சண்முகம் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் ஐந்து பாடல்களை எழுத சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்துள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Namma Ooru Mariamma (1991) Tamilmovie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
  2. "MusicIndiaOnline — Namma Ooru Mariamma(1995) Soundtrack". mio.to. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.