உள்ளடக்கத்துக்குச் செல்

த. ந. சீதாராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. ந. சீதாராம்
2005இல் வெளியான பேரு என்ற திரைப்படத்தில் சீதாராம்
பிறப்பு6 திசம்பர் 1948 (1948-12-06) (அகவை 75)
தலகவாரா, சிந்தாமணி வட்டம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் மைசூர் மாநிலம், (தற்போதைய கருநாடகம்)
பணிஇயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர்
பெற்றோர்நாரயண ராவ்
சுந்தரம்மாள்
வாழ்க்கைத்
துணை
கீதா
பிள்ளைகள்சத்யஜித், அஸ்வினி

தலகவாரா நாராயணராவ் சீதாராம் ( Thalagavara Narayanarao Seetharam ) (பிறப்பு 6 டிசம்பர் 1948)[1] கன்னடத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர் இயக்குநரும், நடிகரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் பல கலை ஊடகங்களில் தனது பணியின் மூலம் கர்நாடகாவில் ஒரு கலாச்சார அடையாளமாக மாறியுள்ளார். சீதாராம் நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் சிறந்த தரமதிப்பீடு பெற்ற தொலைக்காட்சித் தொடர்களை எழுதி, இயக்கி, தயாரித்து மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சீதாராம் 1948 டிசம்பர் 6 அன்று முந்தைய மைசூர் மாநிலத்தில் தொட்டபல்லாபூர் நகருக்கு அருகிலுள்ள தலகவாரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தனது பெற்றோர்களான நாராயணராவ் மற்றும் சுந்தரம்மாவுக்கு மூன்றாவது குழந்தையாவார். தொட்டபல்லாபூர் நகராட்சி பள்ளியில் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும், பெங்களூர் தேசிய கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பையும் முடித்தார். பின்னர் இளங்கலைச் சட்டப் பட்டம் பெறுவதற்கு முன்பு இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்றார். இந்தகாலகட்டத்தில் நாடகங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். அந்த நேரத்தில் நாடக ஆசிரியர் பி. இலங்கேசுடன் சேர்ந்து பணிபுரிந்தார். சீதாராம் தனது கல்வியை முடித்த பிறகு, நாடகங்களில் பங்கேற்பதற்காக பெங்களூரில் தங்க முடிவு செய்தார். தனது கிராமத்திற்குத் திரும்பி விவசாயத்திலும் வழக்கறிஞராகவும் பணியாற்ற வேண்டும் என்ற தனது தந்தையின் கோரிக்கையை இவர் நிராகரித்தார்.

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]

இலங்கேசு மற்றும் உ. இரா. அனந்தமூர்த்தி ஆகியோரால் ஈர்க்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டில், வீக் எண்ட் வித் ரமேஷ் என்ற பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ​​சீதாராம் தனது பல நாடகங்கள் தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தியதாகவும், தனது தொலைக்காட்சித் தொடர்கள் பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதாகவும், முக்கியமாக தனது இறந்த சகோதரி பத்மாவால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறினார்.

தூர்தர்ஷனுக்காக தொலைக்காட்சித் தொடர்களை இயக்கத் தொடங்கியபோது இவர் கவனிக்கப்பட்டார். மாயாம்ருகா என்ற தினசரி கன்னடத் தொடரை இயக்கியபோது இவருக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தது.[3] பின்னர் தொலைக்காட்சியில் பரவலாகப் பார்க்கப்பட்ட முதல் தொடரான காமனபில்லு என்றத் தொடரை இயக்கினார்.

மன்வந்தரா மற்றும் முக்தா போன்ற கன்னடத் தொடர்களின் மூலம் ஈ. டி. வி கன்னடத்துடனான இவருக்கு தொடர்பு ஏற்பட்டது . இவர் தனது பெரும்பாலான தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ஒடுக்கப்பட்டவர்களை மீட்க வரும் ஒரு வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறார்.

திரைப்படங்கள்

[தொகு]
மாயாம்ருகா என்ற தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பின் போது பி. சேசாத்திரி, கே. எஸ். நரசிம்மசுவாமி மற்றும் சீதாராம்,

நாடக ஆசிரியரும் திரைப்பட இயக்குநருமான பி. இலங்கேசின் கூட்டாளியாக சீதாராம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இலங்கேசின் இயக்கத்தில் 1976இல் வெளியாகி தேசிய விருது பெற்ற பல்லவி படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிரபல இயக்குநர் புட்டண்ணா கனகலுடனும் தொடர்புடைய இவர், அவரது திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதியிருந்தார். சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றினார்.

சீதாராம் சம்வாதா என்ற கருத்தை உருவாக்கினார். அதில் இவர் கர்நாடகா முழுவதும் தனது பார்வையாளர்களுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்தார். இவை மிகவும் பிரபலமடைந்ததால், ஈ.டி.வி கன்னடமும் இந்த உரையாடல்களை ஒளிபரப்பியது.

2006 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் நடுவர் குழுவின் தலைவராக இருந்தார். தற்போது நியூஸ்ஃபர்ஸ்ட் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியான 'நானு முக்யமந்திரி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

விருதுகள்

[தொகு]
  • 1989-90-சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது-பஞ்சமா வேதா (1990)
  • 2000-சிறந்த கன்னட திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது-மததானா
  • 2005-கர்நாடக மாநில அரசின் 'ஆரியபட்டா விருதுகள்': முக்தா என்ற தொலைக்காட்சி தொடரை இயக்கியதற்காக 'சிறந்த இயக்குநர்' விருது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Seetharam, T. N. (24 September 2014). Weekend With Ramesh - Episode 10 - August 31, 2014. India: Zee Kannada.
  2. About Matadaana - the film
  3. Deccan Herald Interview: Serial King Seetharam
  4. "A class apart". டெக்கன் ஹெரால்டு. 22 July 2012. http://www.deccanherald.com/content/266056/a-class-apart.html. பார்த்த நாள்: 17 February 2016. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ந._சீதாராம்&oldid=4026948" இலிருந்து மீள்விக்கப்பட்டது