சாமுவேல் ஜோன்சன்
சாமுவேல் ஜோன்சன் Samuel Johnson | |
---|---|
சாமுவேல் ஜோன்சன் 1772, ஓவியம்: சர் யோசுவா ரைனால்ட்சு | |
பிறப்பு | லிக்ஃபீல்டு, இசுட்டாபோர்டுசயர், இங்கிலாந்து | 18 செப்டம்பர் 1709
இறப்பு | 13 திசம்பர் 1784 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 75)
படித்த கல்வி நிறுவனங்கள் | பெம்புரோக் கல்லூரி, ஆக்சுபோர்டு (பட்டமில்லை) |
பணி | கட்டுரையாளர், அகராதியியலாளர், கவிஞர் |
வாழ்க்கைத் துணை | எலிசபெத் (1689–1752) |
சாமுவேல் ஜோன்சன் (Samuel Johnson, 18 செப்டம்பர் [யூ.நா. 7 செப்டம்பர்] 1709 – 13 திசம்பர் 1784) என்பவர் ஆங்கிலேய இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய ஆங்கிலேயக் கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், இலக்கியத் திறனாய்வாளரும், வாழ்க்கை வரலாற்றாளரும், இதழாசிரியரும், அகராதியியலாளரும் ஆவார்.[1][2] இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.
இங்கிலாந்தின் லிக்ஃபீல்டு என்ற இடத்தில் பிறந்த ஜோன்சன் ஆக்சுபோர்டு பெம்புரோக் கல்லூரியில் கல்வி பயின்றார். ஆனாலும், பண உதவி கிடைக்காமையால், ஓராண்டில் படிப்பை இடைநிறுத்தி, பாடசாலை ஆசிரியராக இலண்டனில் பணியாற்றினார். அங்கு அவர் Gentleman's Magazine என்ற இதழை வெளியிட்டார். 1755 ஆம் ஆண்டில் ஜோன்சனின் ஆங்கில அகராதியை வெளியிட்டார்.[3] இவ்வகராதி பெரும் வரவேற்பைப் பெற்றது. 150 ஆண்டுகளின் பின்னர் "ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி" வெளிவரும் வரை, ஜான்சனின் அகராதியே பிரித்தானியாவில் முதன்மை அகராதியாக விளங்கி வந்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rogers, Pat (2006), "Johnson, Samuel (1709–1784)", Oxford Dictionary of National Biography (online ed.), Oxford University Press, பார்க்கப்பட்ட நாள் 25-08-2008
{{citation}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Bate 1977, ப. xix
- ↑ Bate 1977, ப. 240
- ↑ Lynch 2003, ப. 1