தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி (Television special show) என்பது பண்டிகை நாட்களில் அல்லது ஒரு குறிப்பிட்ட நேர இடத்திற்கு திட்டமிடப்பட்ட ஒரு அத்தியாயத்தில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.

தமிழ்த் தொலைக்காட்சியில் பெரும்பாலான சிறப்பு நிகழ்ச்சிகள் பொங்கல்[1], தீபாவளி[2], தமிழ்ப் புத்தாண்டு, காந்தி ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டு, நத்தார் போன்ற பண்டிகை நாட்களில் தான் ஒளிபரப்படுகின்றது. இந்த நாட்களில் சிறப்பு பட்டிமன்றம், புதிய திரைப்படம், நடிகர்ளுடன் கலந்துரையாடல், புதிய திரைப்படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் விருது விழா போன்றவை சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பு செய்து வருகின்றது. இவ்வாறான சிறப்பு நிகழ்ச்சிகள் இலக்கு அளவீட்டு புள்ளிகளை பெறுவதில் பெரிய கவனம் செலுத்தி வருகின்றது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் ஒரு மணி நேர சிறப்பு தொடர்கள் ஒளிபரப்பு செய்து வருகிறது.[3]

விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் வார நாட்களில் சின்னத்திரை நட்சத்திரங்களின் சிறப்பு விளையாட்டு போட்டி நிகழ்ச்சி அல்லது ஒளிபரப்பாகும் தொடரின் வெற்றி விழா போன்றவை ஒளிபரப்பு செய்வது உண்டு. உதாரணமாக: நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் 500வது வெற்றி கொண்டாட்டம்.[4]

மேற்கோள்கள்[தொகு]