தொரட் கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயங்கு சொடுக்கு எடுத்துக்காட்டுகள்

தொரட் கூட்டறிகுறி (Tourette syndrome) சிறுவயதில் இருந்து தோன்றும் ஒரு பாரம்பரிய நரம்புளவியப் பிறழ்வு ஆகும். சொடுக்குகள் எனப்படும் அனிச்சையான திடீர்த் தசைத்துடிப்புகள் அல்லது அசைவுகள் மற்றும் திடீரென்று தம்மை அறியாமல் சொல் ஒன்றைக் கூறல் எனபன இந்த நரம்பியல் மற்றும் உளவியல் சார்ந்த கூட்டறிகுறியின் சிறப்பம்சமாகும். இந்தச்சொடுக்குகள் திடீரென்று தோன்றி மறையும் தன்மை கொண்டன.

தொரட் கூட்டறிகுறி ஒரு அரிதான மற்றும் வினோதமான கூட்டறிகுறியாகும். இதில் வரக்கூடிய இயங்கு சொடுக்கில், பாதிக்கப்பட்டவர் தனது உடலின் ஏதேனும் ஒரு பாகத்தைத் தம்மை அறியாமல் அசைப்பார். எடுத்துக்காட்டாக, கையை நெஞ்சில் அடித்தல், முகத்தைச் சுளித்தல் போன்றன. பேச்சுச் சொடுக்கில் திடீரென்று ஏதேனும் வார்த்தைகளை தம்மை அறியாமல் கூறுவர், குறிப்பாக அவை சமூகத்துக்கு ஒவ்வாத கெட்ட வார்த்தைகளாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொரட்_கூட்டறிகுறி&oldid=1829250" இருந்து மீள்விக்கப்பட்டது