நசீர் சபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நசீர் சபீர் (ஆங்கிலம் : Nazir Sabir ) உருது : نذیر صابر ) இவர் ஒரு பாக்கித்தானிய மலையேறுபவர் ஆவார். இவர் கன்சாவில் பிறந்தார். இவர் எவரெஸ்ட் சிகரத்தையும், ஐந்து எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகளில் நான்கினையும் ஏறியுள்ளார். 1981 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மலையான கே-2 கொடுமுடி, காசர்பிரம் II 8035 மீட்டர், [1] 1982 இல் பல்சான் காங்ரி 8050 மீட்டர், [2] மற்றும் 1992 இல் கசெர்பிரம் I ( மறைக்கப்பட்ட சிகரம் ) 8068 மீட்டர் உள்ளிட்ட பாக்கித்தானின் சிகரங்களிலும் மலையேறியுள்ளார். [3] 2000 மே 17 அன்று எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பாக்கித்தானியர் ஆவார் [4] அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டின் போஸ்கோஃப் தலைமையிலான மவுண்டன் மேட்னஸ் எவரெஸ்ட் பயணத்தில் ஒரு குழு உறுப்பினராகவும் இருந்தார். இதில் பிரபலமான எவரெஸ்ட் மலை ஏறும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேபலர் மற்றும் எட்டு கனடியர்களும் அடங்குவர்.

மலையேறும் தொழில்[தொகு]

1974 ஆம் ஆண்டில் கன்சாவில் 7284 மீட்டர் உயரம் கொண்ட பாசு சிகரத்திற்கு சப்பானிய பயணக்குழுவுடன் சபீர் தனது இமயமலை ஏறும் வாழ்க்கையைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டில் இவர் ஒரு பயிற்சியாளராக ஜெர்மன் பயணக்குழுவினரின் ஒரு பகுதியாக இருந்தார். இக்குழு நங்க பர்வதத்தை (8125 மீ) மலையேற முயற்சித்தது. ஆனால், தென்மேற்கு மலைப்பாதையில் 6700 மீட்டர் வரை மட்டுமே சென்றது. 1976 சூலை 17, அன்று இவர் 6660 மீட்டர் உயரம் கொண்ட வர்ஜின் பாயு சிகரத்தில் கர்னல் மன்சூர் உசேன் மற்றும் மேஜர் பசீர் ஆகியோருடன் பாகிஸ்தானின் 1276 இல் ஆல்பைன் ஜெலடோ ஏற்பாடு செய்த முதல் பாக்கித்தான் பயணக் குழுவினருடன் முதல் மலையேற்றம் செய்தார்.

1977 ஆம் ஆண்டில் சபீர் கே 2 க்கு மிகப்பெரிய ஜப்பான் / பாக்கிஸ்தான் கூட்டுக் குழுவினருடன் சேர்ந்தார். இக்குழு பாரம்பரிய தென்கிழக்கு அப்ரூஸி ரிட்ஜ் மலையேற முயற்சித்தது. போத்தல் பிராணவாயு கருவியைப் பயன்படுத்திய இது ஒரு பெரிய பயணம் ஆகும். இந்த குழுவில் 1500 சுமைதாங்கிகள் மற்றும் 52 குழு உறுப்பினர்கள் இருந்தனர். எனினும், 8280 மீட்டர் உய்ரத்தில் ஏற்பட்ட பனிப் புயல் காரணமாக நான்கு சப்பானியர்கள் உட்பட சபீரின் முதல் குழு பின்வாங்க வேண்டியிருந்தது. அதே அணி 8150 மீட்டர் தொலைவில் இருந்து மீண்டும் மற்றொரு முயற்சியை கைவிட வேண்டியிருந்தது. அடுத்த நாள் இரண்டு காணாமல் போன சக ஊழியர்களைத் தேடி இவர் கள் முகாம் 4 க்கு இறங்க வேண்டியிருந்தது. இருப்பினும் இவர் கள் அணியின் ஏழு உறுப்பினர்கள் K3 இன் சிகரத்திற்கு இரண்டாவது மலை ஏற்றம் செய்தனர். அதுவரை 1954 வெற்றிகரமான இத்தாலிய பயணக்குழுவின் இரண்டு மலையேறுபவர்கள் மட்டுமே கே 2 சிகரத்தில் ஏறினர்.

