தொல்லியல் அருங்காட்சியகம், சந்திரகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொல்லியல் அருங்காட்சியகம், சந்திரகிரி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவக் கோயில் நகரமான திருப்பதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. திருப்பதிக்கு 14 கிலோமீட்டர் தெற்கில் சந்திரகிரி உள்ளது. [1]சந்திரகிரி மத்திய காலப் பகுதியில் சிறப்புப் பெற்ற ஒரு இடமாகத் திகழ்ந்தது. இங்கே இந்துக் கடவுளரான இராசராசேசுவரி, வேணுகோபாலன், கார்த்திகேயன், சிவன், அனுமன் முதலியோருக்கான கோயில்கள் உள்ளன. இவற்றுடன் குளங்கள், கேணிகள், மண்டபங்கள் முதலியனவும் மலை அடிவாரத்தில் உறுதியாகக் கட்டப்பட்ட அரண்களும் காணப்படுகின்றன.

1988-89 காலப்பகுதியில் சந்திரகிரி கோட்டைக்குள் இருக்கும் இராசமகாலில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் கல், உலோகம் முதலியவற்றால் செய்யப்பட்ட பல சிற்பங்களும் பிற அரும்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டத்திலுள்ள குடிமல்லம், கடப்பா மாவட்டத்தின் கண்டிக்கோட்டா, குர்நூல் மாவட்டத்தின் யகந்தி ஆகிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைச் சேர்ந்த பொருட்களும் இங்கே உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Museum, Chandragiri