நங்கபர்வதத்துக்கான பயணம்[தொகு]

இவர் நங்க பர்வதத்தின் மீது மலையேற மூன்று முயற்சிகளை மேற்கொண்டார். டோக்கியோவின் எம். ஓமியா தலைமையிலான சங்காகு தோஷிகாய் சங்கம் டோக்கியோவைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து கே 2 இல் பெரிய வெற்றியைப் பெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1981 அக்டோபரில் அவரது முதல் முயர்சி இருந்த்து. இவர் கள் ஆல்பர்ட் ஃபிரடெரிக் மம்மரியின் முதல் வழியைப் பின்பற்றினர். மம்மெரியும் அவரது கூர்க்கா சகாக்களும் டயமீர் பனிப்பாறையில் மர்மமான முறையில் காணாமல் போய் பலியானவர்களில் முதன்மையானவர்கள். நங்கபர்வத்தில் இதுவரை ஒருபோதும் நடந்ததில்லை. அந்த இலையுதிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்ட பின்னர் டயமீர் பனிப்பாறை மற்றும் பனிச்சரிவுகளின் மீது ஏற்பட்ட கடுமையான பிளவுகள் காரணமாக நசீரும் சப்பானியர்களும் தங்கள் மலையேற்த்தை கைவிட்டனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

கன்சா மக்களுக்காக இவர் பல ஆண்டுகள் செய்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக , அக்டோபர் 1994 தேர்தலில் வடக்கு நிலங்கள் சட்டமன்ற மாகாண சபையின் பிரதிநிதியாக சபீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஐந்தாண்டு காலத்திற்கு அப்போதைய அரசாங்கத்திற்கு கல்வி மற்றும் சுற்றுலா ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1994 தேர்தலில் கன்சா தொகுதியில் பிரச்சாரம் செய்த இவர் , கன்சா குடும்பத்தின் பாரம்பரிய மிர் நகரிலிருந்து தனக்கு எதிராக போட்டியிட்டவரை தோற்கடித்தார்.

மரியாதைகள்[தொகு]

அவரது சிறந்த சாதனைகளுக்காக இவர் 1982 ஆம் ஆண்டில் பெருமை-செயல்திறனுக்கான மதிப்புமிக்க குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார். [5] மேலும் மலையேறுதல் விளையாட்டுகளில் சிறப்பான செயல்திறனுக்காக 2001 ஆம் ஆண்டில் தி சித்தாரா-இ-இம்தியாசாக (ஸ்டார் ஆஃப் எக்ஸலன்ஸ்) கௌரவிக்கப்பட்டார் .

1992 இல் ஆல்பைன் சங்கம் பின் (யுகே) கௌரவ உறுப்பினரான ஒரே பாகிஸ்தான் இவர்தான் [6], 2002 இல் போலிஷ் மலையேறுதல் கூட்டமைப்பு மற்றும் 2008 ல் அமெரிக்கன் ஆல்பைன் சங்கம் ஆகியவையும் இவரை உருப்பினராக்கியது. [7]

பாக்கித்தானின் ஆல்பைன் சங்கத்தின் உறுப்பினாராக அக்டோபர் 10, 2004 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது இவரின் சமீபத்திய உள்நாட்டு கௌரவங்களில் ஒன்றாகும். இதன்மூலம் இதற்கு தேர்வான முதல் குடிமகன் மற்றும் மலையேறுபவர் எனும் பெருமை பெற்றார். இதற்கு முன்பாக நான்கு இரானுவ தளபதிகள் இதன் உறுப்பினராகத் தேர்வாகினர்.

மீண்டும் 2007 இல் மற்றொரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] தற்போது இவர் பாக்கிஸ்தானின் ஆல்பைன் சங்கத்தின் தலைவராக உள்ளார், இது பாகிஸ்தானைச் சுற்றியுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக மலை ஏறுதலுக்கும் பயிற்சியளித்து அவர்களை தயார் செய்கின்றனர்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Reinhold Messner#Ascent of Gasherbrum ii|"Rinehold Messner at Gasherbrum II"
  2. Reinhold Messner#Ascent of Broad Peak|"Rinehold Messner at Broad Peak"
  3. "The American Alpine Journal |year=1993 Page 252"
  4. Pakistan's Hunza and Balti climbers
  5. "Pakistan Sports Board". Archived from the original on 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  6. "Honorary Members". Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  7. "Honorary Members". Archived from the original on 2019-08-26. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  8. EverestNews, "NAZIR SABIR RE-ELECTED AS PRESIDENT ALPINE CLUB OF PAKISTAN"

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீர்_சபீர்&oldid=3559881" இலிருந்து மீள்விக்கப்பட்டது